dinamalar telegram
Advertisement

காவிரி ஆற்றை ஆக்கிரமிக்கும் ஆகாயத்தாமரை

Share
ஈரோடு: ஈரோடு காவிரி ஆற்றில், பாலம், மின் கதவணை திட்டப்பணி பாலம் போன்ற இடங்களில், அதிக அளவில் ஆகாயத்தாமரை ஆக்கிரமித்துள்ளதால், தண்ணீர் துர்நாற்றம் வீசுகிறது.
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில், பாசனத்துக்கு நீர் நிறுத்தப்பட்டு, குடிநீருக்காக, 500 கன அடி நீர் மட்டும் வெளியேற்றப்படுகிறது. இதனால், காவிரி ஆற்றின் தடுப்பணைகளில் நீர் தேக்கி வைக்கப்பட்டு திறக்கப்படுகிறது. ஈரோடு வெண்டிபாளையம், பாசூர் உள்ளிட்ட மின் கதவணை தடுப்பணையில் நீர் தடுத்து நிறுத்தி அனுப்பப்படுகிறது. இதனால், வழி நெடுகிலும் காவிரி ஆற்றில், கருங்கல்பாளையம் - பள்ளி பாளையம் காவிரி ஆற்று பாலத்தின் கீழும், வெண்டிப்பாளையம் மற்றும் பாசூர் மின் கதவணை தடுப்பணை போன்ற இடங்களில், 500 மீட்டர் வரை ஆகாயத்தாமரை வளர்ந்து, பிளாஸ்டிக் பாட்டில், குப்பை, மீன் கழிவு போன்ற வற்றை தடுத்து, துர்நாற்றம் வீசுகிறது. பொதுப்பணித்துறையினர், ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், என கரையோர பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (1)

  • Balan -

    ஆகாயதாமரையை அகற்றிவிட்டால் சாயத்தண்ணீர் கலப்பது தெரிந்துவிடுமே...

Advertisement