எடை மேடைக்கு வரும் லாரிகளால் விபத்து அச்சம்
ஈரோடு: வாகன எடை நிலையங்களில், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு, சரக்கு ரயிலில் வரும் விளைபொருள், கால்நடை தீவனம், சிமென்ட் உள்ளிட்ட பொருட்களை, நூற்றுக்கணக்கான லாரிகளில் ஏற்றி, குறிப்பிட்ட இடங்களுக்கு கொண்டு செல்கின்றனர். இந்த லாரிகளை, எடை மையத்தில் எடை பார்த்து, சான்று பெற்று எடுத்து செல்ல வேண்டும். ஒரே நேரத்தில், 50க்கும் மேற்பட்ட லாரிகள் லோடை ஏற்றி, ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகே உள்ள எடை மேடை, மூலப்பாளையம் எடை மேடை, சென்னிமலை சாலை எடை மேடை என பல்வேறு இடங்களில் எடை போட்டு செல்கின்றனர். இந்த லாரிகள், சாலையை அடைத்து வரிசையாக நிறுத்துவதும், குறுக்கும், நெடுக்குமாக திருப்புவதும் வாடிக்கையாகிறது. எடை மேடை நடத்துவோரும், லாரி வந்து செல்லும் பகுதியில் செக்யூரிட்டிகளை நிறுத்தி, வாகன விபத்து ஏற்படாமல் தடுக்கவும் முயல்வதில்லை. இப்பிரச்னை குறித்து பல்வேறு தரப்பினர் போலீசாருக்கு புகார் தெரிவித்தும், நடவடிக்கை இல்லை. லாரிகள் வந்து செல்லும் நேரத்தில், போலீசார் கவனித்து, பிரச்னைக்கு தீர்வு காண, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
கருத்தைப் பதிவு செய்ய
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!