dinamalar telegram
Advertisement

நெல்கட்டும்செவலில் பூலித்தேவர் பிறந்த நாள் விழா

Share
சிவகிரி : நெல்கட்டும்செவலில் முதல் சுதந்திர போராட்டத்திற்கு முழக்கமிட்ட மாமன்னர் பூலித்தேவரின் 295வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
நெல்கட்டும்செவல் உள்ளமுடையார் கோயில் முன் நடந்த பூலித்தேவரின் 295வது பிறந்த நாள் விழாவிற்கு மாமன்னர் பூலித்தேவர் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் நடராஜன் தலைமை வகித்தார். செயலாளர் வேலாயுதசாமி வரவேற்றார். இயக்குநர் மனோஜ்குமார் தொகுத்து வழங்கினார்.
விழாவில் தமிழ் தேசிய இயக்க தலைவர் பழநெடுமாறன், கவிஞர் காசியானந்தன், சாமித்தோப்பு பலபிரஜாபதி அடிகளார், ஓவியர் சந்தானம், வாசு., எம்.எல்.ஏ., டாக்டர் சதன் திருமலைக்குமார், மறுமலர்ச்சி மக்கள் தமிழகம் கட்சியின் பொது செயலாளர் துரை அரசன், தேவர் பேரவை தலைவர் ராமகிருஷ்ணன், கோட்ட மின்பொறியாளர் (ஓய்வு ) சிவகிரி பாஸ்கரவேலு, மாநில விவசாய சங்க தலைவர் சின்னச்சாமி, இயக்குநர் அதியமான், நடிகர்கள் கர்னாஸ், செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பூலித்தேவன் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் புதிய பார்வை ஆசிரியர் டாக்டர் நடராஜன் பேசியதாவது:- ஆங்கிலேயர்களுக்கு பயந்து அனைத்து குறுநில மன்னர்களும் வரி, கப்பம் செலுத்திக் கொண்டிருந்தனர். வரி, கப்பம் கொடுக்க மறுத்து முதல் சுதந்திர போராட்டத்தை நடத்தியவர் தான் மாமன்னர் பூலித்தேவர். அவர் ஆட்சியில் சிறப்பாக நிர்வாக திறமையும் ஆற்றியுள்ளார். பல்வேறு சமூக மக்களை ஒருங்கிணைத்து சமூக ஒற்றுமைக்கு வித்திட்டவர் அவர். ஒண்டிவீரன் பகடையையும், வென்னிக்காலடி என்ற தாழ்த்தப்பட்ட தளபதியையும் தனக்கு வலப்புறமும், இடதுபுறமும் வைத்து அழகுபார்த்தார்.
போர்க்களத்தில் வென்னிக்காலடி என்ற தாழ்த்தப்பட்டவரின் மார்பில் வாள் பாய்ந்தபோது அவரின் உயிர்காக்க மார்பில் சொருகிய வாளினை எடுத்து உடலில் இருந்து பெருகி வரும் ரத்தத்தினை நிறுத்தி உயிர்காத்தவர்தான் பூலித்தேவர். ஏதோ முன்பகை காரணத்திற்காக கடந்த காலத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மறந்து அனைவரும் ஒற்றுமையாகவும், ஓரின மக்களாகவும் வாழ வேண்டும். அனைவரும் நன்றாக படிக்க வேண்டும். பிற சமூகத்தினரோடு மோதாமல் அறிவினை வளர்க்க வேண்டும்.
இங்குள்ளவர்கள் தங்களது ஆட்சியை காப்பாற்றி கொள்வதற்காக இலங்கை தமிழர்களை காப்பாற்ற மறந்துவிட்டார்கள். இந்தியாவிலும், தமிழகத்திலும் இருண்ட ஆட்சி நடந்து வருகிறது. இதனை நாம் மாற்ற வேண்டும். ஒரு குடும்பத்தின் கீழ் அனைத்து தொழில்களும், வளங்களும், செல்வங்களும் சென்று கொண்டிருக்கிறது. இதனை மீட்பதற்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும். கிராம மக்கள் முன்னேற்றம் இல்லாமல், வாய்ப்பு வசதியில்லாமல் கஷ்டப்படுகின்றனர்.
மக்கள் அனைவரும் ஜாதி, மத உணர்வுகளை மறந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும். உரிமையை யாருக்கும் விட்டுக் கொடுக்காமல் சுதந்திர உணர்வுடன் இருக்க வேண்டும். இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று திமுக அரசு உருவாகுவதற்கு நாங்களும் காரணமாக இருந்தோம். அதனால் தமிழகத்தில் திமுக ஆட்சி ஏற்பட்டது. அதுபோல் தமிழகத்தில் கடந்த காலங்களில் ஜெயலலிதா ஆட்சி ஏற்பட்டதற்கும் காரணமாக இருந்தோம். அரசியலில் நாங்கள் அங்கீகாரம் பெற்றிருக்கிறோம். வரும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் பழ நெடுமாறன் பேசியதாவது:- முதல் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவர் மாவீரன் பூலித்தேவர் ஆவார். அவரது வரலாறு அனைத்தும் மறைக்கப்பட்டுள்ளன. பக்கத்தில் இருக்கும் இலங்கையில் தமிழர்களை ராஜபக்சே அரசு பயங்கரமாக கொடுமைபடுத்தி கொன்று தீர்த்தது. அம்மக்ளுக்காக தோள் கொடுத்து துணையாக இருந்த பிரபாகரனை கொன்றுவிட்டதாக அவர்கள் கூறுகிறார்கள். அவர் இன்னும் உயிரோடு இருக்கிறார்.
மீண்டும் 5வது கட்டமாக ஈழப்போராட்டத்திற்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக அவர் வருவார். பூலித்தேவர் பிறந்த நாள் நிகழ்ச்சியை அரசு கொண்டாடி இருக்க வேண்டும். இதனை வன்மையாக கண்டிக்கிறேன். இதனை நடத்திய டாக்டர் நடராஜனை பாராட்டுகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Dinamalar iPaper

Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • mahendran - dhahran,சவுதி அரேபியா

  அது சரி தமிழின தலைவருக்கு புலித்தேவன் தமிழராக தெரியவில்லை போலும், இல்லை புலி என்ற பேருக்கு பயமா என்று தெரியவில்லை. இதே திராவிட கட்சியை சார்ந்த நபர் என்றால் மக்கள் வரி பணத்தை வாரி இறைத்திருப்பர். நம் சந்ததிகள் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாறு

 • சுரேஷ்.வாசு - dubai,இந்தியா

  அரசு எடுத்து நடத்த வேண்டிய விழா இது..

 • சுப்ரமணியன்.n - mumbai,இந்தியா

  புலிதேவரின் வரலாறு சாதியின் பெயரால் மறைக்கப்பட்டது

 • அஹ்மத் - qatar,இந்தியா

  dear writter vasudevanllur (reserve aseemply unit ) also in nellai dist only just for remember u.

Advertisement