நாகப்பட்டினம்:நாகையில், ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அ.தி.மு.க.,மாவட்ட அலுவலக வளாகத்தில் எம்.ஜி.ஆர்.,மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் வெண்கல சிலைகள் திறக்கப்பட்டன.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. நாகையில் அ.தி.மு.க.,மாவட்ட அலுவலக வளாகத்தில், எம்.ஜி.,ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு சிலைகள் நிறுவப்பட்டன. 7 அடி உயர பீடத்தில், 9 அடி உயரத்தில் எம்.ஜி.ஆருக்கு,ஜெயலலிதா செங்கோல் கொடுத்த நிகழ்வை நினைவு கூரும் வகையில் சிலைகள் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இச்சிலைகள் நேற்று திறக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் பவுன்ராஜ், ராதாகிருஷ்ணன், நகர செயலாளர் தங்க கதிரவன் மற்றும் திரளான தொண்டர்கள் மறைந்த முதல்வர்களின் சிலைக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!