dinamalar telegram
Advertisement

216 பயனாளிகளுக்கு தாலிக்கு தங்கம்

Share
சென்னை : தாலிக்கு தங்கம் திட்டத்தில், பள்ளி படிப்பு முடித்த பெண்களுக்கு, 8 கிராம் தங்கம், 25 ஆயிரம் ரூபாய்; பட்டம் பட்டயப் படிப்பு முடித்தோருக்கு, 8 கிராம் தங்கம், 50 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

அதன்படி, சென்னை மாவட்டம் சார்பில், சாலிகிராமத்தில் நேற்று மதியம் நிகழ்ச்சி நடந்தது. இதில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் பங்கேற்று, 246 பயனாளிகளுக்கு, 1,728 கிலோ கிராம் எடையுள்ள, 77 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, தாலிக்கு தங்கம் வழங்கினார்.அதேபோல், 84.50 லட்சம் ரூபாய் திருமண நிதியுதவி என, மொத்தம், 1.61 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில், கலெக்டர் சீதாலட்சுமி, சமூக நலத்துறை அதிகாரி உட்பட பலர் பங்கேற்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement