Load Image
Advertisement

தமிழக குடிமகன்களை கவர்ந்து இழுக்க "டாஸ்மாக்கில் புதிய சரக்கு அறிமுகம்

தமிழக குடிமகன்களை கவர்ந்து இழுக்க "டாஸ்மாக்'கில் புதிய சரக்கு அறிமுகம் தமிழகத்தில் உள்ள குடிமகன்களை கவர்ந்து இழுத்து, அதன் மூலம் விற்பனையை அதிகரிக்க, டாஸ்மாக்கில், புதிய ரக பிராந்தி அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.தமிழகத்தில், 2003 நவ., 29ல் முதல், "டாஸ்மாக்' மூலம் மது விற்பனை நடந்து வருகிறது. விற்பனை துவக்கப்பட்ட காலத்தில், 3,250 கோடியாக இருந்த மது விற்பனை தற்போது, பத்தாவது ஆண்டில், அடி எடுத்து வைத்துள்ள நிலையில், 25 ஆயிரம் கோடியை தாண்டும், நிலைக்கு உயர்ந்துள்ளது.
அது மட்டுமின்றி, தொடர்ந்து
ஒரே சரக்கை குடித்து வரும் குடிமகன்களை கவர்ந்து இழுக்கவும், உற்சாகப் படுத்தும் வகையில், அவ்வப்போது புதிய சரக்குகளையும், அறிமுகம் செய்து வருகிறது.
கடந்த, 2011ல், 75 புதிய சரக்குகளை அறிமுகம் செய்தது. 2012ம் ஆண்டில், 115 புதிய சரக்குகளை அறிமுகம்
செய்துள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எம்பயர் பிராந்தியை அறிமுகம்
செய்துள்ளது.
இந்த ரக பிராந்தி, குவாட்டர் (180 மி.லி.,) 80 ரூபாய்க்கு விற்கிறது. அதிக நாற்றம் இல்லாத, இந்த பிராந்தி ரகத்துக்கு தற்போது, குடிமகன்கள் மத்தியில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
"டாஸ்மாக்' அதிகாரி ஒருவர்
கூறியதாவது:
குடிமகன்களுக்கு வித்தியாசமான சுவையை வழங்கி கவர்ந்து இழுக்கும் வகையில், புதிய ரக பீர், பிராந்தி, உயர்ரக மதுபானங்கள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நடுத்தர குடிமகன்களை கவரும் வகையில், எம்பயர் பிராந்தியை அறிமுகம் செய்துள்ளோம்.
புத்தாண்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மேலும், 50 புதிய ரக பிராந்தி, ரம், விஸ்கி, பீர் ஆகியன,
விற்பனைக்கு வர உள்ளன.
இந்த புதிய ரகங்கள் டிச., மூன்றாவது வாரம் முதலே, கடைகளில்
விற்பனைக்கு வந்து விடும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

- நமது நிருபர் -


வாசகர் கருத்து (2)

  • சக்துயபிரியன் - மயிலாடுதுறை

    அருமையான அரசாங்கம் என்பது உன்மைதான் குடுமகன்கள் மீது எவ்வளவு அக்கரை

  • தினகரன் - காஞ்சிபுரம்,இந்தியா

    good

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement