dinamalar telegram
Advertisement

போலீசாருக்கு பாராட்டு

Share
சென்னை : சினிமா புகைப்பட கலைஞர் மற்றும் ஆடிட்டர் ஆகியோரை கடத்தியவர்கள் மற்றும் கஞ்சா கடத்தலில் ஈடுபட்டோரை கைது செய்த போலீசாரை பாராட்டி, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வெகுமதி அளித்தார்.


சென்னை, சாலிகிராமம், வேலாயுதம் காலனியைச் சேர்ந்தவர் நியூட்டன். இவரது நண்பர் ஆடிட்டர் ரகுஜி. இவர்களை, மர்ம நபர்கள், 30 லட்சம் ரூபாய் கேட்டு காரில் கடத்தினர். கடத்தல்காரர்கள் ஆறு பேரை, அசோக்நகர் உதவி கமிஷனர் பிராங்க் டி ரூபன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.அதேபோல, மதுரவாயலில், கார் மற்றும் இருசக்கர வாகனத்தில், 18 கிலோ கஞ்சா கடத்திய, தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயசூர்யா, 24, ஸ்ரீநாத், 21, உள்ளிட்ட எட்டு பேரை, பூந்தமல்லி உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.போலீசாரை, வேப்பேரியில் உள்ள தன் அலுவலகத்திற்கு வரவழைத்து, கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டி, நேற்று வெகுமதி அளித்தார்.-
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement