Advertisement

பாண்டுரங்கன் கோயில் கும்பாபிஷேகம்

கும்பகோணத்திலிருந்து மாயவரம் செல்லும் வழியில் உள்ளது கோவிந்தபுரம். சேங்காளிபுரம் அனந்தராம தீட்சிதரின் வம்சத்தில் வந்த விட்டல்தாஸ் மகாராஜ், இங்கு ஸ்ரீ விட்டல் ருக்மணி சமஸ்தான் என்ற ஒரு பக்தி மற்றும் தொண்டு அமைப்பை உருவாக்கி இருக்கிறார். விட்டல்தாஸ் மகாராஜின் நாமசங்கீர்த்தனம் மற்றும் பக்த விஜயம் உபன்யாசங்களைக் கொண்ட நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி, தமிழகம் உட்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.


பாண்டுரங்கன் கோயில்: கோவிந்தபுரம் விட்டல்தாஸ் ருக்மணி சமஸ்தான் வளாகத்தில் ருக்மணி சமேத பாண்டுரங்கனுக்கு ஒரு பிரமாண்டமான கோயிலை பாண்டுரங்கன் கோயில்: விட்டல்தாஸ் மகராஜ் நிர்மாணித்து வருகிறார். 2011ல் கும்பாபிஷேகம் நடைபெற இஅக்கும் இந்த கோயிலின் கோபுரம் 132 அடி உயரம் கொண்டது. அதன் மேல் 18 அடி உயர கலசம் அமைய இருக்கிறது. உலகிலேயே பகவான் பாண்டுரங்கனுக்கு இவ்வளவு பெரிய கோயில் எங்கும் அமைந்ததில்லை. நாம சங்கீர்த்தனம், ராதா கல்ய‌ாணம் போன்ற நிகழ்ச்சிகளை பக்தர்கள் வசதியாக பார்க்கும் வகையில் தூண்களே இல்லாத வசந்த மண்டபம், இந்த கோயிலின் சிறப்பம்சமாகும். பாண்டுரங்கனின் பிரதான தலமான பண்டரிபுரம் அமைந்துள்ள மகாராஷ்டிர பாணியில் இந்த கோயில் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.


கோசாலை: பசுக்களின் மகத்துவத்தையும் அவற்றை வளர்ப்பதால் கிடைக்கும் பலன்களையும் விளக்கும் வகையில் மிகப் பெரிய கோசாலையை கோவிந்தபுரத்தில் விட்டல்தாஸ் நிறுவி நிர்வகித்து வருகிறார். இங்கு வளர்ந்து வரும் அனைத்து பசுக்களும் பிருந்தவனம், துவாரகா மற்றும் கோவர்த்தனம் போன்ற இடங்களிலிருந்து கொண்டு வரப்பட்டவை. அதாவது பகவான் கிருஷ்ணர் மேய்த்த பசுக்களின் வம்சத்தில் வந்தவை. 300க்கும் மேற்பட்ட இந்த பசுக்கள், மிக நல்ல முறையில் உணவு, தண்ணீர் வசதிகளுடன் உரிய மருத்துவ வசதிகளுடன் பராமரிக்கப்படுகின்றன. இந்த பசுக்கள் மூலம் கிடைக்கும் பால் பொருட்களும் வரட்டியும் விற்கப்படுவதில்லை.பகவானின் அபிஷேகத்திற்கும் பயன்படுவதோடும் அருகில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது.


பொது நலப்பணிகள்: விட்டல் ருக்மணி சமஸ்தான் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு கிராம ஏழை மக்களுக்காக இலவச மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது. இதேபோல் கிராமப்புற பள்ளி மாணவர்களுக்காக இலவச பாடப் புத்தகங்கள், பைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்கள் ஆகியவை தரப்படுகிறது. நேரடி காட்சிக்கு இங்கே கிளிக் செய்யவும்: www.vittalrukmini.org

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து (13)

 • Anantha Padmanaban - chennai,இந்தியா

  6 மாதங்கள் முன்பு கோவிந்தபுரம் காண வாய்ப்பு கிடைத்தது. மிக அருமையான கோயில். ஆனால் திரு விட்டல்தாஸ் அவர்களின் பெயர் எங்குமே பொறிக்கப்படவில்லை. என்னே தன்னடக்கம்.

 • ரேவதி swaminathan - சென்னைindia,இந்தியா

  oh god,its simply superb and fantastic namasankeerthanam and ramayan upanyasam long live sri sri vittaldas maharaj and our sincere pranams to sri guruji maharaj

 • Gopalan - Chennai,இந்தியா

  Really enjoying the experience of Sri.Vittaldas Maharaj Vittal Bhajans and Upanyasam. No word to express our feelings. Really Great.

 • நாராயணன் - germany,இந்தியா

  great solace for longing soul . what a way to kill the stress . ATLEAST it will not lead us to wrong path

 • sbvச.ப.வரலக்ஷ்மி - chennai,இந்தியா

  hearing nama sangeerthanam is very energetic to our mind and body. All the perple to tell bhavan namas daily to get the connection between god to us.( the password connecting the internet like that the namas connection to god) we will have good health by telling the bhavan namas

 • vasanth - chennai,இந்தியா

  திஸ் இஸ் எ வெரி திங் அண்ட் கிரேட் ஷோ

 • sundararajan - CHENNAI,இந்தியா

  I am in the United States at present. I was regular in enjoying this program when I was in Chennai. I am happy i can enjoy it as it is web cast.

 • சாமி சரணம் கோவிந்தன் - EERODU,இந்தியா

  நாட்டில் இது ரொம்ப முக்கியம்.

 • எஸ் ராதாக்ருஷ்ணன் - chennai,இந்தியா

  நான் தற்பொழுது அமெரிக்காவில் இருக்கிறேன். தினமும் நாம சந்கீர்தனத்தை வேப்காஸ்டில் பார்த்து மகிழ்கிறேன். இந்த கலி காலத்தில் நாம சங்கீர்த்தனம் மட்டுமே நமக்கு நல்ல கதியை கொடுக்கும். இது நமது பகுத்து அறிவாளர்களுக்கு புரிந்தால் நாட்டுக்கு நல்லது. இந்த நாம சந்கீர்தனத்தை கேக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை பார்த்தாவது புரிந்து கொள்ளட்டும்.

 • எஸ்.ராதக்ருஷ்ணன் - chennai,இந்தியா

  நான் தற்பொழுது அமெரிக்காவில் இருக்கிறேன். தினமும் வேப்கஸ்டில் நாம சங்கீர்த்தனம் கேட்டு மகிழ்கிறேன். நம் தமிழ் நாட்டு பகுத்தறிவாளர்களும் கேட்டால் நன்கு இருக்கும். நாம சந்கீர்தம் கேட்க வரும் மக்கள் கூட்டத்தை பார்த்தாவது புரிந்து கொள்ளட்டும். இந்த கலி காலத்தில் நாம சங்கீர்த்தனம் தான் நல வழி காட்டும்.

 • parthasarathy - nellore,இந்தியா

  This is a very good thing. Kindly provide me a addressand telephone no. of the same to my e.mail address. sarathy

 • KANNADASAN - SIVAGANGA,இந்தியா

  PL .GIVE MR .MK .STALIN EMAIL ID

 • vaidya - sydneynsw2212,இந்தியா

  நாம சங்கீர்த்தனம் கேட்டு மகிழ்கிறோம்.

 • YAGNASHANKAR - CHENNAI,இந்தியா

  It is wonderful devotional experience to listen maharaj"s nama sangeerthan live in website.

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement