dinamalar telegram
Advertisement

அ.தி.மு.க., அழிவை சந்திக்கும் ஜான்பாண்டியன் ஆவேசம்

Share
திருநெல்வேலி:அ.தி.மு.க.,வால் திட்டமிட்டு தோற்கடிக்கப்பட்டேன். இரட்டை தலைமை தொடருமானால் அ.தி.மு.க.,அழிவை சந்திக்கும் என த.ம.மு.க.,தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்தார்.தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நேற்று தலைவர் ஜான்பாண்டியன் தலைமையில் திருநெல்வேலியில் நடந்தது. தி.மு.க.,அரசுக்கு பாராட்டு தெரிவிப்பது, மத்திய அமைச்சர் எல்.முருகனுக்கு பாராட்டு தெரிவிப்பது, மேகதாது அணைக்கட்ட எதிர்ப்பு தெரிவித்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சட்டசபை தேர்தலில் போட்டியிட தென்மாவட்டங்களில் ஒரு தொகுதி கேட்டேன். பழனிசாமி, பன்னீர்செல்வமும் எனக்கு துரோகம் செய்தனர். நானும், என் சமுதாயமும் வளரக்கூடாது என்ற நோக்கில் எழும்பூர் தொகுதியை தந்து திட்டமிட்டு தோற்கடித்தனர். தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை தந்த பா.ஜ.,விற்காக அந்த அணியில் நீடித்தேன். எங்கள் ஓட்டு மட்டும் வேண்டும். நாங்கள் வெற்றிபெறக்கூடாது என்ற மனநிலையில் இருந்தனர். அ.தி.மு.க.,வுடன் உறவு உள்ளது. ஆனால் கூட்டணியில் இல்லை. பா.ஜ.,உடன் கூட்டணியில் தொடர்கிறோம். இதே இரட்டை தலைமை நீடித்தால் அ.தி.மு.க., அழிவை சந்திக்கும், என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement