Advertisement

ஜிகினா போராளிகள் - திருந்துவரா நம் மக்கள்? உரத்த சிந்தனை, எல்.முருகராஜ்

ஒரு வழியாக, "தலைவா' படம் தியேட்டருக்கும் வந்துவிட்டது. இனிமேல் கடலில் கலந்து வீணாய் போன, 6 டி.எம்.சி., தண்ணீர் திரும்ப கிடைத்து விடும், எல்லை மீறி வந்து பாக்., படையினர் தொல்லை கொடுக்க மாட்டார்கள், முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில் நல்ல தீர்ப்பு கிடைத்து விடும், இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவர்...
அடப்போங்கய்யா... ஏற்கனவே, பல கோடி ரூபாய்க்கு வியாபாரம் பார்த்தாகி விட்ட படத்திற்கு, தமிழகத்தில் கிடைக்கப் போவது லாபப் பணமே. அதிலும், ஏதாவது வரிவிலக்கு கிடைக்குமா என்று பார்த்தனர்... அதற்கு வழியில்லை, அந்த வகையில், 3 கோடி ரூபாய் நஷ்டம் வரும். அதை யார் ஏற்பது என்பதில் தான், "நெஞ்சுவலியே!' மற்றபடி, உண்ணாவிரத போராட்டமெல்லாம் ஒரு உதார் தான். எங்கே அனுமதி கொடுத்துவிடுவரே என்று பயந்து கொண்டே தான், மனுவே கொடுத்தனராம்; நல்லவேளையாக அனுமதி கிடைக்கவில்லை. இல்லையென்றால், அமலாபால், சந்தானம் இவர்கள் எல்லாம் உண்ணாவிரதம் இருந்து, உண்ணாவிரதத்தின் புனிதத்தையே கெடுத்து காமெடியாக்கி இருப்பர்; தப்பித்தது தமிழகம். அரசியல் காரணங்களால் படத்திற்கு தடை என்பதும் தமாஷே! "நீயா தலைவனா வரலை; மக்கள் தான் உன்னை தலைவனா வரச்சொல்றாங்க'ன்னு, மகேந்திரன் பேசும் வசனத்தை வேண்டுமானால் அரசியலில் சேர்த்துக் கொள்ளலாம். "படத்தில் ஒரு துளி அரசியல் இல்லை' என்று, அப்பாவும், பிள்ளையும் காலையிலும், மதியத்திலும், இரவிலும் அறிக்கை மேல் அறிக்கை விட்டு கொண்டிருந்தனர். அட அட்டைகத்தி வீரர்களா... படத்தில் அரசியல் இருக்கக் கூடாது என்று யார் சொன்னது? அரசியலே சினிமாவாக வந்த, "முகமது பின் துக்ளக்' போன்ற படங்கள் வந்த ஊர்தானே இது. உங்க படத்தில் அரசியல் இல்லை தான்... அப்படியே இருந்தால், "ஆமாம் நாட்டிற்கு தேவையான அரசியல் இருக்கிறது' என்று துணிந்து சொல்ல வேண்டியது தானே. அதைவிட்டு, "அரசியல் சுத்தமா இல்லீங்க' என்று சொல்ல, கொடநாடு வரை போய் அசிங்கப்பட்டு திரும்புவது எல்லாம் தேவைதானா? இப்ப என்னாச்சு நீங்க துப்பாக்கியில் பேசின, "அந்த பயம் இருக்கணும்' என்ற வசனம், இப்ப உங்களுக்கு தானே ரொம்பவே பொருந்துகிறது.

ஒரு படத்தைப் பார்த்து எடுத்தால் தானே, "திருட்டு' என்பர். பல படத்தை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாய் திருடினால், திரட்டு என்பார்களோ? என்னவோ தெரியவில்லை... "நாயகனில்' ஆரம்பித்து, "தேவர் மகன்' வரையிலான படங்களில் இருந்து சுட்டதை வைத்து உருவாக்கின கதை தான், "தலைவா' என்ற பெயரில் கந்தலாகியுள்ளது. உங்க பிரச்னைக்கு நடுவில, கோவை ரசிகன் ஒருத்தன் உங்க படத்தை தியேட்டர்ல பார்க்க முடியலங்கற கவலையில, தூக்கு போட்டு செத்தே போனான். படம் பார்த்து இருந்தாலும், இதே முடிவு தான் எடுத்திருப்பான்ங்றது ஒரு தரப்பினர் வாதம். அது வேறு விஷயம்... ஆனா, செத்துப் போன ரசிகனுக்கு ஓடிப்போய் அனுதாபம் தெரிவித்து, இழப்பீடு கொடுத்து அவனது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லாவிட்டாலும் பரவாயில்லை... ஆனால், ஒரு இரங்கல் கூட தெரிவிக்காத அளவிற்கு நீங்க பட்ட கவலை அவ்வளவு சரியாகப்படலை. இந்த அட்டை கத்தி ஹீரோக்களை, எப்போது தான் ரசிகர்கள் அடையாளம் கண்டு கொள்ளப்போகின்றனரோ!

முதல்ல, சினிமா பார்க்கப் போனால், பார்த்த சினிமாவை தியேட்டரோடு விட்டுவிட்டு வரவேண்டும். அதை வீட்டுக்குள் கொண்டு வருவதால் தான் இத்தனை வினையும். அவர்கள் கொண்டு வராவிட்டாலும், இப்போதும் வீட்டின் வரவேற்பறைக்கு, "டிவி'களும், மொபைல், ஐபேட் போன்ற மின்னணு பொருட்களும், உங்கள் பைக்குள் கொண்டு வந்து, விஷத்தை துப்பும் காலமாக இருக்கிறது. ரஜினி, ஒரு காலத்திலும் நிஜத்தில் சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயில் பிடித்தது இல்லை. ஆனால், அவரது ரசிகர்கள் தான், அந்த வேலையை செய்து, உதட்டை இன்னமும் புண்ணாக்கி கொண்டு இருக்கின்றனர். 80களில் நன்றாக இருந்த இளைஞர்களில் பலரை, சிகரெட் பிடிக்கவும், குடிக்கவும் வைத்த பெருமை, ரஜினியையே சேரும். அதற்கு பிராயச்சித்தமாக அவர், ராகவேந்திரராக மாறினாலும், அவரது ரசிகர்களுக்கு அவரை பரட்டையாகத் தான் பிடித்துப் போய் விட்டது. கமல், "நான் வீட்டை விற்கப் போகிறேன்... நாட்டை விட்டு போகிறேன்' என்றவுடன், கவுதமியை விட, அதிகம் உணர்ச்சிவசப்பட்டவன் நமது ரசிகன் தான். ஏதோ அந்த வீட்டை வாங்கும் போது, இதே போல மீடியாவில் தோன்றி, "நான் இந்த படத்தில் நடித்ததன் மூலம் வாங்கிய வீடு' என்று, இவர்களிடம் சொல்லிவிட்டு வாங்கிய வீட்டை, இப்போது விற்கப் போவது போல, வீட்டிற்குள் கமலும், வெளியில் ரசிகர்களும் வைத்த ஒப்பாரி அதிகம் தான். இந்த ஒப்பாரியை, மும்பை வரை கொண்டு போய் வைத்தது, இன்னமும் அசிங்கம்.

மதுரையில் நடந்த, "விஸ்வரூபம்' இசை வெளியீட்டு விழாவிற்காக, ரயிலேறி வந்திருக்கலாம்... பெரிய ஆளுகங்றதுனாலே விமானம் ஏறி வந்துருக்கலாம் தப்பில்லை. ஆனால், ஹெலிகாப்டரில் கதாநாயகியுடன் வந்துவிட்டு, "100 கோடி போட்டு இருக்கேன்' என்று மீடியாவிடம் கதறினால் என்ன அர்த்தம். படத்திற்கு, 10 கோடியும்; புதுக்கதாநாயகியுடன் ஹெலிகாப்டரில் சுத்தியதற்கு, 90 கோடியும் செலவானால், அப்புறம் வீட்டை விற்கத்தான் வேண்டியிருக்கும். இதில் என்ன வேடிக்கை என்றால், "யாரால்' பிரச்னை என்று, 10, 15 நாள் புலம்பினார்களோ, அவர்களுக்குதான் முதல் நன்றியை, பிரச்னை தீர்ந்ததும், கமலும், விஜயும் முந்திக் கொண்டு கூறினர். காரணம், மறுபடியும் பிரச்னையாகி விடக் கூடாதல்லவா?

கப்பலோட்டிய தமிழனையும், வீரபாண்டிய கட்டபொம்மனையும், சினிமா மூலமாகத் தான், தமிழன் ஒரு காலத்தில் அடையாளப்படுத்திக் கொண்டான். அது சாதனை என்றால், அதே தமிழன், "கண்டபடி கட்டிப் பிடிக்கவும்' அதே தமிழ் சினிமாவை துணையாக்கிக் கொண்டது தான் வேதனை. ஆகவே, கோபம் சினிமா மீதல்ல... அதை சரியாக பயன்படுத்தாமல் வீணாக சீன் போடும் அட்டை கத்தி வீரர்கள் மீது தான்! எல்லாரும், எம்.ஜி.ஆராக ஆசைப்படுகின்றனர்... அது தப்பில்லை! ஆனால், "ஒளிவிளக்கு' படத்தில், ஒரு காட்சியில் குடிகாரனாக, மது பாட்டிலுடன் நடித்துவிட்டு, அதற்காக பல காலம் வருந்தியவர் அவர். விற்பனைக்கான கற்பனை உலகமே அது என்றாலும், அதிலும் கற்பை கடைபிடித்தவர் அவர்... "நம்மைப் பார்த்து ரசிகர்கள், கெட்ட பழக்கங்களுக்கு ஆளாகிவிடக் கூடாது' என்பதில் கவனமாக இருந்தவர் அவர். ஆகவே, அவர் நிஜ ஹீரோவாக மக்கள் மன்றத்திலும் ஆட்சி செய்தார்.


ஆனால், நிஜத்தில் எந்நேரமும், "சிவந்த கண்களுடன்' நாக்கை துருத்தி, கையை ஓங்குவதும், திட்டுவதும், அடிக்க பாய்வதுமான செயல்பாடுகளை செய்துவிட்டு, "நான் கறுப்பு எம்.ஜி.ஆர்.,' என்று சொல்லிக் கொள்வது, அவ்வளவு பொருத்தமாக படவில்லை. பக்கம் பக்கமாய் ஊழலுக்கு எதிராக, நீங்கள் பேசிய வசனங்களையும், கொடுத்த புள்ளி விவரங்களையும், எல்லையில் தொல்லை கொடுக்கும் எதிரி படையினரை பந்தாடிய வேகத்தையும், ஏழைகளுக்கான திட்டங்களை தந்த விவேகத்தையும் கண்டு வாய்பிளந்ததன் காரணமாகத் தான், வாழ்நாளெல்லாம், "மைக்' முன் ஆவேசமாக பேசும் வைகோவிடம் கூட கொடுக்காத எதிர்க்கட்சி தலைவர் பதவி அந்தஸ்தை, உங்களிடம் மக்கள் தூக்கி கொடுத்தனர். ஆனால், சினிமாவில் பேசிய வசனத்தையும், வீரத்தையும் இந்த இரண்டு ஆண்டுகளில், சட்டசபையில் ஒரு துளிகூட காட்டவில்லையே ஏன்? சரி, அங்கு தான் கேமரா, ஸ்டார்ட், ஆக்ஷன் சொல்ல வழியில்லை என்று வைத்துக் கொள்வோம். உங்கள் முழக்கங்களை தெரு முனைகளில் மக்கள் முன் வைத்திருக்கலாமே!

எதிர்க்கட்சி தலைவராக இருந்து, பேசவா பிரச்னையில்லை... தூத்துக்குடி மணல் கடத்தல் பிரச்னை ஒன்று போதாதா நீங்கள் உறுமுவதற்கு... உறும வேண்டாம்... திறந்து விடப்பட்ட தண்ணீர், கடை மடை விவசாயிகளுக்கு போகாத வேதனைக்கு ஆதரவாக, தூர் வாராத ஏரி, கிணறுகளுக்கு எதிராக, நித்தமும் பிடிபடும் தமிழக மீனவர்களின் குரலாக, மைக் பிடித்து செருமவாவது செய்திருக்கலாம். இப்படி, விஜய் முதல், விஜயகாந்த் வரையிலான அட்டை கத்தி வீரர்களை, இந்த உலகம் இன்னமும் நம்பிக் கொண்டிருந்தால், நாடு எப்படி உருப்படும்?

இ-மெயில்: murugaraj2006gmail.com

எல்.முருகராஜ், பத்திரிகையாளர், சிந்தனையாளர்.

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (110)

 • KUNDALAKESI - London,யுனைடெட் கிங்டம்

  யோவ் முருகராசு, எம் ஜி ராமச்சந்திரன் என்னோமோ மகாத்மா ரேஞ்சுக்கு உதாரணமா சொல்லியிருக்க. அந்தாளு தான்யா சாராய கடைய தொறந்தது. எல்லா பயலும் நாட்டை திருத்தி பொது சேவை செய்ய கலைஉலகதுக்கு (கன்றாவி உலகம் ) வரல்ல. அடுத்தவன மொளகா அரைச்சு, வாய் சவடால் விட்டு ஏமாத்தி சம்பாதிக்க தான் வாரானுக. எம் ஜி ராமச்சந்திரனும் ஒரே குட்டையில் ஊறிய மட்டை தான்.

 • Vasu Murari - Chennai ,இந்தியா

  ஒரு நிலைக்குப் பிறகு சினிமாக்காரர்கள் தேடி ஒழிய விரும்பும் பதுங்கு குழிகள்தான் அரசியல். எதோ சில வசனகர்த்தாக்கள் கோர்துத்தரும் வார்த்தை மாலைகளை வசனங்களாக இயக்குனர்கள் சொல்படியும் தனது மனம் சொல்கின்றபடியும் கைகால்களை ஆட்டியும் கண்களை உருட்டி மிரட்டியும் விட்டால் மட்டும் நிஜ வாழ்க்கையில் மக்களுக்குத் தலைவனாகி விடமுடியாது. கட்டுரையாளர் மிகவும் அருமையாக இவைகளை புட்டு வைத்துள்ளார். இருப்பினும், சினிமா பார்த்து கெட்டுப்போகும் மக்களும், சினிமாவையே மீண்டும் மீண்டும் காட்டி மக்களை ஏமாற்றும் கும்பல் இருக்கும்வரை இந்தியா இன்னும் 50 ஆண்டுகள் பின் தங்கியே இருக்கும். வெள்ளைகார வல்லுறுகள் 200 ஆண்டுகள் நம்மை ஆள்கிறேன் என்று சொல்லி சதைப்பற்றான இந்தியாவை அகபரித்துச் சென்றுவிட்டான். எலும்போடு ஒட்டிக்கொண்டு இருக்கும் மிச்சம் மீதி சதைத் துணுக்குகளை சுரண்டித் தின்ன நரிக் கூட்டங்கள் அங்கங்கே கிளம்பி விட்டன. அதன் விளைவுகள்தான் தனித் தெலுங்கான்வும் அதுபோன்ற இதர இடங்களில் இருந்து எழும் கூக்குரல்களும். பட்டேல் அவர்கள் ஒருங்கிணைத்த இந்தியா சிதறுண்டு போய்க்கொண்டு இருக்கிறது. இதன் காரணங்களால் பாகிஸ்தான், சீனா மற்றும் சுண்டைக்காய் நாடுகளான பங்களாதேஷ் மற்றும் ஸ்ரீலங்கா போன்ற அண்டை நாடுகளின் வாலாட்டல்கள். எந்த ஒரு கட்சிக்காரனாவது போர்தொடுத்து வாலாட்டும் நாய்களின் கொட்டத்தை அடக்கலாம் என்று கூக்குரல் விடுகிறானா என்றால் ஒரு ஈனஸ்வரத்தில் கூட அத்தகையவைகளை கேட்க முடிவைதில்லை. மாறாக 2014ல் எவருடன் கூட்டணி வைத்து எத்தனை சீட்டுகளைப் பெற்று அடுத்து வரும் 5 ஆண்டுகளில் எவ்வளவு கல்லா கட்டலாலம் என்பதே இன்றைய அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களின் (பகல்) கனவாக இருந்துகொண்டு இருக்கிறது. கட்டுரை ஆசிரியருக்கும் எனக்கு முன்னால் பதிவு செய்த வாசகர்களுக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

 • Baskar - Tirunelveli,இந்தியா

  அருமையான கட்டுரை .சினிமாவால் இந்ந்த இளைய சமுதாயம் சீரழிகிறது .

 • MONIMEHALAN - nagercoil,இந்தியா

  ரசிகர்கள் என்று பார்க்கும் போது,இன்றும் MGR ரசிகர்கள் தான் வெறியர்கள் என்று ஏராளமான உதாரணங்கள் சொல்ல முடியும். MR ராதா வும் , MGR ரும் ஒரே நடிகர்கள் தான் என்று அன்றைய ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் இன்று வில்லன் நடிஹர்களுகும் ரச்சிகர்கள் இருக்கிறார்கள். நீர் கிராமங்களுக்கு சென்று MGR பற்றி பேசி பாரும், அப்போது தெரியும் அவருடிய திரைப்படம் அவர்களை கவர்ந்ததா? அவருடிய ஆட்சி அவர்களை கவர்ந்ததா என்று?

 • Mohamed Riswan - chennai,இந்தியா

  மிகத்தெளிவான, அர்த்தமுள்ள கட்டுரை. ஆனால் எத்துனை பேரை சென்றடைய போகின்றது? இருப்பினும் மிக்க சந்தோசம்.

 • Mano - Bangalore,இந்தியா

  அருமையான கருத்துகள். ஆனால் விஜய் இரங்கல் தெரிவித்தாகவும் விஜயகாந்த் மணல் கொள்ளை பற்றி ஒரு வருடத்திற்கு முன்பே பேசி விட்டதாகவும் பத்திரிகையில் படித்தேன்.

 • Karthik - Tiruppur,இந்தியா

  இது போன்ற சமூக விழிப்புணர்வும் மக்களுக்கான அறிவுரைகளும் போதிக்க இனி அரசியல் தேவை இல்லை தினமலர் போன்ற பத்திரிக்கைகளால் தான் முடியும் ....... நடுநிலையான கருத்துக்களை தொடர்ந்து துணிவுடன் வெளியிடும் தினமலருக்கு பாராட்டுக்கள். இப்படியாவது நம்ம ஜனம் திருந்துமான்னு எனக்கும் ஒரு நப்பாசை தான்.

 • ramsay - Calgary,கனடா

  I fully go with this article. Well thought out write up. please register often.

 • aron Sekar - morgan hill,யூ.எஸ்.ஏ

  கட்டுரை ஆசிரியர் பாராட்டப்பட வேண்டியவர்தான். இந்த அட்டைக்கத்தி, வெத்து சமூக புரட்சி, வெறிக்காமம், அளவுக்கு மீறிய வன்முறை என்ற பல்வேறு 'உயர் பண்புகளை' தமிழ் மண்ணில் அள்ளித்தெளிக்கும் சினிமா துறைக்கு முக்யத்வம் கொடுத்து விளம்பரம் செய்யும் ஊடகங்களின் 'சுயலாப' நோக்கைப்பற்றியும் ஆசிரியர் சாடியிருக்கலாம்.

 • V Gopalan - Bangalore ,இந்தியா

  Absolutely, he has exposed the ground reality of tamilnadu. Though not any sympathy or affiliation or any party/ties, yet it is point out that he blames only Mr Vijayakanth. After the departures of original congress, two dravidian parties part and patial of cine field only. Former is a dialoge/lyrist while present was a heroine. Again, she being from tinsel world, forgetting her the field from which she came, go on criticising, teasing, telling small stories against Mr Vijayakanth has not been pointed out by Mr Murugaraj. She is suppressing not only opposition parties but none of the party/ties are permitted to speak in the assembly. Even in the horse trading successufully bought some six while some are susped. Yes, mandate was also given to opposition parties but less regard to electorates instead of discussing the real issues of Tamilnadu general public, She and her colleages were a bet who can criticise, tease and how many cases can be booked against Mr Vijayakanth, adding public money in filing cases and ensured that he be run court after court. As Dr Ramadoss in Makkal TV (25th August 2013 at 2000 hrs) he put it thousands of murders,decoites took place and in a recent murder was Mr Asaithambi of DMK. He advised Govt to concentrate on issues and not go after the party/ties. Hence, if Mr Murugaraj without fearing for the ruling party, let him some more clear picture of the present happenings in tamilnadu. Let Mr Murugaraj is also requested to go in Tea Kadai Bench where the bribes, high handedness, corruption in each every department being taking place in the present Govt. As regards, VV Minerals, is going on for decades and the person heavy weight is so close for the ruling party whether it is DMK or AIADMK and such being the case how Mr Vijayakanth can be made as fault. He is yet to grow and cannot swim in between these two dravidian parties. It is also to state that when Govt advocates files case against Mr Vijayakanth for the speech against Govt but at the same time since because Assembly/lies/Parliaments regarded as August house where all the treasury benches criticise, provoke, teach some one by individual and no one can file a case against any ruling party cadre/es for such provocative speech as Constitution or Court will not allow to file a case. Also, why Mr Murugaraj failed to bring the fact that as to how many days the present and Former CM were atted Assembly when they were in opposition, what was the development of state and the Maduravoyal Metro rail is kept ping, the reason for which it is delayed. Also, when Mr Vijayakanth atts Assembly by chance, the treasury benches will be ready to give ammunition speech to please their leader leaving all important issues, irony is that leader will be smiling and it showed that it is being encouraged. Hence, pointing out any one is absolutely is a farce. It is absolutely a real factor that the State is afflicted with tinsel world crazyness, none can deny, this is what Dr Ramadoss time and again advice the people to come out from the Coma of cinema. Hence, it is a request to Mr Murugaraj has to more spade work to wake up the electorates or general public to come out from the dream world and ensure for choosing correct person and for example just look out neighbouring state Kerala the electorates and politicians are so united and ensure welfare of their state. Pointing out for the mistake only on a single person is rubbing the wound with salt. Former CM, had he withdrawn the support when the war was in full swing, at least thousands/lakhs of innocent lives could have been saved and now shedding crocodile tears, why Mr Murugaraj failed to point out for such a blunder mistake and a day is not passed without murder, theft, robbery in tamilnadu, how Mr Murugaraj failed to point out?

 • Srinivasan Sundaraju - Chennai,இந்தியா

  வீரப்பா ஒரு படத்துல சொன்ன மாதிரி “இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்”னு கத்தத் தோணுது

 • Srinivasan Sundaraju - Chennai,இந்தியா

  இந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்.

 • தமிழ் குடிமகன் - போயஸ்கார்டன் ,இத்தாலி

  நான் தியேட்டர்ல போய் படம் பார்க்கும் பழக்கம் இல்லாதவன் ,எங்கே சீக்கிரமா டிவில வந்து அதை நான் பார்த்து எனக்கும் அந்த ரசிகன் நிலைமை வந்துடுமோன்னு பயமா இருக்கு .

 • Ranjith Govindasamy - Karaikal,இந்தியா

  அடேங்கப்பா விஜய் மீது அப்படி என்ன கோபமோ தெரியவில்லை பொழிந்து தள்ளியிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் அட்டகத்தி என்றால் நீங்கள் எல்லாம் "ஏட்டு சுரைக்காய்" என்றால் மிகையாகாது. அடுத்த இதழில் இந்த உரத்த சிந்தனையை மதிப்பிற்குரிய முருகராஜ் அவர்கள் உங்கள் பகுதி ரௌடிகளையோ அல்லது ஊழல் செய்பவர்களையோ பெயரை குறிப்பிட்டு கட்டுரை எழுதி தான் ஒரு "ஏட்டு சுரைக்காய்" இல்லை என்பதை நிருப்பார் என்று நம்புகிறேன்.

 • Mohandhas - singapore,சிங்கப்பூர்

  இந்த கட்டுரையை விஜய் படிப்பாரா?.. நாம் தான் திருந்த வேண்டும்

 • Ram - Muscat,ஓமன்

  நாட்டின் இன்றைய நிலைமிக்கு தேவையான கட்டுரை, வாழ்க திரு.முருகராஜ் & தினமலர், உங்களின் சாட்டையடி இது போன்ற கடுரைக்கல் தினமும் தொடரட்டும்

 • Sundaram - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  Really very good article, I salute Mr.Murugaraj

 • rajpraba - Thanjavur,இந்தியா

  முருகராஜ் உங்களுக்கு ஒரு சல்யூட் தலைவா, தைரியமா உண்மையை எழுதியதற்கு ,இதைப்போல் தொடர்ந்து எழுத்துக்கள் ,எனக்கு இப்பவரைக்கும் ஒன்று புரியவில்லை அவனவன் காசுக்காக நடிக்கிறான் ,இந்த பணத்தில் நமக்கோ அல்லது நாட்டுக்கோ எதாவது பயன் இருக்கிறதா ,இல்லையே ,பின் ஏன் உய்ர் விடுவதும் ,போராட்டம் ,மக்கள் சொத்தை செதபடுத்திகின்ன்ற்றனர் .நாட்டுக்கும் ,சமுக்கத்துக்கும் போராடாமல் தான் தன் குடும்ம்பம் என்று இருப்பவனக்கு போராடுவது யாருக்கு என்ன பயன் இளைனர்களே ,கண்டிப்பாக போரடுக்கள் அது உனக்கும் ,உன் குடும்ம்பதிருக்கும் ,சமுகம் மற்றும் நாட்டு முன்னேற்றதிருக்கும் அது உனக்கும் உன் சமூகத்துக்கும் கண்டிப்பாக பயனாக இருக்கும் .

 • chennai sivakumar - chennai,இந்தியா

  உங்கள் கட்டுரை மிக அருமை. மறைந்த திரு. MGR அவர்கள் நடித்த ஒளி விளக்கு திரைப்படத்தில் குடியால் வரும் தீமை பற்றியும் விளக்கி இருப்பார். இங்கு ஒன்றை குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன். இது எப்போதோ படித்த நினைவு.அமெரிக்காவில் ஒரு குறிப்பிட்ட சுருட்டு விற்பனை தீடீர் என்று குறைந்து விட்டது. உடனே கம்பனி அதிகாரிகள் மண்டையை பிச்சுக்கொண்டு காரணத்தை ஆராய்ந்தனராம்.விடை: அப்போது வெளி வந்த ஒரு திரைப்படத்தில் வில்லன் ஆக நடித்தவர் அந்த குறிப்பிட்ட பெயர் கொண்ட அந்த சுருட்டை புகைப்பார்.ஓஹோ அதனால் தான் விற்பனை குறைந்தது என்று அதிகாரிகள் தங்கள் உயர் அதிகாரிகளுக்கு தெரிய படுத்தினராம்.இதை எதற்காக கூறுகிறேன் என்றால் எல்லா நாட்டிலும் சினிமா என்ற தாக்கம் இருக்கிறது. இந்தியாவில் அது ooooover . மக்களாக தங்கள் கூறியது போல திரைஅரங்கை விட்டு வெளி வரும்போது அந்த நினைவை விடவில்லை என்றால் விமோசனம் நிச்சயம் இல்லை.

 • மும்பை தமிழன் - mumbai,இந்தியா

  அருமையான கருத்துக்கள் வாழ்த்துக்கள்

 • kuruvi - Rajapalayam,இந்தியா

  திருந்த மாட்டார்கள்

 • ROGINI BAALAN - Bloomington,யூ.எஸ்.ஏ

  இந்த நடிகன் விஜயும் அவருடைய தந்தை சந்திரசேகரனும் தான் இந்த அரசியல் சாயத்திற்கு காரணம். சாதாரண நடிகனாக இருந்த காலத்தில் இத்தனை விளம்பரம் இல்லை. அதிகமாக நடித்து கையில் காசு வந்த பின்னர் தான் தன் மகனுக்கு "இளைய தளபதி "என்ற பட்டத்தை இவரே ஏற்படுத்தினார். விவரம் தெரிந்த தந்தை வேற்று வெட்டு வசனங்களை பேசினால் ரசிகர்கள் தங்க மாட்டார்கள் என்று அரசியல் "பஞ்ச்" வசனங்கள் சேர்க்கப்பட்டு படங்கள் வெளி வந்தன. பூனை மூஞ்சியும் கூழாங்கல் வாயில் அடக்கிய மாதிரி வசனங்களும் யாருக்கு பிடித்ததோ தெரியவில்லை. இன்று மெகா நடிகர். பணம் பண்ணுகிறார். கை ரிகஷா ஓட்டுவது போலவும்.கோழி பிடித்து உள்ளே போடுவது போலவும் கூட்டம் சேர்த்து ஆடுவது இதுவரை எந்த ரசிகனுக்கும் அலுப்பு தரவில்லை. மாற்று திறனாளிகளை கேலி செய்வதை போல அங்க அசைவுடன் நடனம். பார்க்க பிடிக்கவில்லை . மொத்தத்தில் சினிமா என்பது தரம் கெட்டுவிட்டது. ஹிந்தி படங்களின் காட்சிகளை சுட்டு பிரமாண்டமாக செலவு செய்து எப்படியோ தன் இடத்தை தக்கவைத்துக்கொண்டிறிக்கிறார். இவரை நம்பி மக்கள் மோசம் போககூடாது என்பதுதான் எனது விருப்பம்.

 • Ilavarasan - Isfahan,ஈரான்

  சபாஷ் நல்ல கட்டுரை 30 வருட சினிமா துறையை நன்கு அலசி ஆராயப்பட்ட கருத்துக்கள்

 • Chenduraan - kayalpattanam,இந்தியா

  அட்டை கத்தி வீரர்கள் தான் நம்மை ஆண்டு நம்மை கொள்ளை அடிக்கிறார்கள் என்பதை தெரிவிக்காதது ஏனோ?

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  யாருடா அது இலங்கை தமிழனுக்கு வக்காலத்து வாங்குறது ..? நீங்க தான் இலங்கை தமிழனுக்கு உயிரை விடுறிங்க .நம் மீனவர்களுக்காக ஒரு ஈழ தமிழன் உயிரை விட்டதா செய்தி வந்திருக்கா ..??? ஒரு வேலை உயிர் விடுவதற்கும் அரசிடம் அனுமதி பெற வேண்டுமோ ..?

 • vijay - Kuwait,குவைத்

  வாழ்த்துக்கள் இது நெத்தியடி அல்ல, செருப்படி

 • prabhu - sharjah,ஐக்கிய அரபு நாடுகள்

  ஈழத் தமிழர்களுக்கு வக்காலத்து வாங்கும் உங்களைப் போன்ற ஈழ வெறியர்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டு மக்களின் துன்பம் தீராது . இலங்கை தமிழருக்கு உண்ணாவிரதம் எடுக்கிறீர்கள் நம் ராணுவ வீர்கள் உயிர் விட்டதற்கு கருத்து தெரிவிக்க கூட யாரும் வரவிலையே . அப்படி என்ன உயிர் தியாகம் செய்தார்கள் இவர்கள் நம் இந்திய திருநாட்டிற்கு ?????

 • Hindustan - srirangam,இந்தியா

  நாகேஷ் அவர்களே, இலங்கை தமிழர்களைப் பற்றி ஐரோப்பா ஆஸ்திரேலிய மக்களிடம் கேட்டுப்பாருங்கள் . ஏன் நம் தமிழ்நாட்டு மக்களிடமே கேளுங்கள் (ஈழ வெறியர்களை தவிர ) காரி துப்புவார்கள் நம்மீது. நம் மீனவர்களும் தமிழ்நாட்டு மக்களும் இப்படி வேதனை படுவதற்கு ஈழ தமிழர்களே காரணம் .

 • Sundeli Siththar - Hyderabad,இந்தியா

  சத்தியமா சொல்லறேன்... இப்படி ஒரு தெளிவான கட்டுரையை ரொம்பப் பேரால் எழுத முடியாது... உங்களுக்கு எனது வணக்கங்கள்...

 • PR Makudeswaran - madras,இந்தியா

  இந்தக் கட்டுரை அருமை. ஆனால் விழலுக்கு இறைத்த நீர்.தமிழ் நாட்டில் சினிமா மேலோங்கி நிற்கும் வரை எதுவும் எடுபடாது.தனி மனித வழிபாடு அல்லது துதி பாடுதல் நீங்கினால் தான் உருப்படும்.அருகதை இல்லாதவர்கள் அரசியலிலும் அரசுப் பணியிலும்.

 • Unmai Vilambi - Ambasamudram,இந்தியா

  ஹாங் அந்த பயம் இருக்கணும் திரைத்துறையினருக்கு இது வரைக்கும் தமிழ் நாட்டை கெடுத்தது போதும்.

 • A.SIVALINGAM - clementi,சிங்கப்பூர்

  படத்துக்கு வரி விலக்கு எதுக்கு குடுக்கணும்...நூறு கொடிய கொட்டி படம் எடுக்கிறவனுக்கு எதுக்குய்யா வரி விலக்கு..நீ பண்றது யாவாரம் ...எவனாவது நாட்டுக்கு நல்லது செய்ய படம் எடுக்குரானா என்ன...ஒரு சிநிம்மாக்காரனாவது ஒழுங்கா வரி காடியிருப்பானா...இவனுங்க வரி கட்டுனா டாஸ்மாக் தேவையே இல்ல....கமலகாசன் இந்தியாவ விட்டு போயிட்டா அவனுக்குதான் நஷ்டம் நாட்டுக்கு எந்த கேடும் வராது...சும்மா உதார் விட்டு சீனு காமிக்கிரானுங்க...

 • Abraham Raj - Dar es Salaam,தான்சானியா

  அருமையான கட்டுரை உண்மையிலேயே இந்த நாட்டின்மேல் அக்கறையுள்ள மக்களின் உண்மையான மனநிலையை பிரதிபலிக்கும் அற்புதமான சிந்தனை நாட்டின் இலைய சமுதாயம் இந்த அட்டகத்தி வீரர்களின் மிஹவும் சுயநலமிக்க பொதுநல அக்கறையை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும் ...

 • Faris Khan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  மிகவும் பயனுள்ள கருத்து

 • ஜாம்பஜார் ஜக்கு - Chennai,இந்தியா

  யப்பா.....போட்டு தாக்கிடீங்க

 • பொன்மலை ராஜா - திருச்சி, ,இந்தியா

  கதாநாயகர்களின் போலிப் புரட்சி முகமூடிகளைக் கிழித்து எறியும் உண்மைகளை வெளிப்படுத்தும் கட்டுரை இது ... நண்பர்களே கருத்தூன்றிப் படியுங்கள் ... நிழல் உலக தாதாக்களின் நிஜமான நிறத்தை உணருங்கள் ... பகிருங்கள் ...

 • Sankara Narayanan - Bangalore,இந்தியா

  அரசு,பொது, மற்றும் சிறிய, பெரிய நிறுவனங்களில் வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் போது கல்வித்தகுதி,வயது,திறமை,அனுபவம் இவற்றின் அடிப்படையில் தேர்வு செய்கின்றனர்.ஆனால் அரசியல் சாக்கடைக்கு இவை எதுவும் கிடையாது.மேலே குறிப்பிட்ட நிறுவனங்களில் பதவிக்காலம் 58 வயதோடு முடிந்து விடும்.ஆனால் அரசியலில் சாகும் வரை பணம் இருந்தால் பதவிகள் தேடிவரும்.இந்த நிலை மாறினால்தான் நாடு முன்னேற்றம் அடையும்.ஆனால் திரு.காமராஜர்,திரு.MGR போன்ற சில தலைவர்கள் மேலே சொன்ன கருத்துகளில் இருந்து விலக்காகின்றினர்.அவர்கள் மக்களோடு மக்களாக வாழ்ந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு வழி கண்டனர். அதனால்தான் இன்றும் அவர்கள் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அரசியலுக்கும் தகுதி,படிப்பு,வயது வரம்பு,ஓய்வு போன்ற நியமன விதிகளை நடைமுறைக்கு கொண்டு வாருங்கள்.மைக் பிடித்தவர்களுக்கெல்லாம் நாட்டை ஆளும் தகுதி வந்து விடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.சினிமா என்பது பொழுதுபோக்கு விஷயம்.அதை வாழ்க்கையோடு இணைத்து குழப்பிக் கொள்ளவேண்டாம். யாராவது பொதுவான பிரச்சினைகளுக்கு போராடுகிறார்களா.படம் ரிலீஸ் ஆகவில்லை என்றால் மட்டும் அறிக்கை விடுவது, போராடுவது என்று மக்களை திசை திருப்புகின்றனர்.

 • தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா

  ஆட்சியில் இருக்கும், ஆட்சியில் இருந்த கலைத்துறையினரைப் பற்றியும் ஒரு வார்த்தை எழுதி இருக்கலாம்..

 • தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா

  இந்த தலைவா படப் பிரச்சனையில் தூத்துக்குடி மணல் கடத்தல் பிரச்னை.... திறந்து விடப்பட்ட தண்ணீர், கடை மடை விவசாயிகளுக்கு போகாத வேதனை....., தூர் வாராத ஏரி, கிணறுகளுக்கு எதிராக, நித்தமும் பிடிபடும் தமிழக மீனவர் இவைகள் அனைத்தும் மறைந்து போய்விட்டன என்பது உண்மையே...

 • Ravi - Chennai,இந்தியா

  அடக்குமுறைக்கு புது அர்த்தம்

 • anbu - trichy,இந்தியா

  எனது நண்பன் சொல்வான் தங்கள் முகத்தை தாங்களே நேரடியாக பார்த்து கொள்ளகூடிய வசதியை கடவுள் நமக்கு கொடுக்கவில்லை இல்லையென்றால் அவனவன் எப்போதோ நாண்டுகொண்டிருப்பான் என்று இப்பொழுது அட்ட கத்தி வீரர்களின் முகத்தை காட்டிவிட்டீர்கள் இப்போவாவது திருந்துவார்களா என்று பார்ப்போம்

 • Paul - Chennai,இந்தியா

  A ttu surakai kari ku uthavathu nu oru palamozhi pothum intha katturai ku. All tamil cine heros are in the same category. good article. When the tamil people coming out of their cinema moham , then only good time for Tamil Nadu. I welcome more articles of this category to counsel tamil cinema paithiams.

 • nizahd - chennai,இந்தியா

  திரு,முருகராஜ் அவர்களே உண்மையை,உண்மையாக (அரசியல் தலைவர்களுக்கும்,குண்டர்களுக்கும்) யாருக்கும் பயப்படாமல் பகிரங்கமாக தினமலர் இதழில் வெளியிட்டதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். மேலும் அட்டைக்கத்தி வீரர்களை நம்பும் தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காப்பாற்றவேண்டும் என்றால் இறைவன்தான் மனிதனாகபிறந்து வரவேண்டும்.என்று தணியும் இந்த சுதந்திர தாகம்....

 • Kanann Ramasamy - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  என்ன நீங்க பிராமினர்களுக்கு வக்காலத்து வங்கலயேனு பார்த்தேன். தினமலர் பத்தி சொல்லனுமுன்னா உலகில் முதல் ஜால்ரா நியூஸ் இதவிட யாரும் ஜெயாவுக்கு இருக்க முடியாது

 • Sham - Ct muththur,இந்தியா

  இன்றைய இளைஞர்களுக்கு உச்சிமண்டைவரை ஏறியிருக்கும் சினிமா பித்தத்திற்குக் சரியான நேரத்தில்... கொடுக்கப்பட்ட நல்லமருந்து... ஒருசிலரைத்தவிர, மற்ற நிழல் ஹீரோக்கள்... உண்மையில், சமூகத்தைப்பற்றி சிறிதும் அக்கறையில்லாத.... சற்றும் நேர்மையில்லாத, ஒரு கீழ்த்தரமான வியாபாரிகள்தான் என்பதை எப்போதுதான் நம் மக்கள் புரிந்துகொள்வார்களோ... எம்ஜியாரின் நடத்தைக்கு, சமுகம் மீதான அக்கறை மட்டுமல்ல.., வேறு பல பெரிய, சுயநலமான நோக்கங்கள் இருந்தன... படிப்பறிவு மிகக்குறைவாக இருந்த, அப்பாவிமக்களைக் கவர்ந்து அவற்றை அடையவும் செய்தார்... இப்போது திரு, முருகவேல் சுட்டிக்காட்டியிருக்கும் அட்டைக்கத்தி வீரர்களுடன் எம்ஜியாரை ஒப்பிடவே முடியாது... நிச்சயம் இவர்களைவிட உயர்ந்த நடத்தை கொண்டவராகத்தான் இருந்தார்...

 • jaikrish - LONDON,யுனைடெட் கிங்டம்

  அருமையான கட்டுரை..தலையங்கமாக போடலாம்.சினிமாவும்,சாராயமும்தானே தமிழனை ஆள்கிறது..

 • Kanagasundaram Sakthidasan - chennai,இந்தியா

  உலகத்திலேயே தனக்கு பிடித்த நடிகனின் படம் வெளியாகாமல் விட்டதற்கு தற்கொலை செய்பவர்கள் உள்ள இடம் தமிழகமே.அழகான , ஆணித்தரமான கட்டுரை.வாழ்த்துக்கள் திரு.முருகராஜ் அவர்களே.

 • R.Kannan - Hyderabad,இந்தியா

  திரைப்படத்தை பொழுதுபோக்காக மட்டும் பார்க்க வேண்டும். திரையில் நடப்பது போல் நம் வாழ்கையிலும் நடக்கும் என்று நம்புவதை நிறுத்த வேண்டும். வாக்களிக்கும் போது பிரபலங்களின் முகத்துக்காக இல்லாமல் பிரச்சனைகளின் அடிப்படையில் தகுதி வாய்ந்த வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும். அட்டை கத்தி வீரர்களை காட்சி பொருளாக மட்டுமே வைக்க வேண்டும். முருகராஜ் அவர்களிடமிருந்து மேலும் உரத்த சிந்தனைகளை எதிர்பார்கிறேன்.

 • M.MOHAMED SATHIK - Thondi,இந்தியா

  100% True.But too late.

 • muthu Rajendran - chennai,இந்தியா

  சினிமாக்கரர்கள் ஆதிக்கத்தால் தான் நல்ல தலைவர்களுக்கெல்லாம் மக்கள் மத்தியில் மரியாதை இல்லாமல் பொருந்தும். இது எல்லா சினிமக்கரர்களுக்கும் பொருந்தும்.

 • Rajendran P - trichy,இந்தியா

  மிக நல்ல சிந்தனை, ஆழமிக்க கட்டுரை. போற்றுகிறேன்

 • rudhran - Kumbakonam,இந்தியா

  நெத்தியடி

 • mohan - chennai,இந்தியா

  சினிமாவில் நடிப்பது, அது நடிகர்களுடைய வேலை.... அவர்கள் செய்யும் வேலையை, இந்த முட்டாள்கள் ஏன் சென்று பணம் கொடுத்து பார்கின்றனர். அதே போல் இவர்கள் செய்யும் வேலையை, நடிகர்கள் என்ன பணம் கொடுத்தா பார்கின்றனர் . ஆ நீ நன்றாக வேலை செய்கிறாய் என்று...எப்போ ஒருவனுக்கு சொந்த வீடு, நிரந்தர வருமானம், உள்ளதோ, அப்பொழுது பொழுது போக்கிற்காக வேண்டி இரு மாதத்திற்கொரு முறை ஏதாவது, சமுதாய கருத்துள்ள படம் பார்க்கலாம். பழைய ரெங்காராவ், எம் ஜி ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், போன்றோர் நடித்த அனேக படங்கள், சமுதாயத்தை, வழி நடதுபவையாக இருந்தன...இப்பொழுது வருடத்திற்கு இரு படங்கள் உருப்படியாக வருவதில்லை....இப்பொழுதுள்ள காதல் சார்ந்த படங்கள் கல்லூரியில் வன்முறையை தூண்டுபவையாக உள்ளன...

 • பாரி - நெய்வேலி,இந்தியா

  நெத்தியடி கட்டுரை. தமிழ்நாட்டில் மட்டுமே, கோட்டைக்குப் போகும் ஒரே வாசலாக கோடம்பாக்கம் இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு வெளியே அயலான் நம்மை அசிங்கப்படுத்துவது வெளியில் போனால்தான் தெரியும். இனியாவது பக்குவப்பட வேண்டியதன் அவசியம் இருக்கிறது. தமிழின் வரலாறும், தமிழனின் வரலாறும் படித்தாலே, நாம் எவ்வளவு மேம்பட்டு இருந்தோம் என்பது விளங்கும்.

 • Subramanian.S - Chennai,இந்தியா

  தனி மனித துதி பாடுவது அங்கிங்கு எனாதபடி நீக்கமற நிறைந்திருக்கும் மாநிலம் தமிழ் நாடுதான். அரசியல்,சினிமா, அதிகார வர்க்கம் , விளையாட்டு என எல்லா துறைகளிலும். ஆட்சி பொறுப்பில் இல்லாத தலைவரை யார் சீண்டுகிறார்கள்? ஆட்சியில் இருக்கும்போது வெண்பா பாடும் கவி வேந்தர்கள் பவரில் இல்லாதபோது கண்டு கொள்வதில்லை. நடிகர்கள் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதும் , அவருக்காக தீ குளிப்பதும் , நடிகைக்கு கோவில் கட்டுவதும் தமிழகத்தில் மட்டும் தான் நடக்கிறது என்பதை எண்ணும் போது வெட்கி தலை குனிகிறேன். நடிப்பது ஒரு தொழில் . அவர்களை சக மனிதர்களாக பார்க்காமல் ஏன் தெய்வமாக தொழ வேண்டும். சமூக சேவை செய்த ஒரு எளிய தமிழ் பெண்ணின் காலில் விழுந்த பிரதம மந்திரி இந்த நாட்டின் மரியாதைக்கு உரியவர் யார் என உணர்த்தினார். பலம் வாய்ந்த வில்லனையும் அவனது கூட்டளிகளியும் ஐந்தரை அடி ஹீரோ எப்படி வீழ்த்த முடிகிறது என யோசிக்காமல் ஒரு பஞ்ச் டயலாக் வேற. ஏதோ பொழுது போக்கிற்கு சினிமா போனோமா பிறகு நம் பொழைப்பை பார்த்தோமா என்று இருக்கவேண்டும். என்ன படிப்பு படித்திருந்தாலும் , என்ன சம்பாதித்தாலும் ,என்ன தொழில் செய்தாலும் நம் சுய கௌரவத்தை விட்டு கொடுக்கக் கூடாது. சின்ன பாப்பா போன்ற சமூக சேவகர்கள்தான் மரியாதைக்குரிய ஹீரோ/ஹீரோயின்கள் . கோடிகளில் புரளும் சினிமா நாயக நாயகிகள் அல்லர்.

 • C Senthil - Manama,பஹ்ரைன்

  Excellent Article, they are acting for earning Money, that we should understood. See Kerala People they never Respond the actores and allow to Politics also

 • Thanjaithamilar - QATAR,இந்தியா

  இந்த தலையங்கத்தை உண்மையில் ஒரு 10,000 பிரதியாவது எடுத்து தமிழக பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகளுக்கு விநியோகம் செய்தாலே...நமது தமிழக இளைய சமுதாயத்திற்கு கொடுத்தாலே அவர்களின் மனதில் இந்தியாவை வல்லரசாக மாற்றுவோம் என்ற உறுதி வந்துவிடும்.. சபாஸ் திரு உரத்த சிந்தனை, எல்.முருகராஜ் அவர்களே... உங்களுக்கும் எனதருமை தினமலருக்கும் கோடி நன்றிகள்.... இந்த கருத்தை வழங்கிய உரத்த சிந்தனை, எல்.முருகராஜ் அவர்களுக்கு "நவீன பாரதி" என்ற பட்டதை கொடுக்கலாம்.

 • gurusamy ramesh - madurai,இந்தியா

  கமல் தனது சொத்துக்காக கவலைப்பட்டார். தமிழ் மக்களே என் சொத்து என்று சொல்லியிருந்தால் மக்கள் மனதில் நின்று இருப்பார். காவிரி பிரச்சனைக்கு ரூபாய் ஒரு கோடி கொடுப்பேன் என்று சொன்ன ரஜினியும் காணவில்லை. விஜய் எம்மாத்திரம்

 • gurusamy ramesh - madurai,இந்தியா

  மிக மிக அருமை. சாதாரண மக்களின் மன பிரதிபலிப்பு

 • Zahir Hussain - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  தமிழன், இது நல்ல கட்டுரை என்று பாராட்டுவான். பின்பு திரை அரங்கில் அடுத்த காட்சிக்கு வரிசையில் நிற்பான்

 • R.GNANAPRAKASAM PANANGUDAM - abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  மர மண்டைகளுக்கு புரிந்தால் தமிழ் நாட்டு எதிர்காலத்துக்கு நல்லது

 • Indian - Sivakasi,இந்தியா

  நான் உண்மையான , நேர்மையான தலைவரின் பின்னால் தான் இருக்கிறேன் என்று நினைத்து மற்றும் ஒருமுறை பெருமை அடைகிறேன்... =============================================================================== " இதையெல்லாம் நான் சொல்லல... பல பிரபலங்கள் சொன்னதில் சில.. " என்னோடு இருக்கும் 200 எம்பிகளுக்கு சமமானவர் வைகோ.. - இந்திரா காந்தி.. வைகோ போன்ற நேர்மையான தலைவர்களின் கையில் தான் எதிர்காலம் இருக்கிறது - வி பி . சிங்... எந்த மிரட்டலுக்கும் அடிபணியாத லட்சியவாதி வைகோ - நரசிம்மராவ்.. இந்தயாவில் கொள்கை ரீதியில் அரசியலை முன்னேடுப்பவர்களில் வைகோ தான் முதலிடம்.. அவரை எனது மூத்த மகனாகவே பார்கிறேன்- முன்னாள் பிரதமர் வாஜ்பாய்... அரசியலை மக்கள் பணிக்கான தளமாக பார்ப்பவர் வைகோ மட்டுமே - பஞ்சாப் முதல்வர் - பிரகாஷ் சிங் பாதல்.. என் 70 ஆண்டுகால அரசியல் வாழ்கையில் நான் சந்தித்த தீவிர லட்சியவாதிகளில் வைகோ மிக முக்கியமானவர்.. ஹர்கீசன் சிங் சுர்ஜித்.. பதவி வெறி பிடித்த அரசியல்வாதிகளுள் வைகோ மாறுபட்ட கொள்கை வாதி - சோம்நாத் சாட்டர்ஜி.. வைகோ போன்ற அரசியல் தலைவர்களை பெற்றதற்கு தமிழ்நாடு பெருமை கொள்ள வேண்டும்., என்னை எப்போது சந்தித்தாலும் மக்கள் பிரச்சினை பற்றியே கோரிக்கை வைப்பார், சிறந்த கொள்கை வாதி வைகோ- இந்நாள் பிரதமர் மன்மோகன் சிங்.. என்றுமே விலை போகாத மக்கள் போராளி வைகோ - அத்வானி.. பெரியாரின் உண்மையான வழிதோன்றல் வைகோ- தமிழருவி மணியன்.. முழுமையாக தமிழ் இலக்கியங்கள் கற்ற ஒரே அரசியல்வாதி வைகோ - நெல்லை கண்ணன்... வைகோ அதிகாரத்திற்கு வரும் சமயம் தான் தமிழகத்தின் இழி நிலை போக்கப்படும் - கவுத்தூர் மணி.. வைகோ தமிழகதிற்கு கிடைத்த அரிய வரபிரசாதம்.. - பழ. நெடுமாறன்... எங்களிடம் இருக்கும் அணைத்து ஆயுத குவியலுக்கும் நிகரானவர் வைகோ ஒருவர் மட்டுமே - தமிழ் தேசிய தலைவர் , வே. பிரபாகரன்...

 • itashokkumar - Trichy,இந்தியா

  இந்த IPad காலத்திலும் சினிமாக்காரகளை முன்னுதாரணமாக கொள்ளும் தமிழக மக்களை குறிப்பாக இளைஞர்களை என்ன சொல்வது. சினிமா என்பது நிச்சயமாக டைவர்சன் தான் போகஸ் அல்ல. என்ன தான் சினிமாவில் வடை சுட்டாலும் நிஜத்தில் அரசியல்வாதியாக தான் இருக்கிறார்கள். மக்களுக்காக சிந்தித்த மக்களுக்காக வாழ்ந்த காமராசரை காங்கிரஸ் காரர் என்று ஒரே காரணத்துக்காக அவரை இருட்டடிப்பு செய்த இந்த மக்களை அவருடைய ஆத்மா மன்னிக்குமா? அவரை போற்ற தவறியதால் தான் மோசமான அரசியல் நிலைமை. அண்ணாதுரையும், எம் சி ஆர் வாயால் சுட்ட வடையை விட காமராஜர் அவர்கள் செய்து காட்டியது ஏராளாம். பரவாயில்லை என்பதை விட பிரமாதம் என்பதுதான் உயர்வானது என்பதை தமிழக மக்கள் உணர தவறிவிட்டனர்.

 • itashokkumar - Trichy,இந்தியா

  அண்ணே என்னை செருப்பால் அடித்தது போல இருக்குன்னே. உங்கள் கருத்துடன் நுறு சதவிகிதம் ஒத்து போகும் கருத்து உடையவன் நான். நம் மக்கள் அனைவரும் தங்கள் உழைப்பாலும்,திறமையாலும், பொறுமை குணத்தாலும் தான் வாழ்ந்து வருகிறார்களே தவிர. இந்த சினிமா உலகத்தை சேர்ந்தவர்களாலும், அவர்கள் விடும் வெட்டி உதார்களாலும். அதில் இருந்து வந்தவர்களின் நிர்வாக திறமையாலும் இல்லவே இல்லை. உண்மையான, நேர்மையான, சுயநலமில்லாத நிர்வாகம் காமராஜரோடு போய்விட்டது. சத்தியமாக அவர்தான் லீ கோன் எவ். இதை பறை சாற்றுவோம் அவர்தம் புகழை கட்சி ரீதியாக இல்லாமல் தமிழகத்தின் தலை சிறந்த நிர்வாகி என்ற முறையில் எடுத்துரைப்போம் தமிழகத்தின் Lee Kuan Yew புகழ் வாழ்க.

 • Nagesh Perumal Mutharaiyar - Sembawang,சிங்கப்பூர்

  சினிமா பல்வேறு காலங்களில் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்துதான் வந்திருக்கிறது.. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளால் சினிமா பல தடவை விமர்சனங்களை சந்திக்கிறது.. மற்றபடி ஆசிரியர் கூறுவதுபோல் இன்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை நாம் முடிவு செய்யமுடியாது.. எந்த ஒரு நடிகருக்கும் ரசிகர்கள் வேண்டாம் என்றோ.. ரசிகர்கள் அனைவரும் பொறுப்பற்றவர்கள் என்றோ கூறுவது தவறு.. இன்றைக்கும் நல்லநிலையில் உள்ள எத்தனையோ பேர் ஒருகாலத்தில் ஏதேனும் ஒரு நடிகருக்கு ரசிகர்களாக இருந்தவர்கள்தான் .. யாரும் யாரையும் நம்பாமல் யாரையும் ஆதரிக்காமல், யாருக்கும் வாக்களிக்காமல் இருந்தால் நாடு உருப்பிட்டுவிடுமா..? இந்த கால இளைஞர் அனைவருக்கும் பொறுப்பு உள்ளது.. பொறுப்பு உணர்ந்துதான் செயல்படுகிறார்கள் அவர்கள் யாராவது ஒரு நடிகருக்கு ரசிகராக இருந்தாலும் கூட.. எனது இந்த (எதிர்)கருத்தை பிரசுரித்தமைக்கு நன்றி..

 • srinivasan - Bharuch,இந்தியா

  Dear sir, Better writer should write about what Tamil nadu is getting from Indian Government & Development instead of writing about glamorous guys and wasting time & space.. Tamil Nadu is contributing almost 14 % income to central Government but getting returns nothing.Even samall state Kerala has got double track train rout from north to south of Kerala but Tamil Nadu is struggling to have double from Chengalppatu to Villupuram.During Onam Festival special trains from Chennai to all other parts of Keral where as during Pongal time ,special trains are denied. What the writer & dinamal is sleeping ? Please write more about those things instead of time passing by writting hero & heroin.

 • Natarajan Ramanathan - chennai,இந்தியா

  அந்த பயம் இருக்கணும்' என்ற வசனம், இப்ப உங்களுக்கு தானே ரொம்பவே பொருந்துகிறது. .ஒரு படத்தைப் பார்த்து எடுத்தால் தானே, "திருட்டு' என்பர். பல படத்தை பார்த்து, கொஞ்சம் கொஞ்சமாய் திருடினால், திரட்டு என்பார்களோ?................கொன்னுட்டீங்க முருகராஜ்.(செம பன்ச்)

 • villupuram jeevithan - villupuram,இந்தியா

  வைகோவுக்கு கிடைக்க வேண்டிய பதவி கேப்டனுக்கு கிடத்தும் சுத்த வேஸ்ட்டாகி விட்டது. நீங்கள் சொல்லுவது 100% உண்மைதான்.

 • Mani.R - trichy,இந்தியா

  நல்ல சிந்தனை ... தெளிவான சிந்தனை.

 • villupuram jeevithan - villupuram,இந்தியா

  நீங்கள் சொன்னபடி இவர்களாவது அட்டை கத்தி வீரர்கள். எந்த கத்தியுமே இல்லாமல் முள்ளிவாய்க்கால் புகழ் வீரர் தினமும் வீராவேசத்துடன் பேசியே கொல்லுகிறாரே?

 • Sathesh Pandian - Chennai,இந்தியா

  இளித்தவாயன் எவன் கிடைத்தாலும் ஏறுவதில் வல்லவர் முருகராஜ். நடிகர்களிடம் சரணடைந்த நபர்களில் இவரும் ஒருவர். அங்கே சரணடைது விட்டு இங்கு வியாக்யானம் வேறு பேசுகிறார்.

 • Samy Chinnathambi - rayong,தாய்லாந்து

  இந்தியர்கள் சினிமா ரசிகர்கள் கிடையாது...சினிமா பயித்தியங்கள்....ஏதோ சினிமா கோவில் போன்றும்...அதில் நடிக்கும் நடிகர்கள் தான் கடவுள்கள்...வெளி நாட்டில் நடிகர்கள் பொதுமக்களோடு கலந்து போய் கொண்டு இருக்கின்றனர்..ஆனால் இந்தியாவில் அவர்கள் வெளியில் வந்தால் இரண்டடுக்கு பாதுகாப்பு தேவை படுகிறது...இல்லை என்றால் பில்டப் செய்கிறார்கள்...

 • B Sivanesan - London,யுனைடெட் கிங்டம்

  மாநில கட்சிகள் எம்ஜியாரை தவிர ஒரு நல்ல தலைவரை இதுவரை கொடுத்தது இல்லை. ஒழுக்க குறையும், போலி வாழ்க்கையும் நிறைந்த சினிமா துறையில் இருந்துதான் தமிழகத்தின் தலைவர் வர வேண்டும் என்ற நிலை இருப்பதுபோல் இருக்கின்ற என்னத்தை மாற்றினாலே மாற்றங்கள் தன்னால் வரும்.

 • karan Karan - singapore,சிங்கப்பூர்

  ஒன்று மட்டும் உறுதி. என்னதான் நாம் இது அது என்று எழுதுனாலும் நடக்குறதுதான் நடக்கும். நம்ம ஒன்னும் தூக்கி நிறுத்த முடியாது. கட்டுரை எழுத படிக்க மட்டும் அழகாக இருக்கும். வேணுமென்றால் எல்லாரும் நன்றி தெரிவிக்கலாம். நானும் கூட சொல்லுவேன். நம்மளாலே ஒரு சே குவாரா ஆகா முடியுமா சொல்லுங்க நானும் வருகிறேன் உங்களுடன் -நன்றி தமிழன்

 • Peria Samy - chennai,இந்தியா

  முருகராஜின் உரத்தசிந்தனை இன்றைய நிஜ அவலத்தை தத்ரூபமாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வீரபாண்டியக் கட்டபொம்மன் முதல் விசுவரூபம் வரையிலான நிஜங்களை வாசகர்களின் பார்வையில் வலம் வரச் செய்திருக்கிறார்.வாழ்த்துகள்,நன்றி.

 • G. Madeswaran - MA,யூ.எஸ்.ஏ

  இளைஞர்கள் 80-களில் குடித்ததற்கு,சிகரெட் புடித்ததற்கு ரஜினியும் ஒரு காரணம் என்றால், 2013-இல் இளைஞிகளும் சிகரெட் குடிப்பதற்கு யார் காரணம்...இதற்கும் ரஜினிதான் காரணமா? கருத்து முருகராஜின் ஓட்ட பேனா கருத்து செல்லாது.. விக்கலு,இருமலு,தும்மலு,சிகரெட்,குடி எல்லாம் அவனவனின் தனிப்பட்ட பிரச்சினை..அவனவனா பார்த்து சரி செஞ்சாதான் உண்டு.. சர்க்காரே சரக்க விக்கும்போது ?

 • தி.இரா.இராதாகிருஷ்ணன் - நாக்பூர்....,இந்தியா

  உண்மையை உரக்க சொல்லியுள்ள கட்டுரை.....சாட்டையடி கட்டுரை......பாராட்டுக்கள்.....அதுவும், படத்திற்கு, 10 கோடியும் புதுக்கதாநாயகியுடன் ஹெலிகாப்டரில் சுத்தியதற்கு, 90 கோடியும் செலவானால், அப்புறம் வீட்டை விற்கத்தான் வேண்டியிருக்கும். ...என்ற வாக்கியம் நெத்தியடி......

 • P.Balajirajan - Rumaila,ஈராக்

  முருகராஜ் மிகவும் சரியாக சொன்னீர்கள். ஆனால் நம்ப இளைஞர்கள் பெற்றோர் சொல்லையே கேக்க மாட்டார்கள், நீங்க சொன்னா கேட்கவா போறார்கள். இந்திய நாடு மீண்டும் அடிமை பட்டு மக்கள் கஷ்டபடுவது உறுதி.

 • Thangairaja - tcmtnland,இந்தியா

  நல்லாத்தான் கலாச்சிருக்கார். இந்த டகால்டி வேலைகளையெல்லாம் புரிஞ்சுக்காம தீக்குளிக்கிறவனையும் போராட்டம் நடத்துறவனையும் என்னவென்று சொல்வது. மாத்து மதத்துக்காரனை டபாய்க்கிற படம்னதும் மாஞ்சு மாஞ்சு கருத்தெழுதி தங்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்டிய அப்பாவிங்களுக்கு எந்த தாயத்து கட்டி தெளிய வைக்கறது.

 • "சோ"சியக்காரன் - இருண்ட தமிழகம் ,இந்தியா

  கட்டுரை ஆசிரியர் எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் போல் எழுதி உள்ளார், சரி இதோ என் சந்தேகங்கள், 1) காவல் துறையை வைத்துள்ள பாட்டி மீது சந்தேகம் வர காரணங்கள்-'படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களுக்கு வெடிகுண்டு வைப்போம்’ என்று சொன்ன அமைப்பு எது, அமைப்பாளர்கள் யார், அவர்கள் இதற்கு முன்னால் இத்தகையக் காரியங்களைச் செய்துள்ளார்களா, அவர்கள் எங்கே இயங்குகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை இது வரை (ஆகஸ்ட் 19) தமிழகக் காவல் துறை கண்டுபிடிக்கவில்லை. 'வெடிகுண்டு மிரட்டல் வந்தது’ என்பதற்காக, தியேட்டர்காரர்கள் பயப்படலாம் காவல் துறையுமா பயப்படுவது?தமிழ்நாட்டில் உள்ள 400-க்கும் மேற்பட்ட தியேட்டர்களை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கும் சக்தி உள்ள அமைப்பாக அது இருக்குமானால், இந்தியாவிலேயே அதுதான் மிகப் பெரிய பயங்கரவாத அமைப்பாக இருக்க முடியும். வெளி நாட்டைத் தளமாகக்கொண்டு செயல்படும் அமைப்புகள்கூட மும்பை மற்றும் கோவையில் வேறு வேறு சம்பவங்களாகத்தான் வன்முறையில் ஈடுபட்டன. இந்த அமைப்புக்கு தமிழ்நாட்டின் அத்தனை நகரங்களிலும் வெடிகுண்டு வைக்கும் பலம் இருக்கிறதென்றால், அந்தக் கடிதத்தைப் பார்த்து நடிகர் விஜயைவிட தமிழ்நாடு போலீஸுக்குத் தான் அதிக பயம் வந்திருக்க வேண்டும். அப்படி மிரட்டல் விடுத்தவர்களோடு தொடர்புடையதாக சந்தேகப்படும் எவரையும் இதுவரை விசாரணைக்குக்கூட போலீஸ் அழைத்ததாகத் தெரியவில்லை. ஏதோ ஓர் அநாமத்து கடிதத்துக்காக ஒரு படத்தை வெளியிட முடியாது என்றால், இதே போன்ற மிரட்டல் பள்ளிக்கூடங்களுக்கும் கோயில்களுக்கும் வந்தால் மொத்தமாகப் பூட்டிவிடுவார்களா என்ன? வெடிகுண்டு மிரட்டல் காரணமாகப் பயப்படும் திரையரங்க உரிமையாளர்களை அழைத்துப் பேசி தைரியம் கொடுத்திருக்க வேண்டியது, தமிழ்நாடு காவல் துறையின் கடமை. ஆனால், இவர்கள் பயந்து பம்மியதுதான் பாட்டி மீது சந்தேகங்களை அதிகமாகக் கிளப்பியது.சந்தேகம் 2)ஆளும்தரப்பு டி.வி. நிறுவனம்தான் பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களின் உரிமைகளை சமீபகாலமாக வாங்கி வைத்துள்ளது. 'வேலாயுதம்’ படத்தின் உரிமைகூட அந்த டி.வி-யிடம்தான் இருக்கிறது. அதனால்தான் மிகவும் பிர மாண்டமாக அந்தப் படம் வெளியானது. ஆனால், 'துப்பாக்கி’, 'தலைவா’ ஆகிய படங்களின் உரிமை அந்த டி.வி-யிடம் கொடுக்கப்படவில்லை. எனவேதான், அந்த இரண்டு படங்களுக்கும் சிக்கல் என்பது ஒரு தரப்பினர் கிசுகிசுக்கும் செய்தி அப்புறம் கடைசியாக ஒரு சந்தேகம் 3)அப்பாயின்ட்மென்ட் கூட வாங்காமல், நடிகர் விஜய்யும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரனும் அந்த அம்மாவைச் சந்திக்க கொடநாட்டுக்கு ஓடுகின்றனர். அப்படியானால், அந்த அம்மாதான் இந்தப் படம் வெளியாகாமல் தடுத்து வைத்திருந்ததாக இவர்கள் சொல்வதாகத்தானே அர்த்தம்?

 • N.Purushothaman - Kuala Lumpur,மலேஷியா

  அடேயப்பா ...இப்படி சொல்லி புட்டீகளே.. .......இவர்கள எல்லாம் வாய்சொல் வீரரடி....இவர்களின் பயணம் ஒரு இலக்கு இல்லா பயணம்...மக்கள் படும் பிரச்சனைகள் அதை தீர்க்க வழி ,அதற்க்கு என்ன திட்டம் எப்படி செய்ய வேண்டும் அதன் சாத்தியகூறுகள் மற்றும் அதன் பலன் பற்றிய ஒரு நுண்ணறிவு மற்றும் நிர்வாகத்திறன் இவர்களிடம் கிடையாது....இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது தற்போதைய முதல்வர் தான் ஒரு சிறந்தவர் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை. ...

 • P Sundaramurthy - Chennai,இந்தியா

  ஒரு பேருந்தில் ஒரு 12 வயது மாணவன் தலைவா படத்தில் நாயகன் நாயகியை கால் மேல் வைத்து நடனமாடுவதை 30 நிமிடத்திற்கு பேசிக்கொண்டு வருகிறான். உண்மையில்லாத ஒன்றை பெருமையாக பேசத்தெரிந்த அவனுக்கு பாடத்தில் வரும் அறிவியல் உண்மை வியப்புகளை உணரமுடியவில்லை. பெற்றோர்கள் சரியில்லை என்பதையே இடது காட்டுகிறது. சமுதாய நீதிகள் இப்போது பொதுவானதல்ல. ஆஅலைப்பொருத்துதான் நீதி. செயலைப்பொருத்து அல்ல. இதற்கு முதலில் பெற்றோர்கள் மாறவேண்டும் குடும்பம் மாறினால் சமுதாயம் மாறும்.

 • Kumarasamy Umapathy - singapore,சிங்கப்பூர்

  எத்தனையோ படித்த பண்பாளர்கள் உள்ள தமிழ்நாட்டில் இன்னமும் சினிமாவில் நடித்தவர் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்ற பாமரத்தனமான எண்ணம் மக்களிடம் உள்ளவரை எல்லாம இப்படித்தான்.

 • karna. pkm - mumbai,இந்தியா

  கமெண்ட் அடிக்க விரும்பவில்லை ,இதை பார்த்து நான் நீ ?என்று சொல்லாமல் நாம் அனைவரும் திருந்த முயற்சி செய்வோம் .

 • sakthi - jurong ,சிங்கப்பூர்

  சூப்பர்.

 • srinivasan - Chennai,இந்தியா

  2013 என்றில்லை 20013 ஆம் வருடம் வந்த பின்பும் இந்த கேடு கெட்ட ஜென்மங்கள் திருந்த போவதுமில்லை. கழுதைக்கு உபதேசம் காதில் உரைத்தாலும் அது காள் காள் என்று கத்த தான் செய்யும்.

 • Baskaran Kasimani - Singapore,சிங்கப்பூர்

  அட்டைக்கத்தி தலைவர்கள்தான் இன்றைய தமிழகத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள். நிர்வாகம், நீதி, நேர்மை என்ற எதையும் தெரியாதவர்கள் அல்லவா நாம் ஆள விட்டுள்ளோம்?

 • jaya - sinagpore,சிங்கப்பூர்

  Excellent article. 100 percent true. This field is spoiling our youngsters

 • jaya - sinagpore,சிங்கப்பூர்

  Excellent article. 100 percent true.

 • kannan - Puthucheri,இந்தியா

  ரொம்பவே சிந்திக்க வைக்கும் கட்டுரை. தமிழர்கள் திருந்துவார்களா?

 • guru - kaf,ஆப்கானிஸ்தான்

  சரியான நெத்தியடிய சொன்னீர்கள் திரு எல்.முருகராஜ் அவர்களே ,,,இதை பார்த்தாவது இன்றைய இளைய சமுதாயம் உருப்பிட்டால் அந்த பெருமை தங்களையே சேரும் .இந்த கட்டுரைக்கு எனது தலை பணிந்த வாழ்த்துக்கள் ,,,

 • Krish - Madurai,இந்தியா

  ஆசிரியரின் கட்டுரை நடுநிலையில் இல்லை. எல்லா நடிகர்களையும் குறை சொல்லிவிட்டு ஒரு நடிகரை மட்டும் பாராட்டியுள்ளார். mgr அவர்கள் படத்தில் குடிப்பது போல் காட்சிகள் இல்லாதது மக்களிடம் நல்ல இமேஜ் வரவேண்டும் என்பதற்காக மட்டுமே, வேறொன்றுமில்லை.

 • R. Vidya Sagar - Chennai,இந்தியா

  அருமையான கட்டுரை பாராட்டுக்கள் இதே மாதிரி நமது அரசியல் வாதிகளையும் ஒரு பிடி பிடியுங்கள். "நாள் முழுவதும் மைக் முன் ஆவேசகமாக பேசுவது" போல

 • Raj Raja - Singapore,சிங்கப்பூர்

  அருமை அருமை :)

 • Raj Raja - Singapore,சிங்கப்பூர்

  தினமலர் , உங்களின் வீரமிக்க உள்ள இந்த கட்டுரயைக்கண்டு மெய்சிலிர்கிறது. விஜய் முதல் காந்த் வரை அனைவரும் வெறும் அட்டைக்கத்தி வீரர்கள் என தெளிவான விளக்கம் தந்து உணர்த்தியது அருமை. தினமலரின் வீரம், சமுதாய அக்கறை உண்மையில் போற்றுதற்குரியது . இந்த கட்டுரைக்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்.

 • விருமாண்டி - மதுரை,இந்தியா

  உண்மை .. ஈழம் ஈழம் என்று அலையாமல் இந்தியா என்று வேண்டாம் வேண்டாம் தமிழ்நாடு என்று நினைத்திருந்தால் கூட தமிழ்நாட்டு மக்கள் அடிப்படை தேவையான குடிநீர் பிரச்சனை என்றோ தீர்ந்திருக்கும்.

 • Hindustan - srirangam,இந்தியா

  ஈழம் ஈழம் என்று நினைப்பதை நிறுத்தி விட்டு இந்தியா இந்தியா என்று நினைத்தால்தான் நம் நாடு முன்னேறும்

 • Rss - Mumbai,இந்தியா

  தலைவா படத்தை பார்த்த பின் தற்கொலை செய்திருப்பானோ என்னமோ ..ஹா ஹா செம பஞ்ச்

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement