40 சுவையில் டீ, காபி:
தொழிலாளர்கள் முதல் தொழில் அதிபர் வரை, அனைத்து தரப்பினரையும் கவர்ந்தது, டீ. வழக்கமான டீ, காபி அலுப்பை தரும் என்பதால், பல்வேறு சுவைகளில், டீ, காபியை வழங்கி வருகிறது, திருவள்ளூரில் ஒரு கடை. இங்கு, 40 சுவைகளில், டீ, காபி அருந்தலாம். பிஸ்கட் கப், மண் குவளையிலும் பருகலாம். சென்னை - திருவள்ளூர் - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது, ஆதித்யா என்ற டீக்கடை. டீ வகைகளில், வழமையான இஞ்சி, மசாலா டீ மட்டுமின்றி, பாதம், பிஸ்தா, மசாலா, லெமன், கிரீன், ஆவாரம்பூ, கொய்யா இலை என, வகை, வகையான சுவைகளில் கிடைக்கிறது. காபி வகையில், பாரம்பரியமிக்க சுக்கு காபி, கருப்பட்டி காபி, தென்னஞ் சர்க்கரை துவங்கி, பல வகைகளில் தருகின்றனர். அதே போல, பால் வகையில், பனங் கற்கண்டு, வெள்ளை மிளகு இணைந்த காபி, நரம்பு பிரச்னை சம்பந்தபட்டவர்களுக்கு, கசகசா பால், சூடு தணிக்கும் குல்கந்து பால் என, பல சுவைகளில் பருகலாம். இவற்றைத் தவிர, தமிழகத்தின் பிரசித்தி பெற்ற, பாரம்பரிய இனிப்பு வகைகளான, கோவில்பட்டி கடலை மிட்டாய், ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவா, மஸ்கோத் அல்வா, மிளகுசேவு வகைகளும், விஜயவாடா பூத்தரேகுலு எனப்படும், அரிசி மாவு பிஸ்கட் என, பிரத்யேக இனிப்பு வகைகளையும் இங்கு வரவழைத்து விற்பனை செய்கின்றனர்.
தவிர, இயற்கை முறையில் உற்பத்தி செய்யப்பட்ட, அரிசி, சிறுதானியம், பிரண்டை, முடக்கத்தான், வல்லாரை, முருங்கை உள்ளிட்ட பாரம்பரியமிக்க, மூலிகைகளை பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகளும், இங்கு கிடைக்கும். மாவட்டத்திலேயே இதுபோன்ற புதுமையான டீக்கடை திருவள்ளூரில் மட்டுமே உள்ளதாக, இதன் நிறுவனர் ஜெகதீஷ் தெரிவித்தார். உள்ளூர் பகுதி மக்கள் மட்டுமின்றி, நெடுஞ்சாலையில் பயணிப்போரும் இதன் வாடிக்கையாளர்களாக உள்ளனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!