dinamalar telegram
Advertisement

அலுவலகத்தில் புகுந்து தாக்குதல் பஞ்., தலைவர், துணை தலைவர் புகார்

Share
நாகப்பட்டினம்:நாகை அருகே ஆளுங்கட்சியை சேர்ந்த பஞ்., தலைவரும், துணை தலைவரும் தங்களை மர்ம நபர்கள் அலுவலகத்தில் புகுந்து தாக்கியதுடன், ஜாதி பாகுபாடு பார்த்து, செயல்பட விடாமல் தடுத்து வருகின்றனர் என கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

நாகை மாவட்டம் தன்னிலப்பாடியைச் சேர்ந்தவர் செல்வேந்திரன்,41. கடந்த உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் பஞ்., தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அ.தி.மு.க.,வை சேர்ந்த வீரமணி,39 என்ற பெண், பஞ்., துணை தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்டார். இருவரும், நாகை கலெக்டர் அலுவலகத்தில் அளித்த புகார் மனு:

நாங்கள் இருவரும் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். வேறு ஜாதியை சேர்ந்த தி.மு.க., கட்சி 3வது வார்டு கவுன்சிலர் ராஜிவ்காந்தி என்பவர் ஜாதி ரீதியாக எங்களை செயல்பட விடாமல் தடுப்பதோடு, அலுவலகத்தில் தலைவர் இருக்கையில் அமரக்கூடாது என்று மிரட்டி வருகிறார்.

கடந்த 3ம் தேதி பஞ்., அலுவலகத்தில் இருந்த போது மர்ம நபர்கள் கொடூர ஆயுதங்களால் தாக்கினர். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்ததால் தப்பிச் சென்றனர். காயமடைந்த நாங்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றோம். எங்களுக்கும், எங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement