dinamalar telegram
Advertisement

சீர்காழியில் போலீசார் முன்னிலையில் தற்கொலைக்கு முயன்ற மூ.மு.க., தலைவர்

Share
மயிலாடுதுறை: சீர்காழியில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி காவல் நிலையம் எதிரில், கடந்த 26ம் தேதி, மூ.மு.க., தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் சாகும்வரை தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினார். அக்கட்சி நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர். அனைவரையும் போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இரவு, 10.30 மணியளவில், அவர்களை விடுதலை செய்தனர். வெளியேற மறுத்த, ஸ்ரீதர் வாண்டையார் இரவிலும் போராட்டத்தை தொடர்ந்தார். ஆர்.டி.ஓ., மகாராணி, டி.எஸ்.பி., யுவபிரியா பேச்சுவார்த்தை நடத்தியும் உண்ணாவிரதத்தை கைவிடவில்லை. கள்ளர், அகமுடையார், மறவர் ஆகியோரை தேவர் இனம் என அறிவித்து தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும், மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பெயரை சூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை, தமிழக அரசு உடனே நிறைவேற்றினால் போராட்டத்தை கைவிடுவதாக தெரிவித்தார். போலீசார், போராட்டத்தை கலைக்கும் நோக்கில், ஸ்ரீதர் வாண்டையாருக்கு மருத்துவப் பரிசோதனை செய்து, ரத்த அழுத்தம் உயர்வாக உள்ளதால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறியதால், இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஸ்ரீதர் வாண்டையார், திருமண மண்டபத்தில், தனது கட்சி துண்டை பயன்படுத்தினா தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், போராட்டத்தை சிதம்பரத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு தொடரப்போவதாக கூறி, மண்டபத்திலிருந்து வெளியேறினார். அனுமதி இன்றி சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியதாக, ஸ்ரீதர் வாண்டையார் உள்ளிட்டனா 75 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement