dinamalar telegram
Advertisement

தே.மு.தி.க.,வை பழிவாங்க சிவராஜ் அதிரடி திட்டம்

Share
ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் தன்னை தோற்கடித்த தே.மு.தி.க.,வை கதிகலங்க வைக்க, சமீபத்தில் ஆளும் கட்சிக்கு மாறிய சிவராஜ் அதிரடி திட்டம் வகுத்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டசபை தொகுதியில் காங்., சார்பில் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் சிவராஜ். அதற்கு முன் அவரது சித்தப்பா சுந்தரம் முதலியார் இரு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளார்.
இதற்கிடையில் ஒருமுறை அ.தி.மு.க.,வும், ஒருமுறை தி.மு.க.,வும் இத்தொகுதியை தக்கவைத்துக் கொண்டுள்ளது. கடந்த தேர்தலில் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்துடன் போட்டியிட்டு சிவராஜ் தோல்வியை தழுவினார்.
எனினும், தனது சித்தப்பா காலத்தில் இருந்து தொகுதியில் வலம் வந்ததால் தி.மு.க., அ.தி.மு.க., விற்கு இணையாக தனக்கென தனிச்செல்வாக்கை இத்தொகுதியில் சிவராஜ் பெற்றிருந்தார்.
தமிழகத்தில் காங்., நிலை தலைகீழாக மாறியதால் அதிலிருந்து வெளியேறிய சிவராஜ், முதல்வர் ஜெ., முன்னிலையில் அ.தி.மு.க.,வில் இணைந்தார். சிவராஜ் வருகையால், அ.தி.மு.க., தொண்டர்கள் உற்சாகமடைந்த போதிலும், நிர்வாகிகள கலக்கமடைந்துள்ளனர். இதற்கு காரணம், சிவராஜிற்கும் தொழில் ரீதியாக தமிழக முதல்வருடன் உள்ள நெருக்கத்தால், அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்குவார் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாத சிவராஜ், கடந்த தேர்தலில் ரிஷிவந்தியத்தை 'குஷி வந்திய மாக்குவேன்' எனக் கூறி தன்னை தோற்கடித்த தே.மு.தி.க.,விற்கு உரிய பாடம் புகட்ட ஆயத்தமாகி வருகிறார். லோக்பசா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் தே.மு.தி.க., போட்டியிட்டால் மிகப் பெரிய அடி கொடுப்பதற்காக, ரிஷிவந்தியம் மட்டுமல்லாது சங்கராபுரம், கள்ளக்குறிச்சி சட்டசபை தொகுதிகளில் உள்ள தனது பழைய ஆதரவாளர்களை தான் சார்ந்துள்ள ஆளும் கட்சிக்கு மாற்றி வருகிறார்.
இந்த தேர்தலில் தே.மு.தி.க., வை வீழ்த்தி, முதல்வர் ஜெ.,வின் ஆசையை நிறைவேற்றினால், சிவராஜிற்கு அ.தி.மு.க.,வின் முக்கிய பதவி கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

-நமது சிறப்பு நிருபர்-
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Advertisement