dinamalar telegram
Advertisement

அயோத்தி - -ராமேஸ்வரம் விமான சேவை: உ.பி., அமைச்சர் தகவல்

Share
ராமேஸ்வரம்:மத்திய அரசிடம் ஆலோசித்து அயோத்தி- ராமேஸ்வரம் இடையே விமான போக்குவரத்து துவக்கப்படும் என உ.பி., விமான போக்குவரத்து துறை அமைச்சர் நந்த கோபால் குப்தா தெரிவித்தார்.

ராமேஸ்வரம் வந்த நந்தகோபால் குப்தாவை, பா.ஜ., ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி பொதுசெயலர் அரவிந்தன், கோவில் ஊழியர்கள் ராமநாதசுவாமி கோவிலுக்கு அழைத்து சென்றனர். சுவாமி, அம்மனை தரிசனம் செய்த அமைச்சருக்கு பிரசாதம் வழங்கினர்.

நந்தகோபால் கூறியதாவது: உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வரானதும் ரவுடியிசம், கட்ட பஞ்சாயத்துக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். உ.பி., மாநிலம் வளர்ச்சி பாதையில் செல்வதால், மக்களும் பொருளாதார ரீதியாக மேம்பட்டு உள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானம் முடிந்ததும், மத்திய அரசுடன் ஆலோசித்து ராமாயண வரலாற்றில் தொடர்புடைய அயோத்தி, ராமேஸ்வரம் இடையே விமான போக்குவரத்து துவக்கப்படும். அடுத்தாண்டு உ.பி.,யில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் பா.ஜ., 300 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement