dinamalar telegram
Advertisement

பலியான கொள்ளையன் உடல் ஒப்படைப்பு

Share
மயிலாடுதுறை:மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியைச் சேர்ந்தவர் தன்ராஜ் சவுத்ரி, 50; நகை மற்றும் அடகு கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆஷா, 45. மகன் அகில், 24 மருமகள் நிகில், 21, ஆகியோர் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த, 27ம் தேதி அதிகாலை, தன்ராஜ் வீட்டிற்குள் புகுந்த ராஜஸ்தானைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஆஷா, அகில் ஆகியோரின் கழுத்தை அறுத்து கொலை செய்தனர்.

தன்ராஜ் மற்றும் நிகிலை தாக்கி, 12.5 கிலோ நகைகளை கொள்ளையடித்து, தப்பினர்.எருகூர் வீரனார் மேட்டுத் தெரு சவுக்குத் தோப்பில் மறைந்திருந்த கொள்ளையர்கள் மஹிபால் சிங், மணிஷ், ரமேஷ் பாட்டீல் ஆகியோரை போலீசார் சுற்றி வளைத்தனர்.

மஹிபால் சிங், தப்ப முயன்ற போது, என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். மஹிபால் சிங் உடல், அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள், விமானம் மூலம் ராஜஸ்தான் கொண்டு சென்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement