dinamalar telegram
Advertisement

கடம்பூர் மலையில் பரிதாபம்: யானை தாக்கி விவசாயி சாவு

Share
சத்தியமங்கலம்: கடம்பூர் மலையில், மரவள்ளி பயிருக்கு காவலிருந்த விவசாயி, யானை தாக்கியதில் இறந்தார். தப்பி ஓடிய ஒருவர் காயமடைந்தார்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலை, அத்தியூர் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 50; தனக்கு சொந்தமான நிலத்தில் மரவள்ளி பயிரிட்டுள்ளார். வனப்பகுதியை ஒட்டி நிலம் இருப்பதால், யானைகள் பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இதனால் பெரியசாமி, அவரது உறவினரான சடையப்பன், நேற்று முன்தினம் வழக்கம்போல், மரவள்ளி பயிருக்கு காவல் இருக்க சென்றனர். நேற்று அதிகாலை, ஒற்றை யானை புகுந்து, மரவள்ளி பயிரை சேதப்படுத்தியது. இருவரும் யானையை விரட்டினர். இதனால் ஆக்ரோஷடமடைந்த யானை, இருவரையும் துரத்தியது. இருவரும் ஆளுக்கொரு பக்கம் ஓடினர். ஆனாலும், பெரியசாமியை தும்பிக்கையால் பிடித்து கீழே போட்டு மிதித்ததில், ரத்த வெள்ளத்தில் மயங்கினார். அதேசமயம் சடையப்பன், கீழே விழுந்ததில் காலில் காயமடைந்தார். சிறிது நேரத்தில் யானை வனப்பகுதிக்குள் சென்றது. அக்கம்பக்க விவசாயிகள், இருவரையும் மீட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், வழியிலேயே பெரியசாமி இறந்தார். சடையப்பன் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதிவாசிகள் மத்தியில், பீதியை ஏற்படுத்தியுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement