dinamalar telegram
Advertisement

நிதி தராத எழுத்தர் மீது காம்ரேட்கள் தாக்குதல்

Share
நாகப்பட்டினம்:
நாகை அருகே கட்சி நிதி தராத, நேரடி நெல் கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தரை தாக்கிய மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது, வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நாகை அருகே செம்பியன்மகாதேவி, மார்க்சிஸ்ட் கட்சி கிளை செயலர் ஞானசேகரன், நிர்வாகிகள் நான்கு பேருடன், அங்குள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு நேற்று சென்றுள்ளார். பட்டியல் எழுத்தர் செல்லையா, பணியில் இருந்தார். அவரிடம் கட்சி நிதிக்காக, 5,000 ரூபாய் கேட்டுள்ளார். எழுத்தர் மற்றும் மற்ற பணியாளர்கள் பணம் தர மறுத்ததால், இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த ஞானசேகரன், செல்லையாவை தாக்கி, பொருட்கள் மற்றும் கோப்புகளை சேதப்படுத்தியுள்ளார். கொள்முதல் நிலைய பணியாளர்களும், பதிலுக்கு கட்சியினரை தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த செல்லையா, ஞானசேகரன் ஆகிய இருவரும் நாகை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு தரப்பும் அளித்த புகாரின்படி, வேளாங்கண்ணி போலீசார், வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement