ரூ.19 லட்சம் தங்கம்
சென்னை : ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரிலிருந்து, 'இண்டிகோ ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று அதிகாலை, 3:15 மணிக்கு, சென்னை வந்தது.
அந்த விமானத்தில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த முகமது நாசிப், 21, என்பவரை, சந்தேகத்தின் அடிப்படையில், சுங்கத்துறையினர் சோதனையிட்டனர். அதில், அவரது உடைமைகளுக்குள் இருந்த, ஆவிபிடிக்கும் இயந்திரத்தின் உள்ளே இருந்து, 19 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 400 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.முகமது நாசிப்பை கைது செய்து, சுங்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!