ராணுவத்துக்கு ஆள் சேர்ப்பு; கோவையில் நாளை துவக்கம்
ஈரோடு: இந்திய ராணுவத்துக்கு, ஆள் சேர்ப்பு முகாம், கோவையில் நாளை துவங்குகிறது. கோவையில் கடந்தாண்டு மே, 5 முதல், 17 வரை நடப்பதாக இருந்த முகாம் கொரோனா பாதிப்பால் தள்ளிவைக்கப்பட்டது. நாளை முதல், 30 வரை, கோவை பாரதியார் பல்கலை விளையாட்டு மைதானத்தில் நடக்க உள்ளது. இதில் சோல்ஜர் டெக்னிக்கல், சோல்ஜர் நர்சிங் அசிஸ்டென்ட், நர்சிங் அசிஸ்டென்ட் வெட்னரி, சோல்ஜர் கிளர்க் அன்ட் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், சோல்ஜர் ஜெனரல் டூட்டி, சோல்ஜர் டிரேட்ஸ்மேன் போன்ற பிரிவுகளுக்கு ஆள் சேர்ப்பு நடக்கிறது. ஏற்கனவே விண்ணப்பித்திருந்தவர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில், அட்மிட் கார்டை பதிவிறக்கம் செய்து, முகாமில் பங்கேற்கலாம். கூடுதல் விபரத்துக்கு, கோவை, ராணுவ ஆட்சேர்ப்பு முகாம் அலுவலகம், 0422 2222022 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!