Load Image
Advertisement

மஹா., முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.,வில் இணைந்தார்

Maharashtra former Chief Minister Ashok Chavan joins BJP   மஹா., முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.,வில் இணைந்தார்
ADVERTISEMENT
மும்பை: காங்கிரசில் இருந்து விலகிய மஹாராஷ்டிரா முன்னாள் முதல்வர் அசோக் சவான் பா.ஜ.,வில் இணைந்தார்.

மஹாராஷ்டிராவின் மூத்த காங்கிரஸ் தலைவர்களில் ஒருவராக இருந்தவர் அசோக் சவான். அம்மாநில முன்னாள் முதல்வர் சங்கர் ராவ் சவானின் மகனான இவர், அம்மாநில அமைச்சராகவும், இரண்டு முறை முதல்வராகவும் பதவி வகித்து உள்ளார். தற்போது எம்.எல்.ஏ., ஆக உள்ள அசோக் சவான் காங்கிரசில் இருந்து நேற்று விலகினார்.

இன்று அவர், அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் முன்னிலையில் பா.ஜ.,வில் இணைந்தார். அவருடன் காங்கிரஸ் முன்னாள் எம்எல்சி அமர் ராஜூர்கரும் பா.ஜ.,வில் இணைந்தார்.

தேர்தல் நெருங்கும் நேரத்தில் அசோக் சவான் காங்கிரசில் இருந்து விலகி பா.ஜ.,வில் இணைந்துள்ளது காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்.


வாசகர் கருத்து (10)

  • அப்புசாமி -

    பழம்பெருச்சாளி புதுவளைக்கு குடிபோயிட்டு.

  • Godfather_Senior - Mumbai,இந்தியா

    காங்கிரசை காங்கிரஸ்காரர்களே அழித்தது வருகின்றனர் என்பதே உண்மை

  • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

    மும்பை அரசியல் கிரிக்கட்டு விளையாட்டில் அசோக் சவான்தான் விக்கட்டு கீப்பர் அவரே சேம் சைடு விக்கெட்டை பிடிக்காமல் பாஜாவிற்கு ரன் கொடுத்துவிட்டு காங்கிரசு கட்சியை அவுட் ஆக்கிவிட்டார்

  • K.Ramakrishnan - chennai,இந்தியா

    கலிங்கத்துப் போர் தந்த பாடம், அசோக சக்கரவர்த்தியை புனிதர் ஆக்கியது. கலிகால அசோக் சவானை பா.ஜனதாவின் 'வாஷிங் மிஷின்' புனிதர் ஆக்கி விட்டது. வாழ்க... வாஷிங் மிஷின்கள்... வாஷிங் மிஷினுக்கு ஒரு வேண்டுகோள்... எங்கள் தமிழ்நாட்டு கழகத்தினர் மீது மாறி மாறி கறைகள் பூசப்படுகின்றன. அவர்களையும் புனிதர் ஆக்குங்களேன்...

    • kumar - Erode,இந்தியா

      அது முடியாதுங்க.. வாஷிங்மெஷின் கேட்டு போயிடும். அப்பறம் அத யாரும் சரி செய்ய முடியாது. கிட்டத்தட்ட அறுபது வருஷ கறை எப்படியிருந்தாலும், தீமுக குடும்பமும் அமைச்சர்களும், மா.செக்களும், வ.செ க்களும் அப்போதும் புனிதர்கள் என்று தானே கட்சியும், 200 ரூபாய் கொத்தடிமைகளும் உருட்டுகின்றன

  • பாமரன் -

    வாஷிங் மிஷின்ல போயிட்டு வந்தாச்சுல்ல... இனிமேல் நல்லவர் வல்லவர் ப்ளா ப்ளாதான்...🤪 ஆனாலும் இந்த அணிலை வாஷிங் மிஷின்ல போட ஒன்னியும் பண்ண முடியாமல் ம்மேம்மேன்னு ஆடு ஒன்னு பின்னாடி பகோடா பாய்ஸ் போறதுதான் கஷ்டமா இருக்கு ஸாரே...😩

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement