Advertisement

குஜராத் போல் இந்தியா மாறவேண்டுமா?

குஜராத்திலும் சரி, வெளி மாநிலங்களிலும்சரி, பெரும்பாலும் எல்லோருமே சில கேள்விகளை மீண்டும் மீண்டும் கேட்கிறார்கள். இதே அரசு அதிகாரிகளும் ஊழியர்களும் பல்வேறு முதலமைச்சர்களின்கீழ் வேலை செய்துள்ளனர். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக மட்டும் எப்படி அவர்களால் திட்டங்களைத் திட்டமிட்ட சமயத்திலோ அல்லது முன்னதாகவோ முடிக்க முடிகிறது? எப்படி அவர்களால் லஞ்சம் வாங்காமல் பணியாற்ற முடிகிறது? எப்படிப் புதிய புதிய முயற்சிகளைச் செய்துபார்க்க முடிகிறது? ரிஸ்க் எடுக்கும் தைரியம் எப்படி வந்துள்ளது? எப்படி அவர்களுக்குள், முன்னேறிய நாடுகளுடன் போட்டி போடும் திறன் வந்தது?
அனைத்துக் கேள்விகளுக்கும் ஒரே பதில், நரேந்திர மோடி என்பவரின் தன்னிகரற்ற தலைமை என்பதுதான்.

சிந்தனை முகாம்:வெற்றிகரமாகப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காரணங்களில் ஒன்றாக, மோடியின் கலந்தாலோசிக்கும் பண்பு கருதப்படுகிறது.
அதற்கு ஆதாரமாக, நரேந்திர மோடி ஆண்டுதோறும் நடத்தும் சிந்தனை முகாமை (சிந்தன் ஷிபிர்) சொல்லலாம். இந்த மூன்று நாள் முகாமில், நரேந்திர மோடி உள்பட அனைத்து அமைச்சர்களும், அரசின் உயர் அதிகாரிகளும், கலெக்டர்களும், மாவட்ட டெவலெப்மெண்ட் அதிகாரிகளுமாக சுமார் 200 பேர் கலந்துகொள்கின்றனர். இந்த முகாம் பொதுவாக நகருக்கு வெளியே அமைதியான சூழலில் நடைபெறுகிறது.
யோகா மற்றும் தியானப் பயிற்சியோடு ஆரம்பிக்கும் இந்தப் பயிற்சி முகாமில் மோடியும் மற்ற அதிகாரிகளோடு சேர்ந்து இந்தப் பயிற்சிகளில் ஈடுபடுகிறார்.
இந்த முகாமில் முக்கியமாக, கடந்த ஆண்டின் வெற்றி, தோல்விகள் அலசப்படுகின்றன. மாநிலத்தின் முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்பதால், படிப்பினைகளைப் பறிமாறிக்கொள்ளும் தளமாக இது விளங்குகிறது.
மேலும், அதிகாரிகள், அரசியல்வாதிகள் என்ற வேறுபாடு இன்றி அனைவரும் மக்களுக்குச் சேவை செய்வதற்குத்தான் திரண்டுள்ளோம் என்ற உறுதி நிலை நாட்டப்படுகிறது.
இந்த முகாமில், தற்போது மாநிலத்தில் என்னென்ன பிரச்னைகள் உள்ளன, எந்தப் பிரச்னை உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும், எந்தெந்தத் திட்டங்களை வரும் ஆண்டில் செயல்படுத்தலாம், அவற்றைச் செயல்படுத்துவதில் என்னென்ன சவால்கள் உள்ளன, அவற்றை எதிர்கொள்வது எப்படி போன்றவை மிக ஆழமாக விவாதிக்கப்படுகின்றன.
இந்த விவாதங்களின் அடிப்படையில், வரும் ஆண்டுக்கான குறிக்கோள், துறைவாரியாக எட்டப்படுகிறது.
இத்தகைய அணுகுமுறை, மோடியின் வெற்றிக்கு மிக அடிப்படையான காரணம் ஆகும். யார் யார் திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறார்களோ அவர்களைத் திட்டமிடலிலும் சுதந்தரமாக ஈடுபட வைப்பதன் மூலம் அவர்களின் சாதிக்கும் உணர்வை மோடி தூண்டிவிடுகிறார். வருடாந்திர ‘கன்யா கேலவாணி’ நிகழ்ச்சியின்போது பெண் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பக் கோரி குஜராத்தின் கிராமங்களுக்கு நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் எவ்விதம் செல்கிறார்கள்? அவர்களுக்கு அந்த உணர்வு எவ்விதம் வந்தது? சிந்தித்துப் பார்க்கவேண்டிய ஒன்று இது.
சிந்தனைப் பயிற்சி முகாமில், மிக முக்கியமாக மோடி, தனது கனவை, லட்சியத்தை நேரடியாக அதனைச் செயல்படுத்தப் போகும் அதிகாரிகளோடு பகிர்ந்துகொள்வதோடு, அவர்களது சந்தேகங்களைத் தீர்த்து, அனைவரையும் ஒரே லட்சியமான முன்னேறிய குஜராத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்.
இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாத ஒன்று.

இடமாற்றம்:இன்னுமொரு வித்தியாசம், அரசு அதிகாரிகளின் ‘இடமாற்றம்’ என்பது தண்டனையாகவோ அல்லது ஆயுதமாகவோ குஜராத்தில் பயன்படுத்தப்படுவதில்லை.
அதிகாரிகளுக்கு அவர்கள் குறிக்கோளை அடையத் தகுந்த கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. குறைந்தது இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் அவர்கள் ஒரே பொறுப்பில் இருப்பதால், அரசும், அந்த அதிகாரியும் நினைத்த நல்ல மாற்றங்களைக் கொண்டுவர முடிகிறது.
குஜராத்தில் நான் சுற்றுப்பயணம் செய்தபோது, பல தென்னிந்திய, குறிப்பாக தமிழகம் மற்றும் கேரளத்தைச் சேர்ந்த உயர் அதிகாரிகளைப் பார்க்க முடிந்தது. பலர் அங்கே பத்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளாகப் பணியாற்றி வருபவர்கள். சுதந்தரமாக, அரசியல் கலப்பில்லாமல் மக்களின் முன்னேற்றத்துக்காக மட்டுமே செயல்படும் சூழ்நிலை உள்ளதால், அவர்கள் கால நேரங்களைப் பற்றிக் கவலைப்படாமல், குறிக்கோளை நோக்கித் திடமாக முன்னேறுகிறார்கள்.
கடந்த 9 ஆண்டுகளில், மாநிலக் கல்வித்துறை வெறும் மூன்று செயலர்களை மட்டுமே கண்டுள்ளது. மற்ற மாநிலங்களில் ஆண்டுக்கு ஆண்டு புதுச் செயலளர்களைப் பார்க்கும் நிலைதான் உள்ளது.
அகமதாபாத் மாநகராட்சியின் ஓர் உயரதிகாரியிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர், ‘நாங்கள் எல்லாம் அரசு அதிகாரிகள் அல்லர், செயல் வீரர்கள்’ என்று சொன்னார். பல்வேறு கடினமான திட்டங்களைச் செயல்படுத்திக்கொண்டிருந்தபோதும்கூட அவரிடம் காணப்பட்ட உறுதித்தன்மை, நம்பிக்கை போன்றவை, ஓர் அரசு அதிகாரியுடன் பேசும் உணர்வைக் கொடுக்காமல், வேகமாக முன்னேறிவரும் ஓர் இளம் தொழிலதிபரிடம் பேசியது போன்றே இருந்தது. ஒரு சிறந்த தேசப் பற்று மிக்க தலைவரிடம் பேசியது போன்ற உணர்வையும் அது ஏற்படுத்தியது.

கர்மயோகி பயிற்சி:2004-ம் ஆண்டிலிருந்து கிளாஸ் 1 மற்றும் கிளாஸ் 2அரசு அதிகாரிகளுக்கு ‘கர்மயோகி பயிற்சி’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி முகாமில், அரசு அதிகாரிகளும் ஆசிரியர்களும் கலந்துகொள்கின்றனர். இதன்மூலம் அவர்களுக்குத் தங்கள் வேலையைச் சிறப்பாகச் செய்யப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதில் மாநிலத்தில் உள்ள 2.25 லட்சம் அரசு ஊழியர்கள் கலந்துகொள்கின்றனர்.
இந்தப் பயிற்சி முகாம், அரசு அதிகாரிகளை, மக்களை நோக்கிச் சென்று, மக்கள் பணியாற்றச் செய்துவருகிறது என்றால் மிகையல்ல.

மக்களுக்கு மக்களைக் கொண்டு தொண்டு செய்:மோடி அரசின் மிக அடிப்படைச் சித்தாந்தமான, ‘மக்களுக்கு மக்களைக் கொண்டு தொண்டு செய்’ என்பதை அவருடைய எல்லாத் திட்டங்களிலும் காணமுடிகிறது. மக்கள், எந்தத் திட்டத்தையும் தங்கள் திட்டமாகப் பார்க்கவேண்டும். தங்கள் கனவு நனவாகப் போவதுபோல் எண்ணி, தங்களின் பங்களிப்பை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கொடுக்கவேண்டும். அது தங்கள் திட்டம்தான், அதற்குச் செயல் வடிவம் கொடுக்க அரசு உதவி மட்டுமே செய்கிறது என்ற வகையில்தான் அவர்கள் சிந்திக்கவேண்டும்.
அதனால் தான், எந்தத் திட்டத்தையும் ஆரம்பிக்கும்போது, வெறும் அறிவிப்பு அல்லது நிதி ஒதுக்கீட்டோடு மட்டும் நின்றுவிடாமல், பல மட்டங்களிலும் அந்தத் திட்டம் குறித்து விவாதிக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகளில் அரசியல்வாதிகளின் பங்களிப்பு மிகக் குறைவாக இருந்தாலும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், பயனாளிகள் மன்றங்கள் ஆகியோரின் பங்களிப்பு, அரசு அதிகாரிகளின் கடும் உழைப்பு ஆகியவை மிகுதியாக இருக்கின்றன.
நான் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்தபோது, பொதுவாக எந்தத் திட்டத்தைப் பற்றிப் பேசினாலும், எல்லாருமே, ‘இது நரேந்திர மோடியின் கனவுத் திட்டம். இத்திட்டத்தின் முன்னேற்றத்தை அவர் நேரடியாகக் கண்காணிக்கிறார். இத்திட்டத்தைக் குறிப்பிட்ட தேதிக்குள் முடித்தாகவேண்டும். அதற்குத் தேவைப்படும் எந்த உதவிகளையும் மோடி செய்வார்’ என்பதாகும்.
இது, அவர் மக்களின் கனவைத் தன் கனவாக்கி, அவர்களைக் கொண்டே அதை நனவாக்குவதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
குஜராத்தில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற்றன. ஆனால், அனைத்தும் திட்டமிட்டபடி, ஒன்றன்பின் ஒன்றாக, மிகச் சரியாக நடைபெற்றுள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முழுமையான, ஒத்திசைந்த வளர்ச்சியாக அது உள்ளது. உலகமே வியக்கத்தக்க வளர்ச்சியாகவும் அது உள்ளது.
இதற்குக் காரணம் ஒன்றுதான். நரேந்திர மோடி என்ற நபரின் ஈடு இணையற்ற தலைமைத்துவப் பண்பு.
இந்தியாவின் கலங்கரை விளக்கமாக குஜராத் மாநிலம் திகழ்கிறது. பல அறிவுரைகளுக்கும் செயல் விளக்கங்களுக்கும் அயல் நாடு செல்லும் காலம் போய், இப்போதெல்லாம் மற்ற மாநில அரசுகள் குஜராத் நோக்கிச் செல்கின்றன.
மகாத்மா காந்தியைபோல இந்தியாவின் இதயத்தைப் புரிந்துகொண்டு மக்களுக்காகத் தொண்டாற்றும் பொறுப்பும் கடமையும் உள்ள ஒருவரை, வல்லபபாய் பட்டேலைப் போன்ற எடுத்த காரியங்களை எத்தகைய சவால்களையும் தாண்டி முடிக்ககூடிய வல்லமை கொண்ட ஒரு தலைவரை இந்தியா தேடிக்கொண்டிருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் தரையில் கால் வைத்துக்கொண்டு, அதே நேரம் மிகப்பெரிய கனவுகளையும் நனவாக்கிக்கொண்டிருக்கும் நரேந்திர மோடியால்தான் இந்தியர்களின் இந்தக் கனவையும் நனவாக்க முடியும்.

( நிறைவு பெறுகிறது)

இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-699-5.html
பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ள: http://www.kizhakku.in


(நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை)

Download for free from the Store »

Advertisement

வாசகர் கருத்து (36)

 • ksv - chennai,இந்தியா

  PM Rani - new delhi, கருத்து நெத்தியடி. கண்டிப்பாக இந்தியர்கள் அனைவரும் சிந்தித்து ஒரு முறை மோடிக்கும் வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும்.

 • viswanathan - vellore,இந்தியா

  புத்திசாலி தாமஸ் ஜார்ஜ் அவர்களே- தமிழக முதலமைச்சர் கூட தமிழர்களைத்தான் அங்கிருந்து கூட்டி வந்தார் இந்தியர்கள அனைவரையுமா அழைத்துவந்தார்? அவரவர் மாநிலத்திற்கு அந்தந்த முதலமைச்சர்தான் பொறுப்பு. ஆனால் மோடி மீதுமட்டும் ஏன் உனக்கு இந்த வெறுப்பு. காரணம் அவர் ஒரு இந்து என்பதால்தானே ஷபீர் என்ற அறிவாளி தமிழ் நாடு தான் அவருக்கு சொர்கமாம் அவர் காணும் சொர்க்கத்தில் மின்சாரம் இருக்காது போலும் தண்ணீர் பஞ்சம் இருக்கும் போலும். அது சொர்கமா அல்லது நரகமா? சிங்கப்பூர் பாலா என்பவர் கேட்கிறார் முன்பு ஒரு வாய்ப்பு கொடுத்தபோது என்ன கிழித்தார்கள். 60 வருடம் ஆண்ட காங்கிரஸ் ஐ விட 6 ஆண்டுகள் ஆண்ட பிஜேபி அதிகமாகவே செய்துள்ளது. இன்றும் வறுமை வேலை இல்லா திண்டாட்டம் உள்ளது. இதெல்லாம் 60 ஆண்டுகால ஆட்சியால் தீர்கமுடின்தாதா? இது தெறியாமல் எதவும் பேசவேண்டாம் சிங்கபூர் சீமானே கோவை அருணன் சொல்லியுள்ளது மிகவும் சரி. இங்கே ஒரு கக்கூஸ் கட்டினால் கூட அங்கே ஒரு ஜெயலலிதா படம் வைப்பார்கள். இலவச பஸ் பாஸ் கொடுத்தல் அதில் படம் இவை எல்லாம் ஜெயலலிதாவின் பணத்திலிருந்து செய்கிறாரா? கோவை பிரபு கூறும் செய்தி என்னை பிரமிக்க வைக்கிறது. விஸ்வநாதன் , வேலூர்

 • sabeer - chennai,இந்தியா

  அய்யய்யோ, வேண்டாம் கடவுளே, எங்களை வேரறுத்து விடுவார்கள். இது பயம் அல்ல. அனைத்து மக்களுக்கும் அடைக்கலம் தந்து அனைவரையும் வாழ வைக்கும் ஒரே இனம், ஒரே இடம் தமிழன், தமிழகம். தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லுடா.

 • Pandian - Dallas,யூ.எஸ்.ஏ

  தினமலர் ஏன் இப்படி ஜால்ரா போடுகிறது .

 • Silambarasan - Thiruvannamalai,இந்தியா

  "மோடியின் கலந்தாலோசிக்கும் பண்பு கருதப்படுகிறது." தமிழகத்தின் முதல்வர் ஜெயா அவர்கள் உயர் அதிகாரிகளோடு கலந்து ஆலோசித்தது உண்டா? அல்லது அமைச்சரோடுதான் கலந்து ஆலோசித்தது உண்டா? காவிரியில் தண்ணீர் தரமுடியாது என கர்நாடகா அறிவிக்கும் போது கூட ஜெயா அவர்கள் அனைத்து கட்சி கூட்டம் கூட்டி ஆலோசிக்கவில்லையே? எல்லாத்தையும் விட தன் அமைச்சர் அவரவர் துறை திட்டத்தை அமைச்சரையே அறிவிக்க விடாமல் தானே(ஜெயா) 110 விதியின் கீழ் படிக்கும் இவரின் செயல். அதையும் சாதனை என பாராட்டும் தினமலர்.

 • p.boopathy enkira Boopathiyar - chennai,இந்தியா

  அரசு அதிகாரியும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளும் மக்களுக்காக மக்கள் நன்மை திட்டங்களாக இருவரும் பிரதிபலன் பார்க்காமல் லஞ்சம் - ஊழல் என்று சுயநலம் பார்க்காமல் அரசு அதிகாரிகளும் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட மக்கள் பிரதி நிதிகள் இருவரும் இணைந்து மக்கள் நன்மைக்காக உழைக்க வேண்டும் என்பதே நமது இந்திய அரசியல் சாசனம் கடமை பொறுப்பு வலியுறுத்துகின்றன. இவற்றை மட்டும் படித்தால் போதும் இந்திய குடிமகன் சிறந்த தன்னலமற்ற தலைவராக உருவாக மாறிவிடுவான். இவைதான் நமது அரசியல் சாரம்அம்சமாகும்

 • Venkatesan Jayaraman - Dubai,இந்தியா

  சரியான சாட்டையடி,,நல்ல கருத்து,,...ராணி அவர்களே

 • shiva - Bangalore,இந்தியா

  இது எந்த அளவிற்கு உண்மை என்று எனக்கு தெரியாது ..... ஆனால் இது உணமையாக இருந்தால் சந்தோசம் தான்.... இது உண்மையாக இருந்து மோடி அவர்கள் பிரதம மந்திரி ஆனால் அப்துல் கலாமின் கனவு (இந்திய 2020 வல்லரசு ஆகா மாறும்) நிறைவேறிவிடும்.

 • ganapati sb - coimbatore,இந்தியா

  வாழ்க மோடி வளர்க அவரின் தேச சேவை அவரோடு கரம் சேர்க்க நாங்கள் தயார்

 • Tamilan - Chennai,இந்தியா

  யப்பா தினமலரோட பால் காவடி பன்னீர் காவடி ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. மோடிதவிர ஒங்களுக்கு வேற செய்தியே கெடையாத?

 • Vaithiyanathan nathan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்

  அவர் மக்களின் கனவைத் தன் கனவாக்கி, அவர்களைக் கொண்டே அதை நனவாக்குவதைத் தெள்ளத்தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. குஜராத்தில் நடைபெற்றுள்ள மாற்றங்கள் ஒரே நாளில் நடந்துவிடவில்லை. மெதுவாக, கொஞ்சம் கொஞ்சமாகத்தான் நடைபெற்றன. ஆனால், அனைத்தும் திட்டமிட்டபடி, ஒன்றன்பின் ஒன்றாக, மிகச் சரியாக நடைபெற்றுள்ளன. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு முழுமையான, ஒத்திசைந்த வளர்ச்சியாக அது உள்ளது. உலகமே வியக்கத்தக்க வளர்ச்சியாகவும் அது உள்ளது.நரேந்திர மோடியால்தான் இந்தியர்களின் எந்த கனவையும் நனவாக்க முடியும்.

 • SUDARSAN - houston,யூ.எஸ்.ஏ

  தூங்கும் ராகுல், தூங்காமல் உழைக்கும் மோடி. கேதர்நாத் கோவிலை புணரமைக்க குஜராத் தயார். என்று வளர்ச்சி நாயகன் மோடி அவர்கள் உத்தரகாண்டின் முதல்வரை சந்தித்து இதை கூறியுள்ளார். பஹுகுனாவோ, "நாங்கள் இது குறித்து யோசித்து பின் சொல்கிறோம்" என்று சொல்லியுள்ளாராம். மோடி அவர்கள் குஜராத்தை சேர்ந்த தன்னார்வு தொண்டர்களை, மக்களை மீட்பதற்கும், காப்பாற்றுவதற்காகவும் அனுப்புவதற்கு தயார் என்று தெரிவித்தாராம். "எங்கள் குழுவிற்கு, குஜராத் பூகம்பத்தில் மக்களை மீட்டெடுத்த அனுபவமும் ஆற்றலும் உள்ளது, அவர்கள் மீண்டும் கேதர்நாத்தை புனர்நிர்மானிக்க பெரிதும் உதவுவார்கள்" என்றும் சொல்லியுள்ளார். "விமானம் மூலமாக மீட்டெடுப்பதே ஒரே வழி என்பதை நான் வான் ஆய்வு மூலம் தெரிந்துக் கொண்டேன். பல மக்கள் கூட்டம் கூட்டமாக சிக்கி தவிப்பதையும் பார்த்தேன். நான் பஹுகுனாவிடம், காணாமல் போன மக்களின் பட்டியலை உடனுக்குடன் தயாரிக்குமாறு யோசனை தெரிவித்தேன். மேலும் வியாதிகள் பரவுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது, ஆகையால் நாம் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். இரண்டு போயிங் 737-700 "ஜெட் ஏர்வேஸ்" விமானங்கள், கேதர்ந்ந்தாத்திலிருந்து, அஹமதாபாத்திற்கு பிரத்யேகமாக (பல முறை செல்வதற்கு) அமர்த்தப்பட்டுள்ளது. 80 டொய்யோட்டா இன்னோவா கார்கள், டெஹ்ராடூனில் உள்ள பாதுகாப்பான இடங்களுக்கு குஜராத்திகளை கொண்டு செல்வதற்கும், 25 சொகுசு பஸ்கள் பல மக்களை டில்லிக்கு கொண்டு செல்வதற்காக (திரும்ப திரும்ப) பிரத்யேகமாக பணியமர்தப்பட்டது. இப்படி கிட்டத்தட்ட 15000 பயனிகளை மீட்டு உள்ளதாக மோடி அவர்கள் தெரிவித்தார். தமக்கு இல்லாத போதும், பயனிகளுக்கு உணவளித்த உத்தரகாண்டின் உள்ளூர் மக்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். "An area of major concern in the coming times is the local residents of Uttarakhand who have come out in a big way to help the visiting and stranded pilgrims. On behalf of all the pilgrims, I thank the residents of Uttarakhand who without thinking about whether there is food available to them and their families came out to offer all they had to the pilgrims. I am grateful and acknowledge their love and affection showered on the flood victims in this hour of crisis," Modi said. மீட்பு பணி உத்தர்காண்டில், கிட்டத்தட்ட முடிந்த நிலையில், ராகுல் இப்போது உத்தரகாண்டிற்கு வந்துக் கொண்டிருப்பதாய் செய்திகள் வந்துள்ளது. திரைப்படங்களில் கடைசி காட்சியில் வரும் போலிஸ் போல் எல்லாம் முடிந்த பின் வரும் ராகுலை வரவேற்க காங்கிரஸ் தலைவர்கள் முண்டி அடித்து செல்வார்கள், ஏதாவது ஒரு குடிசையில் உட்கார்ந்து புகைப்படத்திற்காக கஞ்சி குடித்துவிட்டு அவர் திரும்புவார் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. என்ன பெரிதாய் மோடியின் வேகம்? தன் ஊழல் மகளுக்கு சீட்டு வாங்க விமானம் பிடித்து தில்லி சென்ற கட்டுமரத்தின் வேகம் யாருக்கு வரும் என்று நீங்கள் கேட்பது தெரிகிறது. அதை மிஞ்ச முடியுமா, அது குடும்ப பாசமாயிற்றே ?

 • Thomas George - New York,யூ.எஸ்.ஏ

  குஜராத் முதல்வர், நரேந்திர மோடி, தன் அதிகாரிகள் குழுவினருடன் உத்தரகண்ட் சென்று, 15 ஆயிரம் குஜராத்திகளை விமானங்களில் ஏற்றி, குஜராத் கொண்டு சென்றுள்ளார். இந்திய விமானப் படையின் முதலாவது மீட்பு அணியின் கமாண்டராக பணியாற்றி வருகிறவர் எஸ்.எம்.யூனூஸ். தமது மிக்-17 வி5 ஹெலிகாப்டர் மூலம் கேதார்நாத் சுனாமியில் சிக்கிய இந்து யாத்ரீகர்களை மீட்டுள்ளார். யூனூஸின் மகத்தான சேவை ஒரு இந்தியனாக பெருமை கொள்ள வைக்கிறதா?. குஜராத்திகளை மட்டுமே விமானங்களில் ஏற்றி சென்ற மோடியை ஒரு இந்தியனாக பெருமை கொள்ள வைக்கிறதா?.

 • Prabu.KTK - Coimbatore,இந்தியா

  டெல்லியில் நடை பெற்ற ஒரு பொருட் காட்சியில் குஜராத் மாநில ஸ்டாலுக்கு சென்று பார்த்தால் அதிர்ச்சி திரு. மோடியின் ஒரு புகை படம் கூட இல்லை தன்னநலம் அற்ற தலைவர் என்பதற்கு இதுவே சாட்சி நாம் மோடியை பிரதமராக தேர்ந்து எடுப்போம். இந்தியாவை வல்லரசு ஆக்குவோம். ஜெய் ஹிந்த்

 • K.N.Sridharan - Bangalore,இந்தியா

  பத்து ஆண்டுகளுக்கு முன் நடந்த மதக்கலவரங்களை திருப்பி திருப்பி சொல்லியே மோடியை விமரிக்கும் காங்கிரஸ் அவர் செய்த சாதனைகளை மறைக்க பார்க்கிறது. 1984 ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் அதற்கு முன்னும் பின்னும் நடந்த மதக்கலவரங்கள் பற்றி இவர்கள் பேசுவதில்லை. பிரிட்டிஷ் செய்த பிரித்தாளும் சூழ்ச்சிகள் இப்போதும் தொடர்கிறது மோடியை தனிமைப்படுத்தும் முயற்சிகள் எடுபடாது. இளைஞர்களின் கனவு கண்டிப்பாக பலிக்கும். அடுத்த பிரதமர்மோடிதான்

 • Karai Arunachalam, Kuwait - Mangaf,குவைத்

  யார் ஆள்கிறார்கள் என்பது முக்கியம் இல்லை. எப்படி ஆள்கிறார்கள் என்பதுதான் முக்கியம். இவ்வுலகில் என்னத்தை கட்டிக்கொண்டு போகப்போகிறோம். ஆளும் வரை மக்களுக்கும், நாட்டுக்கும் நல்லது செய்துவிட்டு சென்றால் நாம் அழிந்தாலும் வரும் சந்ததி தங்கள் பெயரை சொல்லும்....

 • Venkatesan Jayaraman - Dubai,இந்தியா

  மோடி இஸ் கிரேட்

 • R.ARUNAN - coimbatore,இந்தியா

  எனது ஆட்சியில் என்று மூச்சுக்கு முந்நூறு தரம் கூறும் ஜெயா அவர்கள் இதை எண்ணிப்பார்க்க வேண்டும்.நான் உத்தரவிட்டேன் எனக்கூறுவதையும் நினைத்துப்பார்க்க வேண்டும்.IAS ,IPS களை தன்னுடைய வீட்டு வேலைக்காரர்களைப்போல் நடத்துவதையும் நிறுத்தவேண்டும்.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement