dinamalar telegram
Advertisement

மில் அதிபர் வீட்டில் 45 பவுன், பணம் திருட்டு

Share
ஈரோடு: ஈரோட்டில் மில் அதிபர் வீட்டில், 45 பவுன் நகை, 95 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது. ஈரோடு, சூளை, காவேரி நகர், ஏழாவது வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார், 49; வீரப்பன்சத்திரத்தில் அம்மன் பிராசசிங் மில் நடத்தி வருகிறார். மனைவி சிவகாமி; ஒரு மகன், மகள் உள்ளனர். ஏழு மாதத்துக்கு முன் வீடு கட்டி குடும்பத்துடன், இங்கு குடிவந்தனர். பொங்கல் பண்டிகை கொண்டாட கடந்த, 13ல் எழுமாத்தூரில் உள்ள பண்ணை வீட்டுக்கு, குடும்பத்துடன் செந்தில்குமார் சென்றார். நேற்று காலை, குடும்பத்துடன் வீடு திரும்பினார். வீட்டுக்குள் பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோ உடைக்கப்பட்டிருக்க, அதில் வைக்கப்பட்டிருந்த, 45 பவுன் நகை, 95 ஆயிரம் ரொக்கம், திருட்டு போனது தெரிய வந்தது. வீட்டின் பின்புற காலியிடம் வழியே நுழைந்து, இரும்பு கேட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்தது தெரிய வந்தது. எஸ்.பி., தங்கதுரை மற்றும் வீரப்பன்சத்திரம் போலீசார், கொள்ளை நடந்த வீட்டை ஆய்வு செய்தனர். அப்பகுதியில் உள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளின் அடிப்படையில், போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement