Advertisement

திருமலை பெருமாள் தேடும் அந்த ஒரு பக்தர்

நாட்டிலேயே அதிக வருமானம் ஈட்டித்தரும் கோயிலும், நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் தலமுமான திருமலை திருப்பதி கோயிலின் பிரதான அர்ச்சகரும், பிரம்மோற்சவ விழாவின்போது வலம் வரும் சுவாமி வாகனத்தில் இருப்பவரும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி துவங்கி நடிகர் ரஜினிகாந்த் வரையிலான பிரபல விருந்தினர்களை கோயிலுக்குள் அழைத்துச் செல்லக்கூடியவரும், நாள்தோறும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் சொற்பொழிவு நிகழ்த்துபவரும், மாலிக்கியூல் பயலாஜியில் ஆராய்ச்சி படிப்பை முடித்து டாக்டர் பட்டம் பெற்றவருமான டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர் ஒரு நல்ல தமிழ் ஆர்வலரும் கூட.
பிரம்மோற்சவம் முடிந்த ஒரு நாள் மாலை நமது தினமலர்.காம் இணையதளத்தின் விருந்தினர் பகுதிக்காக விசேஷ பேட்டி வழங்கினார். அவரது பேட்டியிலிருந்து...
இப்போது எல்லாம் சாமியை நிம்மதியாக பார்க்க முடியவில்லை என பக்தர்கள் குறைபட்டுக் கொள்கின்றனர். 1950ல் வந்திருந்தால் ஐந்து நிமிடம் அல்ல பத்து நிமிடம் நின்றால் கூட உங்களை போகச் சொல்ல ஆள் கிடையாது. ஆனால் இப்போது நிலைமை அப்படியில்லையே. கடந்த மாதம் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வந்திருந்தார். சரியாக இரண்டு நிமிடம் கூட சுவாமி முன் நின்று பிரார்த்தனை செய்திருக்கமாட்டார், அதற்குள் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றுவிட்டனர். ஆக ஒரு நிமிடம் கூட பார்க்கவில்லை என்று நினைக்காதீர்கள், மாறாக பத்து வினாடி பார்த்தேன் என்று திருப்தி அடைந்து கொள்ளுங்கள்.
பக்தி என்பது குளித்து முடித்து நாமம் இட்டு மந்திரம் சொல்லி பூஜை செய்து சாமி கும்பிடுவதோடு முடிந்துவிடுவதில்லை. அப்போதுதான் துவங்குகிறது. நாளின் ஒவ்வொரு நொடியும் உங்களை பெருமாள் பார்த்துக் கொண்டு இருக்கிறார் என்பதை நினைவில் கொண்டு மனம், மெய், வாக்கு ஆகிய மூன்றாலும் தவறேதும் செய்யாதிருப்பதே பக்தி.
எனக்கு எஜமான் பெருமாள்தான், எங்கோயோ இருந்த என்னை தனக்கு பூஜை செய்யும்படி அருகில் அழைத்து வைத்துக் கொண்டுள்ளார், அந்த காரியத்தில் கடுகளவும் குறைவின்றி செய்ய வேண்டும், செய்துவருகிறேன். அப்படி மனம்விரும்பி என் வேலையை செய்யும்போது ஏற்படும் பரவசம் பக்திக்கு ஈடானது. யாராக இருந்தாலும் மனம் சொன்னதை கேட்டு வேலையை ஈடுபாட்டுடன் செய்யுங்கள், அந்த தொழில் பக்தியைதான் பெருமாள் மிகவும் நேசிப்பார்.
தமிழ் ஆழ்வார்கள் பனிரெண்டு பேராலும் தமிழ் பாசுரங்களால் பாடி ஆனந்தமாக ஆராதிக்கப்பட்டவரே திருமலை பெருமாள். அவர் பள்ளி எழுந்தது முதல் திரும்ப பள்ளியறை போவது வரை அவரை ஆராதிப்பது தமிழ் பாசுரங்களே. இதன் காரணமாகவே நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் தெலுங்காக இருந்தாலும் தமிழை நானே விரும்பி படித்தேன்.
காலுக்கு செருப்பு கூட வாங்க முடியவில்லையே என்று கவலைப்படுபவன் காலே இல்லாதவனை பார்த்தபிறகு நமது கவலையில் நியாயமில்லை என்பதை உணர்வான் அது போல எல்லோருக்கும் அவரவர் நிலைக்கு ஏற்ப கஷ்ட, நஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். இதையே நினைத்துக் கொண்டு இருக்காமல் அதை கடந்து போகும் வழியை பார்க்க வேண்டும்.
உன்னிடம் அதிகாரம் இருந்தால் அதை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்தாமல் இருப்பதும் குற்றம், அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு தப்பான விஷயம் நடக்கும் போது அதை பார்த்துக் கொண்டு தடுத்து நிறுத்தாமல் விட்டாலும் பாவம். முன்னாள் முதல்வர் மறைந்த ஒய்எஸ்ஆருடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பு கிடைத்தபோது, " உங்களுக்கு என்ன வேண்டும்?' என்று கேட்டார்" எனக்கு ஒன்றும் வேண்டாம் ஆந்திரா மாநிலம் முழுவதும் உள்ள 34 ஆயிரம் கோவில்களைச் சேர்ந்த ஒரு லட்சம் அர்ச்சகர் குடும்பங்கள் நலம் பெற ஒரே ஒரு உத்திரவு போடுங்கள் என்றுதான் கேட்டேன்' அப்படியே உத்திரவிட்டார். இன்று அந்த ஒரு லட்சம் குடும்பமும் நிம்மதியாக இருக்கிறது.
ஆக பக்தியும் நிம்மதியும் ஆனந்தமும் குலசேகரபடிக்கட்டைத்தாண்டி கர்ப்பககிரகத்தில் மட்டும் இல்லை, உங்கள் மனதிலும் இருக்கிறது. வாழ்க்கையை நேசியுங்கள் அது எப்படி இருந்தாலும், அமைந்தாலும் ஒத்துக்கொண்டு வாழப்பழகுங்கள்.
உங்களுக்கு ஓன்று தெரியுமா? அன்றாடம் தன்னை வந்து சந்திக்கும் கோடிக்கணக்கான பக்தர்களின் வீடு வேண்டும், பணம் வேண்டும், வெளிநாட்டு வேலை வேண்டும் என்பது போன்ற ஆயிரக்கணக்கான "வேண்டும்' என்கின்ற வேண்டுதலை மட்டுமே கேட்கும் பெருமாள் கோடியில் ஒரு பக்தன் எனக்கு எதுவும் வேண்டாம் "நீதான் வேண்டும் நீ மட்டுமே வேண்டும்' என்று கேட்டு வர மாட்டாரா? அவரை வைகுந்தத்திற்கே அழைத்துச் சென்று அருகே வைத்துக் கொள்வோம் என எண்ணியுள்ளார், அந்த ஒரு பக்தராக மனதார மாறமுடியுமா? பாருங்களேன், என்று கூறி முடித்தார் டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர்.
- எல்.முருகராஜ்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (14)

 • N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா

  இல்லானை இல்லாளும் வேண்டாள்.......ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்.......ஆகவே பெருமாளே எங்களுக்கு அனைத்து செல்வங்களையும் கொடுத்து அருள்வீராக......

 • Kamala Pichumani - Chennai,இந்தியா

  Excellent statement about Bhakthi & Surrering to the lotus -Feet of Paramaathma

 • N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா

  அருளில்லார்க்கு அவ்வுலகில்லை.....பொருளிலார்க்கு பூவுலகில்லை........ஆகவே பொருள் தேடும்போதே அருளையும் தேடவேண்டும்.....இவ்வுலகில் மனிதனிடம் எது இருக்கின்றதோ இல்லையோ......பணம் இருக்க வேண்டும்.....இல்லையேல் நடைபிணம்தான்...

 • N.KALIRAJ - VANIYAMBADI,இந்தியா

  அது வேண்டும் ......இது வேண்டும்......என கேட்பதில் தவறில்லையே.......அனைத்தும் இருந்தால்தான் எம்பெருமானை எளிதில் தரிசிக்க முடிகின்றது.....பூவுலகில் அதுவும் வேண்டும்.....இதுவும் வேண்டும்.......அவ்வுலகில் எதுவும் வேண்டாம்.....பகவான் மனிதனை படைத்ததே அதற்காகவும்....இதற்காகவும்தான்.....இதில் தவறிருந்தால்......சிறுமதி கொண்ட என்னை பகவான் மன்னித்தருள்வாராக......

 • sathiyam - salem,இந்தியா

  நீ மட்டும் வேண்டும். உன் பாதத்திலே கிடந்து சேவை செய்ய வேண்டும்.

 • T Sudarshan - chennai,இந்தியா

  திருமலையில் திருவேங்கடமுடையானை தரிசிக்கும் பக்தர்களிடம் சில கருத்தகளை பகிர்ந்துகொண்ட டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர் அவர்களுக்கு நமஸ்காரம். மிகவும் நன்று. .... சில வாசகர்களின் கருத்துக்கள் சற்று கடினமானதாக இருந்தததை பார்த்தேன். டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர் திருப்பதி கோயிலின் பிரதான அர்ச்சகர் மட்டுமே, அதை தவிர்த்து நிர்வாக தலைவரோ அல்லது நிர்வாகத்தை மாற்றி அமைக்கும் அதிகாரம் கொண்டவரோ அல்ல. நிலை இப்படி இருக்க, அடியார்க்கு அடியாராய் தன்னை காட்டிய ஏழுமலையானை போல் அடியார் .ரமண தீட்சிதரை வணங்குவோம்.

 • Arvind Bharadwaj - Coimbatore,இந்தியா

  அற்புதமான கருத்துக்கள். நினைவில் என்றென்றும் கொண்டு, காரியத்தில் செயல்படுத்தவேண்டிய நன்முத்துக்கள். திருமலையில் தவறான செயல்களைச் செய்பவர்கள் இறைவனைத் துதிப்பவர்கள் அல்லர், அரசு ஊழியர்களே என்பதை வாசக அன்பர்கள் உணர்ந்தால் நல்லது. வேற்று மாநிலத்தில் கோயில் கொண்டுள்ள இறைவனுக்கு அனுதினமும் காலை முதல் மாலை வரையில் தமிழிலேயே பூஜைகள் நடைபெறுகிறது என்பதே தமிழர்கள் பெருமிதம் கொள்ளவேண்டியது. இதேபோன்ற இன்னொரு ஆலயம், கர்நாடகத்தில் உள்ள மேல்கோட்டை என்பதும் அறியவேண்டியது.

 • Skv - Bangalore,இந்தியா

  பெருமாளை சுத்திலுமே இருக்காளே நெரையெ கொள்ளை அடிப்பவர்கள்

 • கூடல்நகர் வெ இராசா இராமன் - சென்னை,இந்தியா

  பகவானே, ஏழுமலை வாசா, ஸ்ரீனிவாசா எனக்கு எதுவும் வேண்டாம் "நீதான் வேண்டும் நீ மட்டுமே வேண்டும்" இப்போதே மனமார பிரார்தித்துகொண்டேன். தொடர்ந்து பிரார்த்திப்பேன். நன்றி தினமலர். நான் வைகுண்டம் சென்றால் தினமலர் நாளிதழ் பற்றி வெங்கடேசனிடம் கூறுகிறேன்.

 • Veeravalli Sundaresan - SECUNDERABAD,இந்தியா

  மிஹவும் உண்மயான சொல் . அனால் அங்கே நடக்கும் தவறுகளை ஏன் எடுத்து சொல்லவில்லை பயமா? நமக்கென்ன என்ற தப்பித்தலா . லக்ஷகனக்கான அர்ச்சகர்களுக்கு மட்டுமே ஞாயம் செய்த நீங்கள் எதையும் செய்திருக்கலாமே வ.sundaresan .

 • Karunagaran - Bangalore,இந்தியா

  மிகவும் அற்புதமான கருத்துக்கள். ஆன்மீகத்தில் முழுமையாக இருக்கும் அன்பர்களின் சொற்கள் எப்போதும் இப்படி தன தெளிவாக இருக்கும்.

 • Amal Anandan - chennai,இந்தியா

  ஆழ்வார்கள் செய்த தமிழ் பணி போற்றுதலுக்குரியது. அனால் நாம் அதை படிப்பது கூட இல்லை. தமிழ் வழர்ததில் ஆழ்வார்கள் பணி அளப்பரியது.

 • rajaram raghupathi - YANBU,சவுதி அரேபியா

  அருமையான கருத்துகள்

 • Srinath Babu KSD - Madurai,இந்தியா

  ஏழு குண்டலவாட வெங்கடரமணா கோவிந்தா கோவிந்தா.

 • G.Shiv - chennai,இந்தியா

  அருமையான பேட்டி மற்றும் விளக்கம் ,வாழ்த்துகள் டாக்டர் ஏ.வி.ரமண தீட்சிதர் அவர்கள் ......

 • Hari - Chennai,இந்தியா

  உண்மை உண்மை உண்மை

 • JAIRAJ - CHENNAI,இந்தியா

  நீங்கள்............சரி.............உங்கள் விஷயங்கள் சரி.....................மகிழ்ச்சி...................திருமலையில் நடக்கும் ஊழல் களை ஏன்தடுத்து நிறுத்தவில்லை ? இதைப் படித்துவிட்டு நீங்கள் சொல்லியவையும் படித்துப் பாருங்கள் புரியும். சைத்தான் வேதம் ஓது வது போல் இருக்கிறது.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement