Advertisement

பிரிந்தோம்...! சந்தித்தோம்...!!

"மாணவ பருவம்' வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம். சக மாணவர்களுடன் தோளோடு தோள் கொடுத்து பழகி... நட்புக்கு இலக்கணம் கண்ட நாட்களை மறக்க முடியுமா. சிறு வயதில் பள்ளியில் உடன் படித்த மாணவனை பல ஆண்டுகள் கழித்து சந்திக்கும்போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அண்ணாமலை பல்கலையில் (1979-81) எம்.காம்., படித்த முன்னாள் மாணவர்கள் ஆண்டு தோறும் குடும்பத்துடன் சந்தித்து குதூகலித்து வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அற்புதமான சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்த முன்னாள் மாணவர்களான மதுரை போலீஸ் டி.எஸ்.பி., பால்ரெங்கன், பிள்ளைமார் சங்கப் பள்ளி ஆசிரியர் சேகர் கூறியதாவது: 33 ஆண்டுகளுக்கு முன் அண்ணாமலை பல்கலையில் எம்.காம்., படித்த நாங்கள் 30 பேர் 15வது ஆண்டாக மதுரையில் குடும்பத்துடன் சந்தித்து மனம் விட்டு பழகியது மகிழ்வை தந்துள்ளது. கஷ்டப்படும் சக மாணவர்களின் குடும்பத்தினருக்கு உதவுவது உள்ளிட்ட பல பணிகளை மேற்கொள்வதில் ஆத்ம திருப்தி ஏற்படுகிறது, என்றனர். முன்னாள் மாணவர்களுடன் மனம் விட்டு பேச... 94878 97964 க்கு அழைக்கலாம்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement