Advertisement

மேடை நாயகர்கள்.... கல்வி காந்தி

இலக்கியம், அரசியல், ஆன்மிக பேச்சாளர்கள், பட்டிமன்ற பேச்சாளர்கள் வரிசையில் இந்த மேடை நாயகர்' வித்தியாசமானவர். கல்வி... கல்வி... கல்வி பற்றியே பேசுபவர். கல்வி ஆலோசகர்கள் குறைவான தமிழகத்தில், மேடை தோறும் மாணவர்களுக்கு தன்னம்பிக்கை தந்து, வழிகாட்டுபவர். இதுவரை மூன்-றாயிரம் மேடைகள்; இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியவர். மாணவர்களால் "கல்வி காந்தி' என்று அழைக்-கப்படுபவர் ஜெயப்பிரகாஷ் காந்தி.

எம்.டெக்., படித்த நீங்கள் பெரிய பதவிகளை தேடி சென்றிருக்கலாம். "கல்வி ஆலோசகர்' ஆக வேண்டும் என்று ஏன் தோன்றியது?

என் தாய்மொழி குஜராத்தி. பல ஆண்டுகளாக சேலத்தில் வசிக்கிறோம். தமிழ் மீது எனக்கு அளவில்லா ஆசை. தமிழ் மீடியம் தான் படித்தேன். என் அப்பா ஒரு வர்த்தகர். நான் படிக்கும்போது, என் நண்பர்கள் எல்லாம் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படித்தார்கள். எனக்கு என்ன படிப்பது எங்கு படிப்பது என்றெல்லாம் தெரியவில்லை. என்றாலும் எம்.டெக்., முடித்தேன். "காட்டன் பிசினஸ் செய்' என்றார், அப்பா. அதன்படி, "பிசினஸ்' செய்து கொண்டிருந்த போது பொழுதுபோக்காக, நான்கைந்து மாணவர்களுக்கு கல்வி ஆலோசனை வழங்கினேன். "ஜேசீஸ்' அமைப்பின் மேடைகளில் பேசினேன். மாணவர்களுக்கு வழிகாட்ட ஒரு கல்வி ஆலோசகர் தேவை என்று தோன்றியது. நிறைய புத்தகங்கள் படித்தேன். டேட்டா கலெக்ஷன்' செய்தேன். பேச ஆரம்பித்தேன். இன்று இதுவே தொழிலாகி விட்டது. "இது தொழிலா' என்று என் அப்பா கூட கேட்டார். "சைக்காலஜி' படித்தால்தான் "ஆலோசகர்' ஆக முடியும் என்ற கருத்தை மாற்றினேன். என் பேச்சை கேட்டு, படித்து, சில குடும்பங்களாவது முன்னுக்கு வந்தால் அது எனக்கு பெருமை தானே.

நீங்கள் இவ்வாறு வழிகாட்டியவர்கள், பின்னாளில் உங்களை சந்தித்து நன்றி கூறியிருக்கிறார்களா? தமிழர்கள் நன்றி மறந்தவர்கள் அல்ல. நூற்றுக்கணக்கான பேர் சந்தித்து மெய்சிலிர்த்து இருக்கிறார்கள். அரசு பள்ளியில் படித்த பால் வியாபாரி மகன், 2004ல் என்னிடம் வந்தார். பிளஸ் 2 கட்-ஆப் மதிப்பெண் குறைவுதான். பி.இ., சிவில் சேரச்சொன்னேன். தயக்கத்தோடு தேர்வு செய்தார். நன்றாக படித்தார். எம்.இ., முடித்தார். மாதம் ஒன்றரை லட்சம் சம்பளம். முதன்முதலாக வாங்கிய காரில் நான் அமர்ந்த பிறகுதான், ஓட்டுவேன் என்று அடம் பிடித்தார். அவர் அப்பா என்னை அழைக்க, காரில் அமர்ந்து வாழ்த்தி விட்டு வந்தேன். இதுபோன்ற சந்தோஷ சந்திப்புகள் ஏராளம். அழகான தமிழில், அட்சர சுத்தமாக பேசி மாணவர்களை அரங்கிற்குள் கட்டுப்படுத்தி வைக்கிறீர்கள்? மாணவர்களை, அதுவும் கல்விக்காக ஒரே இடத்தில் அமர வைத்து பேசுவது கஷ்டமான விஷயம்தானே...

நிச்சயமாக. மாணவர்களின் எதிர்காலத்திற்கு தேவையானவற்றை அவர்களது பாணியில் பேசினால், ஆர்வமாக கேட்பார்கள். இன்றைய மாணவர்களை குறைத்து மதிப்பிட முடியாது. "உன் வாழ்க்கையை வளமாக்கும் படிப்பு இது' என்று நான் ஆதாரபூர்வாக, புள்ளி விபரங்களோடு பேசும் போது கேட்கிறார்கள். நம்புகிறார்கள். இன்ஜினியரிங் அட்மிஷன் நேரத்தில் பொதுவாக சொல்வாங்க.., "அப்பா, அம்மா சொல்றதை பசங்க கேட்கிறாங்களோ இல்லையோ ஜெயப்பிரகாஷ் காந்தி சொல்றத கேட்கிறாங்க'. அந்த அளவுக்கு நான் ஆய்வு செய்து, மேடைகளில் பேசுகிறேன். நீங்கள் ஆலோசனை தரும்போது சில கல்லூரிகளில் சேரச் சொல்வீர்கள். சிலவற்றில் சேர்ந்து விட வேண்டாம், என்பீர்கள். பொது மேடையில் பேசும்போது தர்மசங்கடமாக இருக்காதா? இந்த பணியில் நேர்மை முக்கியம். யாருக்கும் சார்ந்து மேடையில் பேச மாட்டேன். இந்த மாணவன் படித்து வெளியேறும்போது, எப்படி வேலைவாய்ப்பு இருக்கும் என்ற அடிப்படையில்தான், குறிப்பிட்ட படிப்புகளை தேர்வு செய்ய சொல்வேன். தரமில்லாத கல்லூரிகளை "குப்பை' என்று மேடையில் விமர்சித்தது உண்டு. நல்ல படிப்புகளை தரும், தரமான கல்லூரிகளை பற்றி பாராட்டியதும் உண்டு.

புதுப்புது படிப்புகளை பற்றியும், அடுத்த ஐந்தாண்டுகளில் அதன் எதிர்காலம் தொடர்பாகவும் மேடையில் பேசுகிறீர்கள்? இதற்கு எப்படி தயார் செய்கிறீர்கள்?


பல பேராசிரியர்களுக்கு கூட புதிய படிப்புகள் பற்றி தெரிவது இல்லை; இது அவர்கள் வேலையும் அல்ல. இவற்றை பற்றி எல்லாம் அறிய "டர்னிங் பாயின்ட்' என்ற "டேட்டா கலெக்ஷன் சென்டர்' வைத்திருக்கிறேன். கல்வி தொடர்பாக எந்த தகவல் வந்தாலும், பதிவு செய்து விடுவேன். என் மனைவி குறிப்பு எழுதி தருவார். ஒவ்வொரு மேடைக்கு செல்லும் முன்பும், ஒன்றரை மணி நேரம் "அப்டேட்' செய்து கொள்வேன்.

வெளிநாடுகளோடு ஒப்பிடும்போது, நம் நாட்டில் கல்வி தொடர்பான கவுன்சிலிங் எப்படி உள்ளது?

அங்கு பள்ளி, கல்லூரி அளவில் கூட ஆலோசகர்கள் உள்ளனர். நமது நாட்டில் நிலைமை வேறு. "டேட்டாவுடன்' ஆய்வு செய்து சொல்லும் ஆலோசகர்கள், ஐந்து பேர்தான் உள்ளனர். நமது மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்கள் இன்னும் தேவை. தினமலர் வழிகாட்டி நிழ்ச்சிக்கு வரும் மாணவர்கள் எண்ணிக்கையை பார்த்து பிரமிப்பு அடைந்துள்ளேன். ஒரு சிறு குறிப்பு கூட இல்லாமல் மூன்று மணி நேரம் பேசுவது எப்படி? ஈடுபாடுதான் காரணம். படித்ததை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வேன். கவனச் சிதறல்கள் இல்லாமல் மனதை ஒருமுகப்படுத்தி பேசுவேன். வெளிநாடுகளிலும் கவுன்சிலிங் நடத்த திட்டம் உள்ளது. இன்னும் கேட்க askjpgandhigmail.com


தொடர்புக்கு 90039 14035


- ஜீவிஆர்

Download for free from the Store »

Advertisement
 

வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

கருத்தைப் பதிவு செய்ய

Advertisement