dinamalar telegram
Advertisement

காரைக்காலில் போலி மதுபான ஆலை

Share
காரைக்கால் -காரைக்காலில் இயங்கிவந்த போலி மதுபான தயாரிப்பு ஆலையை போலீசார் கண்டுபிடித்து, ரூ.60 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.காரைக்கால், பச்சூர் கிராமம் தில்லை நகரில் போலி மதுபான ஆலை இயங்குவதாக, சிறப்பு அதிரடிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.எஸ்.பி., வீரவல்லபன் தலைமையில், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் உள்ளிட்ட போலீசார் மற்றும் கலால் துறை அதிகாரிகள், நேற்று அப்பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.போலி மது தயாரிப்பு ஆலையை கண்டுபிடித்தனர். குடோனில் போலி மதுபானங்கள், எரி சாராயம், ஸ்டிக்கர்கள், மது தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் உள்ளிட்டவை பதுக்கி வைக்கப் பட்டிருந்தன.மதுபானம் கடத்திச்செல்ல, போலியான வாகன நம்பர் பிளேட்டுகள் வைத்திருப்பதை கண்டு பிடித்தனர்.பச்சூரில் தயாரிக்கும் போலி மதுபானங்களை, அம்பாள்சமுத்திரம் பகுதியில் உள்ள குடோனில் இருப்பு வைத்து, சப்ளை செய்து வருவது தெரிய வந்தது . பச்சூர், அம்பாள்சமுத்திரம் ஆகிய இரு இடங்களில் மினி வேன் உட்பட, போலி மது தயாரிப்புக்கான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும்.நகர போலீசார் வழக்கு பதிந்தனர். நெடுங்காடு பகுதியை சேர்ந்த நிர்மல் நடராஜன்,40, உள்ளிட்ட மூவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement