dinamalar telegram
Advertisement

தாயை குத்தி கொலை செய்த மனநலம் பாதித்த 2 மகள்கள்

Share
திருநெல்வேலி:தாயை குத்திக் கொன்ற மனநலம் பாதித்த மகள்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி பாளை கே.டி.சி., நகரைச் சேர்ந்தவர் உஷா, 50; கார் கம்பெனி முன்னாள் ஊழியர். இவரது கணவர் கோயில்பிச்சை; ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்தனர். கோயில்பிச்சை முன்னீர்பள்ளத்தில் தனியே வசிக்கிறார். தம்பதிக்கு நீனா, 21; ரீனா, 19, என இரு மகள்கள். நீனா, இன்ஜினியரிங் முடித்துள்ளார். ரீனா, இன்ஜினியரிங் படித்து வருகிறார்.சில மாதங்களுக்கு முன் இருவரும் மனநலம் பாதிக்கப்பட்டனர்.தாய் உஷா, அவர்களுக்கு துாத்துக்குடி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையளித்து பராமரித்து வந்தார்.

நேற்று பகலில், உஷாவுடன் மகள்கள் தகராறில் ஈடுபடும் சத்தம் கேட்டது. பக்கத்து வீட்டுக் காரர்கள் எட்டிப் பார்த்தபோது வீட்டில் உஷா இறந்து கிடந்தார்.பக்கத்திலேயே மகள்கள் இருவரும் பேசியபடி, பொம்மைகள் வைத்து விளையாடிக் கொண்டு இருந்தனர்.தாலுகா போலீசார் விசாரித்தனர். உஷா கத்தியால் குத்தியும், இரும்பு கம்பியால் தாக்கியும் கொலை செய்யப்பட்டுள்ளார்.மகள்கள் இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர்களை மதுரை அரசு மருத்துவமனை மனநல மையத்திற்கு அழைத்து சென்றனர்.கோயில்பிச்சைக்கு தகவல் தெரிவித்தும், அவர் வர மறுத்துவிட்டார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement