Load Image
Advertisement

சட்டசபையில் இருந்து கவர்னர் ஏன் வெளியேறினார்?: அண்ணாமலை அடுக்கிய காரணங்கள்!

Why did the governor leave the assembly?: Annamalai explained the reasons!  சட்டசபையில் இருந்து கவர்னர் ஏன் வெளியேறினார்?: அண்ணாமலை அடுக்கிய காரணங்கள்!
ADVERTISEMENT

சென்னை: "சபாநாயகர் திமுக எம்.எல்.ஏ., போல பேசியதால், கவர்னர் சட்டசபையில் இருந்து வெளியேறினார்" என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

கவர்னர் உரை
Tamil News
மேலும் அவர் கூறியதாவது: தமிழக சட்டசபையில் திமுக தொண்டரை விட மோசமானவராக சபாநாயகர் அப்பாவு நடந்து கொண்டார். கவர்னர் அவரின் கருத்தை வெளிப்படுத்திவிட்டு இருக்கையில் அமர்ந்திருந்தார். சபாநாயகர் கட்சி சார்ந்து பேசினார். சபாநாயகர் அவர் கட்சி சார்ந்து பேசுவதற்கு எந்த அதிகாரமும் இல்லை. கவர்னருக்காக எழுதிக்கொடுக்கப்பட்ட உரையில் திட்டமிட்டு பரப்பப்படும் பொய் இடம்பெற்று இருந்தது.


உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழகத்துக்கு மிக குறைந்த தொகையே கிடைத்தது. மழையை கையாண்டதற்காக ஆளும் கட்சிக்கு பாராட்டு என கவர்னர் உரையில் எழுதி உள்ளனர். முதல்வரின் சுயபுராணத்தை பாட கவர்னர் உரையில் எழுதி உள்ளனர். சபாநாயகர் திமுக எம்.எல்.ஏ., போல பேசியதால் கவர்னர் சட்டசபையில் இருந்து எழுந்து சென்றார்.


தேசிய கீதம்
அரசு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடனும், தேசிய கீதத்துடனும் துவங்க வேண்டும், முடியும்போது தேசிய கீதத்துடன் முடிய வேண்டும் என்பது தான் பா.ஜ.,வின் நிலைப்பாடு. செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என முதல் நாளில் இருந்து சொல்லி வருகிறோம். அமைச்சருக்கு செய்யும் வேலைக்காக சம்பளம் தருகிறோம். ஊழல் வழக்கில் கைதான ஒரு அமைச்சருக்கு மக்கள் வரிபணத்தில் சம்பளம் கொடுத்து இலாகா இல்லாத அமைச்சராக 8 மாதமாக வைத்து இருக்கிறார்கள்.


பா.ஜ.,வுக்கு வெற்றி
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தால் ஜாமின் கிடைக்குமா என அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த பின் ஜாமின் குறித்து விவாதிக்கலாம் என நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. செந்தில் பாலாஜி ஊழல்வாதி என்பதிலே யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை. செந்தில் பாலாஜி ராஜினாமாவை பா.ஜ.,வுக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறோம்.

நல்லாட்சி
செந்தில் பாலாஜியை வெளியில் கொண்டு வருவதற்காக இன்னும் ஒரு வாரத்தில் செந்தில் பாலாஜியின் தம்பியை சரண்டர் செய்வார்கள். தேர்தல் வருவதால் அவரை வைத்து சில வேலைகளை பார்க்கலாம் என அவர்கள் திட்டமிடுகிறார்கள். வடசென்னை தொகுதியில் பிரதமர் மோடியின் நல்லாட்சி வர வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.வாசகர் கருத்து (33)

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  கவர்னர் தமிழக அரசு தயாரித்த உரையை படிக்க மாட்டேன் என்று கூறி இருக்கமாட்டார். அதில் நிறைய தவறுகள் இருந்திருக்கிறது. அதை திருத்தி எழுதிக்கொண்டு வாருங்கள், பிறகு படிக்கிறேன் என்று கூறி அமர்ந்தார். வடிவேலு பட காமெடி போல, ரோடு போட்டோம் என்பதை ஆடு போட்டோம் என்றும், இவ்வளவு கோடிகள் என்பதை இவ்வளவு கேடிகள் என்றும், கிளாம்பாக்கம் பஸ் வளாகம் வந்தாச்சு, என்பதை கிளாம்பாக்கம் பஸ் வரைக்கும் வாடா மச்சி, என்று ஒரே தவறுகள் அந்த உரையில். அதை எல்லாம் சீக்கிரம் திருத்தி எழுதி கொண்டே இன்றே வாருங்கள், நான் இன்றே படித்துவிடுகிறேன் என்று கூறினார். மேலும் அடுத்தவாரம் நான் டெல்லி மூன்று நாள் சென்றுவிடுவேன், அப்புறம் மற்ற மாவட்டங்களுக்கு செல்லவேண்டி இருக்கு. ஆகையால் இப்பவே திருத்தி எழுதிக்கொண்டு வாருங்கள், படிக்கிறேன், என்றுதான் கவர்னர் கூறினார். இதை கேட்டு முதல்வர் அருகில் இருந்த பல அல்லக்கைகள், என்னா தலைவரே, தப்பு பூரா உங்ககிட்ட வெச்சுகிட்டு, கவர்னர் மேல குத்தம் சொல்றீங்களா என்று தலைவருக்கு மேலும் குடைச்சல் கொடுத்தனர்.

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  இது திட்டமிட்ட அவமதிப்பு, தி மு க கூட்டணியில் எல்லாம் சரியாக போய்க்கொண்டு இருப்பதய் கண்டு மனம் பொறுக்காமல் ஏதாவது செய்து குழப்பத்தை ஏற்படுத்த கவர்னர் செய்த பிளான் சபையை அவமானப்படுத்த நினைத்து தானே தேடிக்கொண்ட அவமானம்.

  • Bala - chennai,இந்தியா

   விடியல் கொத்தடிமைகளுக்குத்தான் வெட்கம் மானம் சூடு சொரணை இல்லை? ஆளுநருக்கு இவையெல்லாம் இருப்பதால்தான் விடியலின் பொய் பித்தலாட்ட உருட்டுகளை ஆளுநர் படிக்கவில்லை. Bravo Governor. We salute your brave action in TN assembly. We Tamil people are proud of you. Continue your good work sir. Thank you

 • Bahurudeen Ali Ahamed - aranthangi,இந்தியா

  ஆளுநர் மட்டுமென்ன, நிறைய நேரங்களில் அவர் ஆளுநர் போல் நடந்துகொள்வதில்லை, பிஜேபியின் கொள்கை பரப்பு செயலர் மாதிரிதான் நடந்துகொள்கிறார். அதிகம் அரசியல்தான் பேசுகிறார்

  • Bala - chennai,இந்தியா

   சபாநாயகர் மட்டும் என்ன? நடுநிலையா? அவர் திமுகவின் கொத்தடிமை போலத்தான் நடந்துகொள்வதாக மக்கள் நினைக்கிறார்கள்

 • Francis - Madurai,இந்தியா

  தமிழக பாஜகவின் செயல் தலைவர் ரவி யின் செயல்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விளக்கம்...

 • Velan Iyengaar - Sydney,ஆஸ்திரேலியா

  ஒவ்வொரு வார்த்தையிலும் கெவுனர் தவறாக நடந்துகொண்டார் என்று ஒரு முறை அல்ல.. பல முறை உள்ளத்தில் உள்ளதை அப்படியே கொட்டிவிட்டு பல்பு வாங்கியது குறித்து ஒரு வார்த்தை கூட எழுதவில்லை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதத்தில் ஆட்டுக்குட்டி கன்டென்ட் கொடுத்துக்கொண்டே இருக்கு

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்