dinamalar telegram
Advertisement

பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள் கவலை

Share
ராமநாதபுரம் : ராமநாதபுரம் பகுதியில் பருத்தி பஞ்சுக்கு நல்ல விலை கிடைத்தும், எதிர்பார்த்த விளைச்சல் இல்லாததால் இவ்வாண்டு விவசாயிகளுக்கு ரூ.பல ஆயிரம் இழப்பு ஏற்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 30 ஆயிரம் ஏக்கரில் பருத்தி சாகுபடி நடக்கிறது. குறிப்பாக சத்திரக்குடி, பரமக்குடி, உத்தரகோசமங்கை, பாண்டியூர், கமுதி, முதுகுளத்துார் ஆகிய பகுதிகளில் அதிகஅளவில் பருத்தி சாகுபடி செய்கின்றனர்.இவ்வாண்டு ஜனவரியில் தொடர் மழை காரணமாக பருத்தி நீரில் மூழ்கி விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் ஊரடங்கு காரணமாக வியாபாரிகளும் வரவில்லை. தற்போது பருத்தி வரத்து குறைந்து ராமநாதபுரம் சந்தையில் பருத்தி பஞ்சு விலை உயர்ந்துள்ளது. கடந்த 2 வாரங்களுக்குமுன்பு ஒரு கிலோ ரூ.45 முதல் ரூ.50 வரை விற்றது.

தற்போது ரூ.55 முதல் ரூ.60 வரை விலைபோகிறது. இனிவரும் நாட்களில் மேலும் உயர வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம் வியாபாரிகள் கூறுகையில், 'இங்கு விற்கப்படும் பஞ்சு மொத்த வியாபாரிகள் மூலம் கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், தேனி, ராஜபாளையம் ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இவ்வாண்டு மழையால் பருத்தி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.இரண்டாவது முறையாக சாகுபடி செய்த விவசாயிகள் பஞ்சு கொண்டு வருகின்றனர். நல்ல விலை கிடைத்தும் விளைச்சல் இல்லாததால் விவசாயிகளுக்கு இவ்வாண்டு பருத்தி சாகுபடியில் எதிர்பார்த்த லாபமில்லை,'என்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement