dinamalar telegram
Advertisement

விஷ வாயு தாக்கி 5 பேர் மயக்கம்

Share
சென்னை : சென்னை, புனித ஜார்ஜ் கோட்டையில், ராணுவ குடியிருப்பு வளாகம் உள்ளது. அதன் பின்புறம் உள்ள, கழிவு நீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணியில், அன்னை சத்யா நகரைச் சேர்ந்த சந்தோஷ், 30, ராஜா, 40, வெங்கடேஷ், 29, மணிவண்ணன், 29, பன்னீர் செல்வம், 25, ஆகியோர், நேற்று மதியம், ஈடுபட்டனர்.அப்போது, அதிலிருந்து வெளியான விஷவாயு தாக்கி, ஐந்து பேரும் மயக்கம் அடைந்தனர்.

தகவல் அறிந்து, அங்கு வந்த தீயணைப்புத் துறை வீரர்கள், மயங்கிய நிலையில் இருந்த ஐந்து பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், சந்தோஷ், ராஜா ஆகிய இருவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மற்ற மூவருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இது தொடர்பாக, கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement