dinamalar telegram
Advertisement

மின்சார கண்ணா...

Share
Tamil News
தமிழகம் மட்டுமல்லாமல், உலகின் பல பகுதிகள், மின்தட்டுப்பாட்டால் திணறிக்கொண்டிருக்கின்றன. மின்சாரத்தை உற்பத்தி செய்யும் சாதனங்கள், சோலார் இயந்திரங்கள் என பல ஆய்வுகள் தொடர்ந்து நடக்கின்றன. இருப்பினும், குறைந்த செலவில், மாசு இல்லாமல் மின்சாரத்தை உற்பத்தி செய்வது கடினமாகவே இருக்கிறது.

இந்நிலையில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.ஆர்.ஸ்ரீதர் என்பவரின் கண்டுபிடிப்பு, உலக அளவில் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது. இந்த சாதனத்தின் பெயர் "புளூம் பாக்ஸ்'.

யார் இந்த ஸ்ரீதர்: 1960ல் தமிழகத்தில் பிறந்த இவர், திருச்சி "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி'யில் மெக்கானிக்கல் இன்ஜினி யரிங் படித்தார். 1980களில் அமெரிக்காவிற்கு சென்ற இவர், அங்குள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில், "நியூக்ளியர் இன்ஜினியரிங்'கில் எம்.எஸ்.பட்டமும், மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் பிஎச்.டி.,யும் பெற்றார். பின், அரிசோனா பல்கலைக்கழக விண்வெளி ஆய்வ கத்தின் இயக்குன ராகவும், "ஏரோஸ்பேஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்' துறையில் பேராசிரி யராகவும் பணிபுரிந்தார். செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ தேவை யான ஆக்சிஜன் உள்ளிட்ட வற்றை தயாரிக்க முடியுமா என்ற ஆய்வை பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஸ்ரீதர் தலைமையில் "நாசா' மேற்கொண்டது. இந்த ஆய்வு பாதியில் நிறுத்தப்பட்டது.

ரூட்டை திருப்பிய ஸ்ரீதர்: செவ்வாய் கிரகத்தில் ஆக்சிஜனை தயார் செய்ய முடியுமா என ஆராய்ந்த ஸ்ரீதர், அதே ஆக்சிஜனை உருவாக்கி, அதனுடன் ஹைட்ரஜனை இணைத்து மின்சாரம் தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். 2002ம் ஆண்டு "புளூம் எனர்ஜி' என்ற நிறுவனத்தை கலிபோர்னியாவில் துவக்கினார். பல ஆண்டு ஆராய்ச்சி முடிவில், 2010 ல் "புளூம் பாக்ஸை' உலகிற்கு அறிமுகப்படுத்தினார். இந்த ஆராய்ச்சியை கண்டு அமெரிக்கர்கள் வியப்படைந்தனர்.

புளூம் பாக்ஸ்:சுற்றுச்சூழல் மாசுபடாமல் மின்சாரம் தயாரிக்கும் கைய டக்க அளவுடைய "புளூம் பாக்ஸ்' உதவியுடன், சராசரியாக ஆசிய கண்டத்திலுள்ள நான்கு வீடுகளுக்கு அல்லது ஒரு அமெரிக்க வீட்டிற்கு தடையில்லா மின்சாரம் வழங்கலாம். குளிர்சாதனப்பெட்டி அளவுடைய "புளூம் பாக்ஸை' கொண்டு 100 வீடுகளை கொண்ட ஒரு அபார்ட் மென்ட்டிற்கு மின்சாரம் அளிக்கலாம். இதன் உட்புறத்தில் எரிபொருள் மின்கலம் ( ஊதஞுடூ ஞிஞுடூடூ ) உள்ளது. புரோட்டான் மற்றும் செராமிக் ஜவ்வுகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை உலோக வினையூக்கிகளால் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்குள் மீத்தேன், ஆக்சிஜனை செலுத்தும்போது 1000 டிகிரி வெப்பநிலை உருவாகி, மின்சாரம் உற்பத்தியாகிறது. பெரிய அளவிலான "புளூம் பாக்ஸ்'கள் 3 கோடி முதல் 4 கோடி ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. கூகுள், சான்பிரான் சிஸ்கோ விமானநிலையம், சி.ஐ.ஏ., உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் இந்த "புளூம்பாக்ஸை' பயன்படுத்துகின்றன. இன்னும் சில ஆண்டுகளில் சாதாரண மக்கள் உபயோகப்படுத்தும் வகையில் குறைந்த விலை "புளூம்பாக்ஸ்'கள் தயார் செய்யப்படும் என ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.
Advertisement
 

Home வாசகர் கருத்து (5)

 • Padma Priya Bhaskar - Chennai,இந்தியா

  வாழ்த்துக்கள். மின்சாரம் கண்டு பிடித்து எங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றுங்கள்.

 • muticreator animation - chennai,இந்தியா

  ஐயா ஸ்ரீதர், நீங்கள் ஒரு இந்தியன் என்பதில் நாங்கள் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்... ஐயா நாங்கள் மின்சாரம் சரிவர கிடைக்காமலும் மற்றும் அதனால் பாதிகபட்டுல விலை வாசி உயர்வும் மக்களை மிகவும் வாட்டுகிறது. உங்கள் உதவி எங்களுக்கு மிகவும் தேவைபடுகிறது .. இப்படிக்கு இந்திய மக்கள் - யாருப்பா இவன் இவன் முலம் மக்களுக்கு மின்சாரம் கிடைச்சுட்டா அரசுக்கு வருமானம் இருக்காது நாம ஷர்ட் பாக்கெட்டுகும் சங்குதான்... இதன் முலம் சுற்றுப்புற சுழல் மாசு அடைகிறது என்று ஸ்டேட்மென்ட் வாங்கி இந்த கர்மம்புச்ச பாக்ஸ்ச இந்திய உள்ள வராம பாதுகாப்பது நமது கடமை - - - - இப்படிக்கு நமது இந்திய அரசியல் வாதிகள்

 • ram84 - chennai,இந்தியா

  வாழ்த்துக்கள் ........

 • அறிவாலயம் c / o போயஸ் கார்டன் - Chennai,இந்தியா

  இன ஆராய்ச்சியில் ஈடுபட்டு நேரத்தை வீணாக்கிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு மத்தியில் இப்படி ஒரு விஞ்ஞானியா? பாராட்டுகள்

 • balaji - melbourne,ஆஸ்திரேலியா

  excellent invention.dear citizens of india dont waste ur time by speaking about bad politicians and poli samiyars like nithyananda,think and talk about the scientist like sridhar and please help those people to protect our earth thanks balaji -melbourne

Advertisement