dinamalar telegram
Advertisement

கலெக்டர் அலுவலகத்தில் முதல்வர் படம் அகற்றம்

Share
சென்னை : தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, முதல்வர் படங்கள், நேற்று மாலை அகற்றப்பட்டன.

தமிழகத்தில், சட்டசபை தேர்தல், ஏப்., 6ல் நடக்க உள்ளதாக, தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து, பிராட்வேயில் உள்ள, சென்னை கலெக்டர் அலுவலகத்தில், துறை அலுவலகங்களில் இருந்த, தமிழக முதல்வர் இ.பி.எஸ்., மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் படங்கள், நேற்று மாலையே அகற்றப்பட்டன.இந்நிலையில், தேர்தலையொட்டி அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமலிருக்கவும், கட்டுப்பாடுகளை மீறுபவர்களை கண்காணிக்கவும், எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில், நேற்று ரயில்வே பாதுகாப்புப்படையினர் மற்றும் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

தெற்கு ரயில்வே பாதுகாப்புப்படை கமிஷனர் சாட்டர்ஜி, சென்ட்ரல் போலீஸ் டி.எஸ்.பி., முருகன், இன்ஸ்பெக்டர் சசிகலா, ரயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் சிவநேசன் தலைமையில், நான்கு பிரிவாக அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவ்வப்போது, திடீர் சோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement