dinamalar telegram
Advertisement

குன்னூரில் பிளாஸ்டிக் மறுசுழற்சி: எண்ணெய் தயாரிக்கும் ஆலை அமைக்க திட்டம்

Share
குன்னுார்:குன்னுாரில், பிளாஸ்டிக் மறுசுழற்சியின் அடுத்த முயற்சியாக, எரிபொருள் எண்ணெய் தயாரிக்கும் ஆலை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.குன்னுார் ஓட்டுப்பட்டறை அருகே, நகராட்சி குப்பை குழியில், நகராட்சி நிர்வாகம்; 'கிளீன் குன்னுார்' தன்னார்வ அமைப்பு வாயிலாக, கழிவு மேலாண்மை பூங்கா அமைக்கப்பட்டது. மட்கும், மட்கா குப்பைகள் பிரிக்கப்பட்டு, 'பேலிங்' இயந்திரம் மூலம் 'பிளாஸ்டிக் பேக்கேஜ்' செய்து, பர்னஸ் ஆயில் தயாரிக்க, அனுப்பப்படுகிறது. இந்த பணிகள், நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது. தற்போது, அடுத்த கட்ட புதிய முயற்சி குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.'கிளீன் குன்னுார்' தலைவர் சமந்தா கூறுகையில்,''இங்கு, 8 லட்சத்து 70 ஆயிரத்து 603 கிலோ, மட்கா திடக்கழிவுகள் கொண்டுவரப்பட்டதில், மாசுகட்டுப்பாடு வாரிய விதிமுறைப்படி, மாற்றங்கள் செய்யப்பட்டன. அதில், பிளாஸ்டிக், பேப்பர் உள்ளிட்ட, 3 லட்சத்து 23 ஆயிரத்து, 518 கிலோ, மறு சுழற்சி செய்யப்பட்டது. ஒரு லட்சத்து, 32 ஆயிரத்து 474 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் இருந்தன.தொடர்ந்து, மாவட்ட நிர்வாகம்; நகராட்சியின் ஒப்புதலுடன், 'கிளீன் குன்னுார் அமைப்பு' மூலம், எரிபொருள் எண்ணெய் தயாரிக்கும் ஆலை இங்கு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இதன் மூலம் நீலகிரி மாவட்டத்தில் தினமும் சேகரமாகும், 5 டன் பிளாஸ்டிக் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement