Advertisement

மோடி பிரதமரானால் இந்திய கவுரவம் 100 மடங்கு உயரும்: தமிழருவி மணியன் சிறப்பு பேட்டி

தமிழகத்தில் அ.தி.மு.க.,- தி.மு.க.,விற்கு மாற்றாக, தே.மு.தி.க., பா.ஜ., ம.தி.மு.க., இணைந்த "மாற்று அணியை' உருவாக்க முயற்சி செய்து வருகிறார் காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன். காமராஜர் காலத்தில் மாணவர் காங்கிரசில் சேர்ந்து, காமராஜரால் "தமிழருவி' என்று அழைக்கப்பட்டவர். அரசியலில் நேர்மையை வலியுறுத்தி, லஞ்சம், ஊழலுக்கு எதிராக உரத்தக்குரல் எழுப்புவர். கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,விற்கு ஆதரவாக பேசியவர், இப்போது இந்த ஆட்சியை விமர்சனம் செய்பவர். தமிழகத்தில் பா.ஜ., அல்லாத பிறக்கட்சியினர், மோடி பிரதமராக வருவது குறித்து கருத்து ஏதும் வெளிப்படையாக வெளியிடாத நிலையில், புதுக்கூட்டணி உருவாகி, மோடி பிரதமராக வேண்டும் என்று விரும்புபவர்.

தினமலர் நாளிதழுக்கு இவர் அளித்த சிறப்பு பேட்டி...

"பா.ஜ., ஆட்சிக்கு வர வேண்டும் என்பது அல்ல; காங்கிரஸ் வரக்கூடாது என்பதற்காக தான் மாற்று அணிக்கு முயற்சிக்கிறேன்' என்று கூறியுள்ளீர்களே...
இடதுசாரிகள், மாநிலக்கட்சிகள் இணைந்து வலிமை மிக்க 3 வது அணி அமைத்து, ஆட்சிச்சூழல் அமையும் என்றால் ஆதரவு தருவேன். அப்படி ஒரு ஆட்சியில், தமிழக முதல்வர் ஜெ., பிரதமரானால், தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் ஆதரிப்பேன். ஆனால் அதற்கான வாய்ப்பு கொஞ்சமும் இல்லை. எது எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். ஊழலால் நாட்டையே கொள்ளையடிக்கும், இலங்கை தமிழர்களுக்கு அநீதி இழைத்த காங்கிரசிடமிருந்து நாடு விடுபட வேண்டும். அதற்கு மாற்று, மோடி தலைமையில் பா.ஜ., கூட்டணி அரசு அமைய வேண்டும்.

மோடி பிரதமராவது காலத்தின் கட்டாயமா?
காலம், மக்கள் மூலம் காரியம் நடத்தும். வாக்காளர்கள் விதியை எழுதுவார்கள். மோடி மீது மக்களுக்கு எதிர்பார்ப்பு, நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் 45 லட்சம் புதிய வாக்காளர்கள் உள்ளனர். அந்த இளைஞர் கூட்டம் மாற்றத்தை விரும்புகிறது. அவர்கள் ஊழலுக்கு, ஜாதி, மதத்திற்கு எதிரானவர்கள். மதங்களை வைத்து, மதசார்பின்மை என்று கூறி அரசியல் நடத்துபவர்கள் யார் என்று இளைஞர்களுக்கு
தெரியும். அவர்கள் மோடியைத் தான் தேர்வு செய்வார்கள், ஏனென்றால் மோடி ஊழலற்ற மனிதர். மோடி மூலம் மாற்றம் நிகழவேண்டும் என்று இளைஞர்கள் விரும்புகிறார்கள்.

நாட்டிற்கு கோயில்களை விட கழிப்பறைகள் தான் அவசியம் என்கிறாரே மோடி...
இதற்காகவே நான் மோடியை கூடுதலாக ஆதரிப்பேன். இந்த தெளிவுக்காகவே அவருக்கு அதிக மதிப்பெண் தரலாம். ஆன்மிகம் என்பது கோயிலில் சுவாமி கும்பிடுவது மட்டும் அல்ல; சக மனிதர்கள் நலம் தான் ஆன்மிகம் என மோடி உணர்ந்திருக்கிறார்.

நல்ல பேச்சாளர், சிந்தனையாளரான நீங்கள் மோடியின் மேடைப்பேச்சு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மக்களின் நாடி, நரம்பை மின்னல் போல் தாக்கும் சக்தி மேடை பேச்சுக்கு உண்டு. அந்த சக்தி மோடிக்கு இருக்கிறது. அவருடைய மேடைப் பேச்சில் லட்சியம், தெளிவு இருக்கிறது. பிரதமர் வேட்பாளர் என்பதால், தேசிய அரசியலைத்தான் பேசுகிறார். ஒரு இந்துவாக அடையாளம் காட்டி பேசவில்லை. மக்களின் உணர்வுகளை வெளிக்காட்டி பேசுகிறார். திருச்சியில்,மோடிக்கு இவ்வளவுக்கூட்டம் எப்படி வந்தது? அவரது பேச்சை கேட்கத்தானே! ஹிட்லர், ஒபாமா, கருணாநிதி பேச்சால் வென்றவர்கள் தானே.

உங்கள் பார்வையில் மோடி அலை வீசுகிறதா?
நிச்சயமாக, இந்தியா முழுக்க வீசுகிறது. கூட்டணி சரவர அமையாமல், தமிழகத்தில் பா.ஜ.,விற்கு ஓரிடம் கூட கிடைக்காமல் இருந்தாலும், மோடி பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. நான் முயற்சிப்பது போல கூட்டணி அமைந்தால், 15 முதல் 20 இடங்கள் வரை, இந்த மாற்று அணிக்கு கிடைக்கும். அ.தி.மு.க.,விற்கு 20 இடங்கள் வரை கிடைக்கும். காங்.,-தி.மு.க., கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைப்பதே அபூர்வம். நாற்பது தொகுதிகளிலும் மூன்றாம் இடம் கிடைக்கவும் வாய்ப்பு உண்டு.

இன்று பிரதமர் பதவியை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் கேலி, கிண்டல் செய்கிறார்கள். மோடி பிரதமரானால், வெளிநாட்டில் இந்திய கவுரவம் காக்கப்படுமா?
"ரிமோட் கன்ட்ரோல்' மூலம் இயக்கப்படாத பிரதமரை யாரும் கிண்டல் செய்ய முடியாது. குறைந்த எம்.பி..க்களுடன் கவுரவமாக ஆட்சி
செய்தார் சந்திரசேகர். மன்மோகன் சிங்கை இயக்குபவர் சோனியா. இதுவரை எந்த பிரதமரும், சாவி கொடுத்த பொம்மையாக இருக்கவில்லை. மோடி பிரதமரானால், நாட்டின் கவுரவம் 100 மடங்கு உயரும். இப்போது போல்,"ரிமோட்' மூலம் மோடி இயங்கமாட்டார்.

ஆர்.எஸ்.எஸ்., அவரை இயக்கும் என்று பிரசாரம் செய்யப்படுகிறதே...
"ரிமோட்' கன்ட்ரோலில் இயங்கினால் மரியாதை இழப்பார். மோடி அப்படி இருக்க மாட்டார். குஜராத் ஆட்சி, இதற்கு சாட்சி. பாபர் மசூதி பிரச்னையில், உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு மாறாக அவர் செயல்பட மாட்டார்.

கூட்டணிக்கு முயற்சிக்கும் நீங்கள் மோடியை சந்தித்தீர்களா?
அவர் பிரதமர் வேட்பாளர். உடனடியாக சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் உள்ளன. பா.ஜ., தலைவர் ராஜ்நாத் சிங், தமிழக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்த், வைகோவிடம் பேசிஉள்ளேன்.

மோடி- பிரதமர், மாற்று அணி என்பது குறித்து விஜயகாந்தின் கருத்து என்ன?
மோடிக்கு ஆதரவாகவோ, எதிராகவோ விஜயகாந்த் என்னிடம் ஏதும் சொல்லவில்லை. ஆனால் மாற்று அணியில், தே.மு.தி.க.,விற்கு அதிக இடம் ஒதுக்கப்படும். இதுவே நீங்கள் அ.தி.மு.க.,-தி.மு.க., கூட்டணியில் சென்றால் குறைந்த இடங்கள் தான் ஒதுக்குவார்கள் என்று அவரிடம் கூறியுள்ளேன். 2016 ல் முதல்வர் கனவில் உள்ள நீங்கள், அந்த கூட்டணியில் குறைந்த இடங்களில் போட்டியிடுவது சாத்தியமா என்றும் கேட்டேன்.

இதே கூட்டணி முயற்சி, சட்டசபை தேர்தலிலும் தொடருமா?
அதை இப்போது சொல்ல முடியாது. விஜயகாந்த், முதல்வராக விரும்பலாம். வைகோ ஆக வேண்டும் என்பது எங்கள் விருப்பம். என்றாலும் அ.தி.மு.க.,-தி.மு.க., இல்லாத கூட்டணி ஆட்சி தான் அடுத்து தமிழகத்தில் அமையும்.

சமீபகாலமாக, வைகோவை முன்னிலைப்படுத்தி நீங்கள் பேசி வருவது ஏன்?
தமிழக அரசியல் தலைவர்களை, 40 ஆண்டுகளாக பார்த்து கழித்துக்கொண்டு வந்தேன். மிஞ்சியது வைகோ. அவரின் தனிமனித வாழ்க்கை தூய்மையானது. பொதுவாழ்க்கையில் ஊழலுக்கு எதிரானவர். பதவியை விரும்பாதவருக்கு பதவியை தரலாமே. லோக்சபா தேர்தலில், அவரது தொகுதியில் நாங்கள் பிரசாரம் செய்வோம்.இவ்வாறு பேட்டியளித்தார்.
- ஜி.வி.ரமேஷ்குமார்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (74)

 • ரத்தினம் - Muscat,ஓமன்

  தமிழருவி மணியன் கருத்துக்கள் பெரும்பாலான நடு நிலையாளர்களின் கருத்துகளை ஒத்து இருக்கிறன. மேலும் வைகோ போன்று கறை படியாதஅரசியல்வாதிகள் நாட்டுக்கு தேவை.

 • Guna Seelan - Pudukkottai,இந்தியா

  யோவ் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை காங்கிரசின் வாழ் பிடித்து இருந்து நல்ல அனுபவிச்சுட்டு இப்போ மோடிக்கு கால் பிடிகிறியா சரியான சந்தர்ப்பவாதி நீ ''தமிழருவி'' இல்லை சரியான ''புல்லுருவி'' Rate this: 197 members 1 members 31 members Share this comment Reply

 • TN Ravichandran - Mayiladuthurai,இந்தியா

  நாராயணா இந்த கொசு தொல்லை தாங்க முடியலடா.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  தமிலர்வி மணியன் அவர்களை ச்லருக்கு மட்டுமே தெரியும்.. ஆனால் இவர் என்னமோ ஒட்டுமொத்த தமிழர்களின் ஒரே பிரதிநிதி போல பேசுவது அறியாமையை,,அறிவின்மையை,முதிர்ச்சியின்மையை வெளிப்படுத்தி விட்டது.. தமியாருவி மணியனாக மாறிவிட்டார்... இனி கூஜா தூக்க வேண்டும்.. குஜராத்தை நோக்கி வீரநடை போடவும்.. உங்களை யாரும் கேட்கவும்,கவனிக்கவும்,, ஏன் பார்க்கவும் கூட மாட்டார்கள்... அந்த அளவுக்கு தங்களின் தரத்தை ஆக்கி கொண்டீர்கள்..nan

 • labamsivasamy - tamilnadu,இந்தியா

  ராஜபக்சவின் நெருங்கிய நண்பர்கள் பா . ஜ . க . வின் சு.சாமியும் ,சுஸ்மாவும்,அவர் கணவர் சிவராஜும். இவர்களை மீறி மோடி தமிழர்களுக்கு என்ன செய்து விட முடியும் . மன்மோகனும்,சோனியாவும் செய்ததைத் தானே தொடர்வார்கள் ,சு .சாமியை யாராலும் திருத்த முடியாது.திருந்தவும் மாட்டான் .கைப் புண்ணுக்கு கண்ணாடி தேவையா ?ஜெயலலிதாவால் மட்டுமே விடிவு.

 • krishna - chennai,இந்தியா

  தமிழருவி மணியனின் அரசியல் பாதை முடிவுக்கு வருகிறது

 • villupuram jeevithan - villupuram,இந்தியா

  தமிழன் பிரதமராக முடியாது, இப்படியே முடியாது என்றிருந்து விட்டால் எப்படி முடியும்? மோடியும் கூட்டணி கட்சிகள் ஒத்துக் கொண்டால் தான் பிரதமராக முடியும், என்றாலும் அவர் முயற்சிக்க வில்லையா/

 • nallavan - tiruchy,இந்தியா

  அமெரிக்காவும் பிரிட்டனும் சேர்ந்து விசா வழங்க மறுக்கப்பட்ட ஒரு நபர் பிரதமராக வந்தால் இந்தியாவின் மதிப்பு உயருமென்று சொல்கிறாரே எங்கே உயரும்?நாக்பூரிலா?

 • nallavan - tiruchy,இந்தியா

  யானைக்கும் அடி சறுக்கும் .

 • g. Tharanipathi - chennai,இந்தியா

  போகாத ஊருக்கு வழி, தமிழ்நாட்டில் காங்கிரசை 1967இல் அகற்றியதால் தமிழ்நாடு படும் அவதியை மக்கள் எண்ணிபார்க்கவேண்டும்

 • Prabhakaran Shenoy - CHENNAI,இந்தியா

  காங்கிராஸின் தலைமையில் இந்தியாவின் பெருமை பீத்தி கொள்ளும் நிலையில் இல்லை, மணியன் சொல்வதை பார்த்தால் இன்னும் 100 மடங்கு மோசமாகிவிடும் போல் உள்ளது.

 • தஞ்சை மன்னர் - Tanjore,இந்தியா

  சொன்னது நீதான மணியா சொல் சொல் "" கோல்வால்கரின் தலைமையில் இயங்கிய ஆர்.எஸ்.எஸ் பிரிட்டிஷ் அரசுக்கு இசைவாகவே நடந்து கொண்டது. 1942 ஆம் ஆண்டிலிருந்து 1947 வரை கொழுந்து விட்டெரிந்த விடுதலை வேள்விலிருந்து ஆர்.எஸ்.எஸ் விலகியே நின்றது. நாக்பூரில் தலைமையகத்தை உருவாக்குவதிலும், பயிற்சி முகாம்களை நடத்துவதிலும் முஸ்லீம்களுக்கு எதிரான வகுப்புக் கலவரங்கள வளர்ப்பதிலும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்பாடுகள் அமைந்தன. "" இந்த தகவலை சொன்ன அதே மணியன் தானே இது , அது வேற ஆளே நானே தான் .

 • kasiviswanthan - madurai,இந்தியா

  தமிழ் அருவி மணியன் ஐயா சொல்வது 100% உண்மை கண்டிப்பாக மத்தியில் மற்றம் வேண்டும் காங்கிரஸ் என்னும் கிருமி அகற்றப்பட வேண்டும்

 • Murali P - Tamilnadu, India,இந்தியா

  சரியாய் சொன்னார், அவருடைய பதில் ஏற்றுகொள்ளும் வகையில் உள்ளது.

 • s.p.poosaidurai - Ramanathapuram,இந்தியா

  தமிழக வரலாற்றில் தமிழக தலைவர்களை குறிப்பாக காமராஜரை பெரியாரை அண்ணாவை அன்னை இந்திராகாந்தியை பல்வேறு முனிகளையும் ஜானிகளையும் வேத வார்த்தைகளோடும் கற்கால சொல்லோடும் புதுகவிதையோடும் பல்வேறு நிகழ்வுகளில் பேசக்கேட்ட தமிலரிவுமனியன் சொல் ராமன் பேரை சொன்னால் கிர்சணன் பேரை சொன்னால் இடியும் மின்னலும் தூரவிலகி போகும் என்பதைவிட மோடியின் சொல்லை சிறப்பை உயர்த்தி பேசி பேச்சாளர்களில் உயர்ந்திருப்பது மணியன் அவர்களை சாரும்.

 • puratchidhaasan - viruthachalam,இந்தியா

  தமிழருவி மணியன் அவர்கள் சொல்வது உண்மைதான்.ஆனால் சிறு திருத்தம்.காங்கிரஸ் தோல்வியுற்றால் இந்தியாவின் மதிப்பு 100மடங்கு உயரும்.மோடி அவர்கள் பிரதமர் ஆனால் 100மடங்கு உயரும்.ஆகமொத்தம் இந்தியாவின் மதிப்பு உலக அரங்கில் 200மடங்கு உயரும்.

 • puratchidhaasan - viruthachalam,இந்தியா

  மோடி பிரதமர் ஆனால் இந்தியாவின் மதிப்பு உலக அளவில் 200மடங்கு உயரும்.இதை யாரும் மறுக்க இயலாது.குறிப்பாக தமிழர்களுக்கு மரியாதை கிடைக்கும்.மாற்றாந்தாய் மனப்பான்மையோடு கடந்த பத்தாண்டு காலமாக கடலோர மீனவர்கள் எவ்வளவு வேதனை அடைந்துள்ளார்கள்.இலங்கையில் அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டபோது,மத்திய அரசு ,மாநில அரசு எல்லாம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததை உண்மையான தமிழன் ஒருபோதும் மறந்து விடமாட்டான்.இலங்கை அரசுக்கு மறைமுகமாக இன்றளவும் உதவி செய்துகொண்டிருக்கும் காங்கிரஸ் அரசை மறக்கமாட்டோம்.மோடி அவர்கள் வர வேண்டும்.இந்தியாவை நல்ல அரசாக மாற்றி தர வேண்டும்.

 • k.krishnaswamy - chennai,இந்தியா

  நாட்டின் கெளரவம் நிச்சயமாக மோடியால் ஒயரும்.போன தேர்தல் சமயத்தில் கருணாநிதி வரமாட்டார் என்று மக்கள் பேசிக்கொண்டார்கள்.நடந்தது.இப்பொ மோடி தான் வருவார்கள் என்ற பேச்சு பரவலாக உள்ளது..நடக்கும்.

 • Malick Raja - jeddah,சவுதி அரேபியா

  நடப்பதை நடக்கும் என்று சொல்பவன் அறிவாளி.... நடக்ககூடாததை..நடக்கமுடியாததை, நடக்கும் ஆனால் நடக்காதே... முடியும் ஆனால் முடியாதே என்று சொல்பவன் கோமாளி... (அறிவிலி) புத்திசாலிகளுக்கு சமிக்கையே போதும்...

 • G. Nagarajan - Tiruvarur,இந்தியா

  தமிழருவி மணியன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உண்டு. அவரின் தொலைக்காட்சிப் பேட்டிகள் அவரின் தூய்மையான எண்ணத்தையும் மக்களின் நலம் சார்ந்த ஆர்வத்தையும் வெகுவாக வெளிப்படுத்தியுள்ளன. அவரின் முயற்சி வெற்றி பெற்றால் தமிழகமும் இந்தியாவும் நன்றாக இருக்கும். வைகோ (நேர்மைக்காக, தூய்மைக்காக), விஜயகாந்த் (மக்கள் ஆதரவு பெற்றவர் என்பதற்காக), இராமதாஸ் (மதுவிலக்கை நோக்கிய பயணத்தில் இருப்பவர்) இவர்களை ஒன்றிணைத்து நரேந்திர மோடியோடு இணைத்து விட்டால் தமிழ்நாட்டில் தமிழருவி மணியன் நிச்சயம் மேலும் புகழ் அடைவார்.... எதிர்பார்ப்புடன்... க. நாகராஜன், திருவாரூர. 7598868760

 • நடுநிலைவாதி - erode,இந்தியா

  தமிழருவி மணியன் சொன்னது- “வெள்ளாடு நட்பு கொள்வதால் வேங்கை வள்ளலாருக்கு வாரிசாகுமா? பாம்புக்கு பால் வார்த்து நேசத்துடன் நெஞ்சில் வைத்து கொஞ்சினால் கொல்லும் விஷத்தை அடியோடு விலக்கிவிட்டு அன்றாடம் அது அஹிம்சையை போதிக்குமா?? கோடிலிட்டர் பாலைக் கொட்டி குடமுழுக்கு செய்தாலும் பாரதிய ஜனதா எனும் கரித்துண்டின் கறுப்பு நிறத்தை மாற்றிவிட முடியாது. சிறுபாண்மை மக்களின் நலனுக்கெதிராகவே இருந்தாக வேண்டும் என்பது அதந் பிறப்பிலேயே அழுத்தமாக எழுதப்பட்ட அரசியல் விதி” -“இன்று புதிதாக பிறப்போம் எனும் நூலில்”

 • manikandan - coonoor,இந்தியா

  ஐயோ அட கடவுளே மணியனின் கனவு நாசமாக போகட்டும்..................

 • K Sanckar - Bengaluru ,இந்தியா

  தமிழ் அருவி மணியன் எடுத்துள்ள பூரண மது விலக்கு திட்டத்தை வைத்தே கூட்டணி அமையலாம். அமைய வாய்ப்பு உள்ளது. வைகோ வும் விஜய காந்தும் பா ஜ கவும் இதனை ஏற்கின்ற கட்சிகள். மோடி ஆளுகின்ற குஜராத்திலும் மதுவே கிடையாது வேண்டுமானால் பா ம க வும் சேரலாம். அவர்களும் மது விலக்கு வேண்டும் என்கிறார்கள். தமிழக மக்களும் வரவேற்பார்கள்.

 • govindaraj - Pondicherry,இந்தியா

  தமிழருவி மனியனை எதோ கெட்ட ஆவி பிடித்துள்ளது

 • Nedunchezhian Senthilnayagam - Chennai,யூ.எஸ்.ஏ

  This can only be a dream. Even if Modi becomes PM, how India respect will grow 100 times? Is there any magic way for it? There are also corrupt people like BSY. Therefore, Modi is not a divine soul to get transformed everything in India in 5 years. The whole society and tem are corrupt.

 • S Rama(samy)murthy - karaikudi,இந்தியா

  நல்ல முயற்சி திரு தமிழருவி மணியன் .தற்பொழுது உலக நாடுகளில் அதிகம் பேசப்படும் இந்தியர் ஒருவர் என்றால் அவர்தான் மோடிஜி.அவர்பிரதமர் ஆகும்பட்சத்தில் இந்தியவின் நெற்றிக்கண் திறக்கும் சுப ராம காரைக்குடி

 • Pats - Coimbatore,இந்தியா

  இன்றைய இளைஞர்களின் எண்ண ஓட்டம் மிகவும் வெளிப்படையானது. பாஜக எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும், பாஜக நிற்கும் தொகுதிகளில் பாஜாவுக்கும் மற்ற கட்சியினர் நிற்கும் தொகுதிகளில் நன்-ஆப்-தி-எபவ் பட்டன்தான். ஒரு அரசியல் மாற்றத்திற்கான புயல் வீசப்போகிறது. பொறுத்திருந்து பாருங்கள்.

 • அன்வர்-ஹல்வானி - திருவாரூர்.,,இந்தியா

  மொழி நடயா பேசுராறே இவர் புத்தி சாலின்னு நெனச்சிட்டு இருந்தோம்,,, .. அதுவும் ஒரு காந்திய மக்க இயக்க தலைவர் ஆர் எஸ் எஸ், வி எச் பி பின் செல்கிறார் என்றால் ஜீரணிக்க முடியவில்லை,, சிறந்த நடுநிலைவாதி வர்ணாசிரம, பாசிச சக்திகளுக்கு எதிரானவர்,, என்று பொல்லா கனவு கண்ட மக்களுக்கு இவரின் இந்த சிறப்பு பேட்டி மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது,, மக்களை இந்த அளவுக்கு மழுங்கடிக்க பட்டிருக்கிறதை நினைத்து வருத்தமாக இருக்கிறது..மோடி யின் எந்த சாதனையை கொண்டு இந்தியா வின் கௌரவம் 100 மடங்கு அதிகரிக்கும் என்று இவர் சற்று விவரமாக சொல்லி இருக்கலாம்.. தேர்தல் வருவதற்குள் கி வீரமணியே மோடியை ஆதரிப்பார் போல இருக்கு.. மதிகெட்ட மானிடர்களை என்ன சொல்வது.. கடவுள் காப்பற்றட்டும் இந்த விட்டில் பூச்சிகளை ..

 • Subin Dev - Colachel,இந்தியா

  இலங்கை பிரச்சனையில் உங்கள் மோடி என்ன செய்வார் அய்யா?

 • abdulrahim - dammam ,சவுதி அரேபியா

  யோவ் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி வரை காங்கிரசின் வாழ் பிடித்து இருந்து நல்ல அனுபவிச்சுட்டு இப்போ மோடிக்கு கால் பிடிகிறியா சரியான சந்தர்ப்பவாதி நீ ''தமிழருவி'' இல்லை சரியான ''புல்லுருவி''

 • p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா

  தவறான கருத்துக்கள் இவருக்கும் நாட்டுக்கும் எந்த நன்மையையும் ஏற்படுத்தாது - பூபதியார்

 • Longin Ignatius R - Denver,யூ.எஸ்.ஏ

  கற்பனையில் மிதக்கிறார், கனவுகளில் சஞ்சாரிக்கிறார் தமில்மருவி. விஜயகாந்தும், வைகோவும் அரிசி கொண்டாரு- வாங்களாம் பிஜேபி உமி கொண்டாருமாம் எல்லாத்தையும் ஒண்ணா கலந்து ஊதி,ஊதி திம்பாங்களாம். 2016 வைகோ அவரு இல்லேன்னா விஜயகாந்த் முதல்வராம். ஆஹா எவ்வளவு இன்பமான கனவு. அதெல்லாம் சரி, மோடியை ஹிட்லரோடும், கருணாநிதியோடும் ஒப்பிடுகிறாரே. அப்போ மோடி நல்லவரா, கெட்டவரா? பொழப்ப பாருப்பா.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  எங்களுக்கு கௌரவம் ஏதும் வேண்டியதில்லை... விலைவாசியை எத்தனை மடங்கு குறைப்பார்..ஊழல் பெருச்சாளிகள் எத்தனை பேரை தோலுரித்து காட்டுவார்.. அவரகளுடைய சொத்துக்களை பறிமுதல் செய்து அரசு கஜானாவில் சேர்ப்பார்..

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  நாங்கள் பாஜக ஆதரவாளர்கள் தான். ஆனால் நம் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை ராணுவத்திடம் காட்டிக் கொடுத்து துரோகம் செய்த இலங்கை தமிழர்களுக்கு யார் வக்காலத்து வாங்கினாலும் எங்கள் ஒட்டு அவர்களுக்கு இல்லை. திரு வைகோ அவர்கள் ஈழப் பிரச்சனையை முன்வைக்காமல் இத்தனை ஆண்டு காலம் நம் தமிழ்நாட்டு மக்களுக்காக போராடியிருந்தால் இவர் செல்வாக்கு உயர்ந்திருக்கும் .முதல்வர் பதவி கூட கிடைத்திருக்கும்

 • Rss - Mumbai,இந்தியா

  பாஜக ,தேமுதிக, மதிமுக கூட்டணி ஒகே தான் . ஆனால் இலங்கை தமிழர்களுக்காக நாங்கள் ( பாஜக ஆதரவாளர்கள் ) இந்த கூட்டணியை ஆதரிக்க முடியாது . துக்ளக் சோ கூறியது போல் ஈழத்தை வைத்து மக்கள் வாக்களித்தால் திரு வைகோ அவர்கள் என்றோ முதல்வர் ஆகியிருப்பார் .

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  ஐயா..,நீங்கள் இலங்கை தமிழர்களுக்கு வக்காலத்து வாங்கி மதிமுக வை ஆதரிக்க சொன்னால் எங்கள் ஓட்டு உங்களுக்கு இல்லை . மோடி பிரதமரானாலும் இலங்கை தமிழர் பிரச்னையில் தலையிட மாட்டார் என்பது உறுதி

 • R.Subramanian - Chennai,இந்தியா

  தமிழருவி மணியன் அவர்களின் இந்த பேட்டியை ஏற்க முடியவில்லை. முக்கியமாக வைகோவை பற்றி அவர் சொல்லுவது முற்றிலும் தவறாக உள்ளது... தமிழகத்தில் பிரிவினையும் தேச துரோக செயல்களை கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் செய்யும் வைகோ எப்படி கறைபடியாத மனிதராக இருக்க முடியும், ஒரு நேர்மையில்லாத மனிதரால் தான் தேச துரோக செயல்களை செய்யமுடியும் நல்ல அரசியல் தலைவர்களால் இம்மாதிரியான செயல்களை நிச்சயம் செய்யமுடியாது, தேச துரோக செயல்களே மிக பெரிய கரை தானே... நாட்டின் பிரதமரை கொன்றவர்களை ஆதரிக்கு வைகோவுக்காக தமிழருவி மணியன் பேசுவது தவறு

 • Giri Srinivasan - Chennai,இந்தியா

  இவருகிட்டத்தான் 272 M P க்கள் உள்ளனர். மோடிய பிரதமர் ஆக்காம விடமாட்டாரு போல .....????????

 • vandu murugan - chennai,இந்தியா

  நீங்கள் பிரதமர் ஆனால் 500 மடங்கு உயரும்

 • Rockes Porte - Trichur,இந்தியா

  நான் ஒரு இளைஞன் + மத சார்பற்றவன் எல்லா மத நண்பர்களும் நல்ல வழியில் வாழனும் என்ற வகையில் இவரின் பேட்டியை 90% ஆதரிக்கிறேன்.அதேநேரம் விசயகாந்த் சற்று தெளிவு பெற வேண்டும் என நினைக்கிறேன்.வைகோ உண்மையில் கறைபடியாத தன்னடக்கமிக்க மிகச்சிறந்த பேச்சாளர்.அவரை அரசியல் பழிவாங்கும் எண்ணத்தில்தான் இரண்டு திராவிட கட்சிகளும் பந்தாடின, பந்தாடப்படுகின்றன. ஆனால் நாளைய அரசியல் நிச்சயம் ஒரு தனிமனித ஒழுக்கத்தின் வெளிப்பாடாக அமையும் என்பதில் எவ்வித அச்சமும் இல்லை காரணம் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பில் பல பெருந்தலைகள் உருளும். காமராசர், எம்ஜிஆர்க்கு பின் சொல்லும்படியாக எந்த ஆட்சியாளர்களும் இல்லை

 • ரகு - chennai ,இந்தியா

  நல்லது நடந்தால் நல்லது. கோழி புரியானிக்கும் குவாட்டருக்கும் அடிமை மக்கள் இருக்கும் வரை ஊழல் கட்சிகளுக்கு என்ன கவலை.... ? சிதம்பரம் ஜெயித்ததே சிதம்பர ரகசியம்.

 • Dkodeeswaran Kodees - ADIRAMPATTINAM,இந்தியா

  மோடி தான் அடுத்த பிரதமர், நான் மட்டுமல்ல என்நண்பர்கள் அனைவரும் மோடியை ஆதரிக்கின்றனர், தங்கள் முயற்சி நிச்சியம் வெற்றி பெரும் மணியன் அய்யா அவர்களே.

 • Ravirajan - Riyadh,சவுதி அரேபியா

  கண்டிப்பாக இந்த (பிஜேபி+வைகோ+விஜயகாந்த்) கூட்டணி அமைய வேண்டும் தமிழருவி மணியன் அவர்களுக்கு எனது மிக்க நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன்,,.....காங்கிரஸ் ஆட்சி அகற்றப்பட வேண்டும்... பிரதமர் நல்லவர் ஆனால் அவரை சோனியா மற்றும் காங்கிரஸ் ஜால்ராக்கள் செயல்படவிடுவதில்லை.... அ.ரவிராஜன் ரியாத் - சவுதி அரேபியா

 • MANUSHI - chennai,இந்தியா

  இனியும் மக்கள் ஏமாந்து ஒட்டு போடுவார்களா என்ன.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  தமிழருவி மணியன் அவர்களின் கூற்று நூற்றுக்கு நூறு உண்மை ஜி.எஸ்.ராஜன் சென்னை .

 • Smr Marichamy (சீ.மா.ரா மாரிச்சாமி) - Coimbatore,இந்தியா

  தமிழருவி மணியனின் ஒரே நோக்கம் தமிழ் நாட்டில் மீண்டும் திமுக தலை தூக்காமல் இருக்க வேண்டும் என்பதே.

 • m.s.kumar - chennai,இந்தியா

  தற்சமயம் தேவை மதிப்பு மட்டும் அல்ல , தெளிவான கொள்கை , திட்டம் , நாட்டை முன்னேற்ற பாதையில் வழி நட்டதும் சீர்மிகு தலைமை பண்பு ஆகும்

 • Vinod - Bangalore,இந்தியா

  பஜக, மதிமுக கூட்டனியை நான் மிகவும் எதிர் பார்கிறேன். வைகோ, மோடி அவர்கள் நீச்சயம் நம் நாட்டை காப்பார்கள். சிறுபான்மை சிறுபான்மை என்று நாட்டை ஏமாற்றி அழித்த காங்கிரஸ் வெற்றி பெறவே கூடாது.

 • Krish - delhi,இந்தியா

  தமிழருவி மணியனின் ஒரே நோக்கம் தமிழ் நாட்டில் மீண்டும் திமுக தலை தூக்காமல் இருக்க வேண்டும் என்பதே. ஆகவே பிஜேபி, தேமிதிக்க, மதிமுக இணைந்த கூட்டணியை உருவாக்குவதன் மூலம் விஜயகாந்த் திமுகவுடன் சேர்வதை தடுத்து விடலாம். பிஜேபி- தேமுதிக- மதிமுக கூட்டணி சுமார் 20% வாக்க்குகளை பெரும். நாகர்கோயில் தொகுதியில் மட்டுமே பிஜேபி வெற்றி பெரும். தேமுதிக மதிமுக பூஜ்யம்தான். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்ற ஒரே காரணத்துக்காக திமுக படுதோல்வியை அடையும். காங்கிரஸ் புதுசெர்ரி தொகுதியில் மட்டுமே வெற்றி பெரும். திமுக காங்கிரஸ் மற்றும் மற்ற சிறிய கட்சி கூட்டணி சுமார் 32% சத வாகுகளை பெரும். ஆகவே மும்முனை போட்டி என்று வந்தால் அண்ணா திமுக கூட்டணி தமிழ்நாட்டில் சுமார் 44% வோட்டுகளை பெற்று 38 எம்பி தொகுதிகளை கைப்பற்றும்.

 • Srinivasan Kannaiya - muscat ,ஓமன்

  இவ்வளவு நாள்கள் எங்கே போய் இருந்தீர்கள்... இதெல்லாம் அப்பொழுதே தெரியாதா..

 • Saravanan - Michigan,யூ.எஸ்.ஏ

  மணியன் அவர்களின் இந்த முயற்சிக்கு பாராட்டுக்கள். மத்தியில் வைகோவின் கரங்களை பலப்படுத்துவது தமிழர்களின் கடமை. ஆனால் ப.ஜ.க வில் சுப்ரமனியாசாமி இருக்கிறார். இவர் வைகோ வுடன் கூட்டணியை விரும்ப மாட்டார் என்றே நினைக்கிறேன். தமிழகத்தில் மோடி அலை வீசினாலும் தனித்து போட்டியிட பலம் இல்லை. விஜயகாந்த்தோடு கூட்டணி வைத்தாலும் ஒரு சில தொகுதிகளை வேண்டுமானால் கைப்பற்றலாம். ஒருவேளை இந்த மூவர் கூட்டணி அமைந்தால் 20 முதல் 25 இடங்களை வெல்ல வாய்ப்பு இருக்கிறது. இல்லை என்றால் அ.தி.மு.க. வே எல்லா இடங்களிலும் வெல்லும். நன்றி.

 • B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்

  வைகோ நேர்மையானவராக இருக்கலாம், ஆனால் ஆட்சி நடத்துவதற்கு நேர்மை மட்டும் அல்ல, நிர்வாக திறமையும் வேண்டும். காமராஜரும் ராஜாஜியும் இதற்கு உதாரணம். வைகோ தன் கட்சியை நடத்தும் அழகு, உணர்ச்சியின் உச்சத்தில் எடுக்கும் முடிவுகள், ஆட்சியை அவர் கையில் கொடுத்தால், அமைதியை விரும்பும் தமிழகத்தில், பிரச்சினைகளைத்தான் உருவாக்கும்..

 • RAMAN - Chennai,இந்தியா

  தமிழகத்தை பொறுத்த மட்டில், ஜெயா அதிகம் சீட் ஜெய்த்தால்தான் தமிழகத்துக்கு நல்லது. நான் எதிர்பார்க்கும் கூட்டனி "அதிமுக, பிஜேபி, மதிமுக", ஜெயாவிற்கு கம்முநிஸ்ட் கடமை பட்டிருகிறது. ஆகையால் விஜயகாந்தை காங்கிரஸ், திமுக வுடன் சேரவிடாமல், "DMDK, CPI, CPM, other small parties" ஒன்னு சேர்ந்து, ஓட்டை பிளந்து, பிஜேபி, ஆதிமுக கூட்டனி வெற்றிபெற செய்வார்கள்.

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  வரும் தேர்தலில் மக்கள் திரும்பவும் காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்கு அளித்தால், எந்த ஆண்டவனாலும் இந்தியாவை காப்பாத்த முடியாது......மணியன் அவர்கள் அப்படிப்பட்ட ஒரு அபாக்கிய சூழ்நிலை வரக் கூடாது என்று பாடுபடுகிறார்...

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  பா.ஜ.க. ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தவுடன் மணியன் மீது எவ்வளவு கண்டனங்கள், பாய்ச்சல்கள். அப்பப்பா. இதுகாறும் பொது வாழ்வில் நேர்மையாளராக இருந்துள்ளார், ஊர் சொத்தை கொள்ளை அடிக்கவில்லை. ஆனால், அது எல்லாம் மறந்து விட்டது. பா.ஜ.க.வை தொட்டவுடன் அவர் பாவியாகி விட்டார். ஊரை அடித்து உலையில் போட்டு, பா.ஜ.க.வை திட்டியிருந்தால் மணியன் நல்லவர். அப்படிதானே. இப்போது புரிகிறது. தவறு அரசியல்வாதிகளிடம் இல்லை. மக்களிடம்தான் இருக்கு......

 • nagainalluran - Salem,இந்தியா

  வேண்டாம் வேண்டாம்னு கத்தியும் வலிய வலிய போயி பேசி பாகிஸ்தான் நம்மை கிராமத்து பெண் போல் அழுகிறார்கள் என்று அசிங்க படுத்தியும்,, அப்படி சொல்லவே இல்லை என்று கயிறு திரித்தார்கள். அப்படி சொன்னதை, பாகிஸ்தான் மெடிஆகலும் பத்திரிகைகளும் ஆதாரத்துடன் போட்டுவிட அதெல்லாம் சும்மனாச்சுக்கு என்றார்கள். எல்லாம் மத சார்பின்மை படுத்தும் பாடு. இதில் கவுரவம் பாக்கணுமாம். மண்ணு மோகன் வெச்சிருக்கார். கேளுங்க. ஒரு ரூபாய்க்கு மூணு கிலோ கவுரவம்.

 • Rajavel - Singapore,சிங்கப்பூர்

  எந்த நேரத்தில் சாத்தியமோ, அதை அந்த நேரத்தில் சாத்தியமாக்க வேண்டும். இது தான் அரசியல். இலங்கை தமிழர்கள் விசயத்தில் மட்டும் ஏன் அப்படி யோசிக்க மாட்டேன் என்கிறீர்கள்.

 • suman - lucknow

  போலி மதசார்பின்மை பேசும் முடர்களே உண்மையை உணர்வதற்கு ஏன் தயக்கம் பொம்மை அரசை தூக்கி எறிவதற்கு உதவுங்கள்

 • SURESH SUBBU - Delhi,இந்தியா

  3 வது அணி என்பது நாட்டிற்கு பிடித்த சனி எப்பொழுதுமே. அது மட்டும் இல்லாமல் மத்தியில் ஒரு நிலயான, உறுதியான, மக்கள் நம்பிக்கையை பெற்ற ஆட்சி இருந்தால் தான் நல்ல திட்டங்களும், நல்ல சட்டங்களும் மக்களுக்கு பயன்படும் விதத்தில் வரும். இல்லை என்றால் நாட்டில் குழப்பங்கள் தான் அதிகரிக்கும்.. அது எல்லை முதல் பொருளாதாரம் வரை....

 • DHAYANIDHI - LONDON,யுனைடெட் கிங்டம்

  தன்னலம் கருதாத பொது வாழ்வில் தூய்மையை போற்றும் வைகோ அவர்களை ஆதரிக்கும் .. அரசியலில் நேர்மையை வலியுறுத்தும் தமிழருவி அவர்களை தமிழர் தம் நெஞ்சில் என்றென்றும் போற்றுவார், மு. தயாநிதி லண்டன் ,

 • NavaMayam - New Delhi,இந்தியா

  காந்தி , காமராஜ் ஆகியோரின் கொள்கைக்கு எதிரான ஆர் எஸ் எஸ் சின் செல்ல பிள்ளை மோடியை இவர் ஆதரிப்பது , படிப்பது ராமாயணம் இடிப்பது பெருமாள் கோவில் என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகிறது.... மன்மோகன் சிங் ஆட்சியால் 1990 க்கு பிறகு இந்தியாவின் மதிப்பு ஆயிரம் மடங்கு வுயர்ந்துள்ளது என்பதை இவர் காந்தி கண்ணாடி போட்டு பார்த்தல் தான் தெரியும்.... இருட்டில் எரியும் மின்விளக்கு கண் கூசுகிறது என்று கூலிங் கிளாஸ் போடுபவருக்கு அது தெரியாது.... ஊழல் மட்டுமே கண்ணுக்கு தெரியும் பொது அதுவும் அப்படித்தான் .... நேற்று ஆடிட்டர் ஜெனரல் அறிக்கை , மூன்றில் ஒரு குழந்தை குஜராத்தில் எடை குறைவான பிள்ளை , குறைந்த அளவு உணவு கூட இல்லாத குழந்தை என்று வந்துள்ளது , அதை மோடி அமைச்சரும் ஒத்து கொண்டுள்ளார்....மற்றொன்று குஜராத் பாகிஸ்தான் எல்லையில் மாநில அரசின் கண்காணிப்பு திருப்தி கரமாக இல்லை என்று....கக்கூஸ் கட்டுவேன் என்று சொல்லும் மோடி அதை உபயோக்கிக்க முதலில் உணவு வேண்டும் என்று எண்ண தோன்றவில்லை ... அதை காங்கிரஸ் உணவு பாது காப்பு சட்டம் மூலம் அளிக்க விளைகிறது.... காந்தி யின் பெயரில் அரசியலில் கள்ள கணக்கு போட வேண்டாம்....

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement