dinamalar telegram
Advertisement

பஸ்சில் மொபைல் திருடியவர் கைது

Share
ஈரோடு: ஓடும் பஸ்சில், மொபைல்போன் திருடியவர் சிக்கினார். ஈரோடு, கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் திருமலைசாமி, 52, கூலி தொழிலாளி. நண்பருடன் ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து, அரசு டவுன் பஸ்சில் சென்றார். அப்போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த போனை, அருகில் நின்ற ஒரு பயணி, திருடிக்கொண்டு தப்பி ஓடினார். திருமலைசாமி சக பயணிகள் உதவியுடன் வாலிபரை பிடித்து, டவுன் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், ஈரோடு, வெண்டிபாளையம், மோளகவுண்டம்பாளையம், பாலதண்டாயுதம் வீதியை சேர்ந்த, அய்யாவு மகன் முத்துகுமார், 23, என்பது தெரிந்தது. மொபைல்போனை பறிமுதல் செய்து, வாலிபரை கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement