Advertisement

மோடியின் சேவை இப்போது தேவை: எஸ்.ஏ.சுந்தரமூர்த்தி, வழக்கறிஞர்

அரையிறுதி ஆட்டம் முடிந்து விட்டது. இனி, மே 2014ல், லோக்சபா தேர்தல் என்னும் இறுதி ஆட்டம், துவங்க உள்ளது. நான்கு மாநில தேர்தல் முடிவுகளை கண்ட காங்கிரஸ் கட்சியின், அஸ்திவாரம், இப்போதே ஆடத் துவங்கிவிட்டது.தன் மகனுக்கு, காங்கிரஸ் இளைய தளபதியாக மகுடம் சூட்டி மகிழ்ந்த சோனியா, ராஜஸ்தானில் இப்படி படுதோல்வி கிடைக்கும் என்று எண்ணிப் பார்த்திருக்க மாட்டார்.

உயர்ந்து வரும் பணவீக்கம், நாள்தோறும் புற்றீசல் போல் தோன்றும் ஊழல்கள் - ஆதர்ஸ் குடியிருப்பு ஊழல், '2ஜி' ஊழல், காமன்வெல்த் விளையாட்டு ஊழல், நிலக்கரி சுரங்க ஊழல், ஹெலிகாப்டர் ஊழல், மருமகனின் ஊழல் என்று, ஊழலில், புது உலக சாதனையை புரிந்து விட்டது, சோனியா வழியில் செல்லும் மன்மோகன் அரசு. கடந்த, 10 ஆண்டு கால ஆட்சியில், ஊழலை தவிர, வேறு எதையும் மக்கள் கண்டதில்லை.ஒரு வேளை, நான்கு மாநில தேர்தல் முடிந்த பின், பா.ஜ., கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவித்து இருந்தால், பா.ஜ.,வுக்கு இவ்வளவு பெரிய வெற்றி கிடைத்து இருக்குமா என்று சொல்ல முடியாது. காரணம், காங்கிரசின் எதிர்ப்பு அலை என்பது, பா.ஜ.,வுக்கு ஆதரவு அலையாக மாறவில்லை. மாறாக, நரேந்திர மோடியின் ஆதரவு அலையாக மட்டுமே மாறியுள்ளது. இது, பா.ஜ., தலைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டது. இதை, பா.ஜ., கட்சி, சரியாக வழி நடத்தி சென்றால், வரும் லோக்சபா தேர்தலில், கட்டாயம், பா.ஜ.,விற்கு தனிப்பெரும்பான்மை பெறும் வாய்ப்பு உள்ளது.

கடந்த, 1975ல் இந்திரா நெருக்கடி பிரகடனம் செய்தபோது, அவருடன் இருந்து, ஆட்சி சுகத்தை அனுபவித்து விட்டு, 1977ல், தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், இந்திராவை, அம்போ என, விட்டு விட்டு ஜனதா கட்சியில், பல காங்கிரஸ் தலைவர்கள் இணைந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள், ஜெகஜீவன்ராம், எச்.என்.பகுகுணா போன்ற தலைவர்கள். அதுபோல, காங்கிரஸ் தற்போது ராகுல் தலைமையை ஏற்க விரும்பாத பல தலைவர்கள், பா.ஜ., கட்சியில் இணைய வருவர்.இவர்களை, பா.ஜ., கட்சியில் சேர்த்து கொள்ள கூடாது. காரணம், நரேந்திர மோடியின் தலைமையில் அமைய போகும் ஊழலற்ற ஆட்சிக்கு, இவர்கள் பெரும் தடை கற்களாக இருப்பர்.

அது போல, நான்கு மாநில தேர்தல் வெற்றியால், பாஜ., கட்சியுடன் இணைய பல, மாநில கட்சிகள் மதில் மேல் பூனை போல் காத்துக் கிடக்கின்றன.'மணிமேகலையின் அட்சய பாத்திரத்தால், காய சண்டிகையின் பசி தீர்ந்தது. ஆனால், ஊழல் என்னும் அட்சய பாத்திரத்தை தூக்கி நிற்கும் மணிமேகலையுடன் கூட்டு வைத்துள்ள கருணாநிதியின் ஆட்சி அதிகார பசி தீரவில்லை. அடுத்து எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால், எந்த பதவி கிடைக்கும் என்று, விஞ்ஞான ரீதியாக, அரசியல் விவசாயம் செய்ய, கருணாநிதி காயை நகர்த்த ஆரம்பித்து விட்டார். அவர் வலையில், பா.ஜ., கட்சி வீழ்ந்து விட கூடாது.மத்தியில் யார் ஆண்டாலும், அமைச்சரவையில் மட்டும் இடம் பெறும் கட்சி ஒன்று இந்தியாவில் உள்ளது என்றால், அது, தி.மு.க., தான். 1977ல், ஜெயின் கமிஷன் அறிக்கை வெளியானவுடன், குஜ்ரால் அமைச்சரவையில் உள்ள, தி.மு.க., அமைச்சர்கள் பதவி விலக வேண்டும் என்று, வெளியில் இருந்து ஆதரவு தந்த காங்கிரஸ் கோரியது. அதை ஏற்க மறுத்த, ஐ.கே.குஜ்ரால் பிரதமர் பதவியை துறந்தார்.ஆனால், அதே, தி.மு.க., இன்று காங்கிரசுடன் இணைந்து, '2ஜி' ஊழல் புரிந்துள்ளது. தி.மு.க., போன்ற சந்தர்ப்பவாத கூட்டணிகளை, பா.ஜ., தவிர்க்க வேண்டும். நேர்மையான, பிரிவினைவாதம் இல்லாத, மாநில கட்சிகளுடன், பா.ஜ., கூட்டணி அமைக்க வேண்டும். இல்லையென்றால், குதிரை கீழே தள்ளி விட்டது மட்டுமின்றி, குழி பறித்த கதையாக போய் விடும்.

மதவாதம் என்ற கோஷத்தை, மக்கள் இனியும் நம்பத் தயாராக இல்லை. நான்கு மாநில தேர்தல் முடிவுகள், இதை தெளிவாகக் காட்டுகின்றன. சிறுபான்மையினரை திருப்திபடுத்துவது தான், மதச்சார்பின்மை எனும் போலி சம சார்பின்மையை, மக்கள் ஒழிக்க தயாராகி விட்டனர்.பர்மாவில் புத்த மதம், இலங்கையில் புத்த மதம், பாகிஸ்தான் உட்பட, 60க்கும் மேற்பட்ட நாடுகளில், இஸ்லாமிய மதம், ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்தவ மதம் எனும் நிலை உள்ள போது, இந்தியாவில் மட்டும், சிறுபான்மையினருக்கு ஆதரவு தரும் கட்சி தான், பெரும்பான்மை பெறும் எனும் நிலையை மாற்றி விட வேண்டும்.காஷ்மீருக்கான தனி அந்தஸ்தை நீங்கி விட்டாலே, எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறைந்து விடும்.குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்கள், பாகிஸ்தான் எல்லையில் உள்ளன. ஆனால், பாகிஸ்தான் பயங்கரவாதிகள், காஷ்மீர் வழி மட்டும் ஏன் ஊடுருவி வருகின்றனர் என்றால், அதற்கு காரணம் காஷ்மீருக்கு உள்ள, தனி அந்தஸ்து என்று தான் சொல்ல வேண்டும்.

குஜராத் கலவரத்தை மட்டும் பேசும் கட்சிகள், காஷ்மீரில் பண்டிட்டுகள், தங்களது உடமைகளை இழந்து அகதிகளாக வாழ்வதை ஏன் பேசுவது இல்லை? காரணம், சிறுபான்மையினரை திருப்திப்படுத்த வேண்டிய போலி மதச்சார்பின்மை. சுதந்திரத்திற்கு பின் காங்கிரஸ் கட்சியை கலைத்து விட, காந்திஜி கூறியதை அதன் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எப்படியோ காந்திஜி அன்று சொன்னதை, இன்று சோனியா செய்கிறார் என்பதோடு நின்று விடாமல், ஊழலற்ற ஆட்சியை குஜராத்தில் நரேந்திர மோடி தந்தது போல், ஒரு உன்னத ஆட்சியை மத்தியில் தர வேண்டும்.asussusigmail.com

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (23)

 • rajen.tnl - tirunelveli,இந்தியா

  மூலைமுடுக்கெல்லாம் நுழைத்து தேசத்தையே செயல்பட விடாமல் கட்டிப்போட்டிருக்கும், விஷத்தை நாட்டைவிட்டே அடித்து விரட்டவேண்டிய நேரம் நெருங்கிவிட்டது... தேசத்தின் உண்மையான விடுதலைக்கான சரியான தருணம் இதுவே.... வாருங்கள்........ சகோதர, சகோதரிகளே... . மோடிஜீயின் கரங்களை வலுப்படுத்துவோம்... தேசத்தைக் காப்போம்...இறைவன் என்றும் தர்மத்தின், நியாயத்தின் பக்கமே... அதனால் வெற்றி நிச்சயம் ... வாய்மையே என்றும் வெல்லும்.... ஜெய்ஹிந்த்...

 • Iyyappan Kalyanasundaram - Higashimatsuyama,ஜப்பான்

  தமிழ் உணர்வோடு இந்தியன் என்கிற உணர்வும் நம்மிடம் எழவேண்டிய நேரமிது.

 • Iyyappan Kalyanasundaram - Higashimatsuyama,ஜப்பான்

  முற்றிலும் உண்மை.

 • தாமரை - பழனி ,இந்தியா

  இதை எழுதியுள்ள கட்டுரையாளர் மிகச் சரியாகவே எழுதியுள்ளார்.மோடியை ஆதரித்தாலே அவர் பி ஜே பி காரர் என்று முத்திரை குத்தக் கூடாது.மோடி மிகச் சிறந்த நிர்வாகத்தை குஜராத்தில் வழங்கியதால்தான் அவரது நிர்வாகத்தை உலகமே பாராட்டுகிறது.குஜராத்தில் என்னமோ மோடியே கலவரத்தை நடத்தியது போல இன்னமும் பேசுவது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வது ஆகும்.அந்தக் கலவரத்துக்குக் காரணமே ராமர் கோவிலுக்கு வழிபடச் சென்று வந்த அப்பாவி ஹிந்துக்கள் மீது நடத்திய கொலைத் தாக்குதலே.இதற்கு பாகிஸ்தானின் ஆசி கண்டிப்பாக உண்டு.இந்த மாதிரித் தாக்குதல் நடத்தினால் அங்கு கலவரம் நடக்கும் இதை வைத்து பயங்கர வாதிகளின் திட்டங்களை முன்னெடுத்துச் செல்லலாம் என்பதுதான் பாகிஸ்தானின் எண்ணம்.அதை இம்மி பிசகாமல் செய்து வருகின்றன நமது சமய சார்பற்ற (?) ஊடகங்களும் பதவி வெறி பிடித்த பல கட்சிகளும்.அதற்கு இந்த தேசபக்தியில்லாத காங்கிரசும் பக்க வாத்தியம் இசைக்கிறது.கட்டுரையாசிரியர் கூறியுள்ளது போல காஷ்மீருக்கான தனி அந்தஸ்த்து ஒழிக்கப் பட வேண்டும்.காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியானால் அதற்கு ஏன் சிறப்பு அந்தஸ்த்து? நேருவின் தவறான டாம்பீகமான சில நடவடிக்கைகளால்தான் இந்த நாடு இவ்வளவு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது.கெஜ்ரிவாலின் வெற்றுக் கோஷம்,இந்த மதவாதப் பூச்சாண்டி இவற்றை விடுத்து நாடு நன்றாக இருக்க வேண்டுமென்ற தேச பக்தியுள்ளவர்கள் அனைவரும் மோடியை ஆதரிக்க வேண்டும் .அப்போது மட்டுமே இந்த நாடு ஒரு வளமான எதிர்காலத்தை நோக்கிப் பயணிக்க முடியும்.

 • nagarajan sekhar - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  sariyana points

 • ஜெயசேகர் - Chennai,இந்தியா

  பி.ஜே.பி கு நன்றாக ஜால்ரா அடித்துள்ளார் ..நடுநிலையான கருத்துகள் எதுவும் இல்லை ....இங்கு பிரசுரிக்க எழுதப்பட்டது போல் உள்ளது

 • Gokulakrishnan - Jeddah,சவுதி அரேபியா

  தம்பி நல்லவனே 55 வருஷமா அவங்க ஆட்சி தான் நடக்குது... இன்னும் ராகுலுக்கு பதவி வேற கொடுத்து நாரடிகனுமா.... ஊழலுக்கு என்று ஒரு புத்தகமே போடலாம்.... வெட்கம் இல்லம் எப்படி காங்கிரஸ்கு நீங்க எல்லாம் சப்போர்ட் பண்றீங்க.... உனக்கு நல்ல எதிர் காலம் இருக்கு நல்லவனே.....

 • veeramani krishnan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  வெல்டன் சுந்தரமூர்த்தி

 • Mookkan - kallakkurichi,இந்தியா

  மோடி ஆட்டமும் ஒரே மாதிரிதான் இருக்கும்

 • nallavan - tiruchy,இந்தியா

  இந்த கட்டுரையாளர் ஒரு நடுநிலை வாதியாக இருப்பார் என்று நினைத்து இந்த கட்டுரையை படித்தேன்.படித்தபின்தான் தெரிகிறது இவர் ஒரு பி ஜே பி காரர் என்று. ராகுலுக்கு இந்த 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் ஒரு மந்திரி பதவிகூட கொடுக்க வில்லை என்பதை மறைத்துவிட்டு மகுடம் சூடி மகிழபார்த்தார் என்று கட்டுரையாளர் குறிப்பிட்டுள்ளது அபத்தம்.ப ஜ ஆட்சியில் அல்லது ப ஜ காரர்கள் ஊழலே செய்யாததுபோல் காட்டி இருக்கிறார்.இதுவும் தவறானது.அடுத்து சிறுபான்மையினரை திருப்தி படுத்த இந்த வீணாபோன காங்கிரஸ் என்ன என்ன சலுகைகளை வழங்கி இந்த சிறுபான்மையினரை பொருளாதாரம் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் மேம்படுத்தி இருக்கிறது கட்டுரையாளர் தெளிவு படுத்துவாரா?.மதவாதம் என்றால் என்ன ?அவரவர் மதத்தில் பற்றுள்ளவராக இருப்பதா?அல்லது பெரும்பான்மையினரின் மதகொள்ககைகளை சிறுபான்மையினரின் மீது திணிப்பதா?ப ஜ காவின் கொள்கை இரண்டாவது வகயை சேர்ந்ததுதானே.காஸ்மீரின் தனி அந்தஸ்து கொள்கையால் அங்கு ராணுவம் போவது தடை செய்யப்பட்டுள்ளதா?அதனால்தான் பாகிஸ்தான்காரர்கள் ஊடுருவிகிரார்களா?கட்டுரையாளர் மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுகிறார்.காஸ்மீர் முஸ்லிகலுக்கும் பண்டிட்களுக்கும் நடந்த கலவரத்தைபோல் ஆயிரகணக்கான கலவரம் சிறுபான்மையினருக்கு எதிராக மற்ற மாகாணங்களில் நடந்துள்ளது.ஆனால் அரசே ஒரு மதத்தினருக்கு ஆதரவாகவும் ஒரு மதத்தினருக்கு எதிராகவும் நின்று நடத்திய கலவரம் குஜராத் கலவரம்.கட்டுரையாளர் நடுநிளைவாதிபோல் எழுதி ப ஜ கட்சிக்கு ஆதரவு தேடுகிறார்.

 • veeramani krishnan - dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  பால் குடிக்காதா பூனை?

 • siva kumar - Chennai,இந்தியா

  குஜராத்தில் ஊழல் இல்லை என்று யார் சொன்னது ?

 • mohanasundaram - chennai,இந்தியா

  தமிழக ப்ஜ்ப்யினர் இனியாகிலும் நன்றாக சிந்தித்து முடிவெடுக்க இந்த கட்டுரை அவர்களின் கண்களை நிச்சயம் திறக்கும்.

 • TamilArasan - Nellai,இந்தியா

  அருமையான கட்டுரை... நம் நாட்டை ஆட்சி புரிய மோடியே தகுதியானவர்....ஐந்து ஆண்டுகள் ஆட்சி புரிந்த பின்பு தனது தொகுதியி‌லே வெற்றி பெற நம்பிக்கை இல்லாமல் தொகுதி மாற்றும் அரசியல் தலைவர்கள் இருக்கும் நிலையில் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக முதல்வராக வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் அவரின் கட்சியை தொடர்ச்சியாக ஐந்தாவது முறையாக அரியனையில் ஏற்றி உள்ளார். பிஜேபி குஜராத்தில் தொடந்து 21 ஆண்டுகள் ஆட்சி புரிவது பலருக்கு தெரியாது...

 • SURESH SUBBU - Delhi,இந்தியா

  தலைவரை தோலுரித்து காட்டியுள்ள அருமையான கட்டுரை..... 4 மாநில தேர்தலில் காங்கிரசின் சவ பெட்டிக்கு ஆணி அடித்தாகி விட்டது.... பொது தேர்தலில் ஊழல் கட்சிகள் அடக்கம் செய்யப்படும்...

 • SURESH SUBBU - Delhi,இந்தியா

  தமிழக பிஜேபி யினருக்கு இந்த கட்டுரை சமர்ப்பணம்...

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement