dinamalar telegram
Advertisement

64,000 நோயாளிகளுக்கு அவசர சிகிச்சை: ஸ்டான்லி சாதனை

Share
ராயபுரம் : கொரோனா காலத்தில், அவசர சிகிச்சை துறையில், 63 ஆயிரத்து, 646 நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து, ஸ்டான்லி மருத்துவமனை சாதனை படைத்துள்ளது.

இது குறித்து, மருத்துவமனை முதல்வர் பாலாஜி வெளியிட்ட அறிக்கை:ஸ்டான்லி மருத்துவமனையின், அவசர சிகிச்சை துறை விரிவுப்படுத்தப்பட்டு, நவீன இருபெரும் குளிரூட்டப்பட்ட வார்டுகளாக மாற்றப்பட்டன. இதில், 70 படுக்கைகள் உள்ளன.கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோதும், கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளில், கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் எந்த தொய்வும் ஏற்படவில்லை.கடந்த ஆண்டு பிப்., முதல், 2021, ஜன., வரையிலான காலகட்டத்தில், 63 ஆயிரத்து, 646 பேர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளனர்.

தலைக்காயம் ஏற்பட்ட, 673 பேர், நரம்பியல் அறுவை சிகிச்சை பிரிவில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்றனர். விபத்தில் முறிவு ஏற்பட்ட, 623 பேரும், அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, எலும்பு முறிவு சரி செய்யப்பட்டது. காயங்களுக்கு, 3,030 அறுவை சிகிச்சைகள், குறிப்பிட்ட காலத்திற்குள் செய்யப்பட்டன. ஒட்டுறுப்பு சிகிச்சை பிரிவின் கீழ் இயங்கும், கைக்காய தனிப்பிரிவில், 1,113 முக்கிய அறுவை சிகிச்சை உட்பட, 2,991 பேருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன.

ரத்தநாள அறுவை சிகிச்சை பிரிவில், 86; பக்கவாத பிரிவில், 1,145; இருதய பிரிவில், 925 பேருக்கு, நுண் ஆய்வத்தின் மூலம், 291 நோயாளிகளுக்கு, இதய ரத்தநாள அடைப்பை சரி செய்யும் அவசர சிகிச்சை செய்யப்பட்டன. நச்சு நீக்கியல் பிரிவில், 2,247 விஷ முறிவு சிகிச்சைகள், 198 பாம்பு கடி, 67 தேள்கடி நோயாளிகளுக்கு மருத்துவம் செய்யப்பட்டுள்ளது.இந்த சிகிச்சைகள் அனைத்தும், 'கோல்டன் ஹவர்' எனும், குறுகிய கால அளவில், மிக குறைந்த பாதிப்பு முழுமையான பயன் நோக்கோடு செய்து முடிக்கப்பட்டது.இவ்வாறு, அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement