Load Image
Advertisement

யார் உண்மையான தேசியவாத காங்கிரஸ்?: தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து சரத் பவார் மனு

 Who is the real Nationalist Congress?: Sharad Pawars plea against Election Commissions decision   யார் உண்மையான தேசியவாத காங்கிரஸ்?: தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து சரத் பவார் மனு
ADVERTISEMENT

புதுடில்லி: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அஜித் பவார் தரப்பு பயன்படுத்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் மனு தாக்கல் செய்துள்ளார்.

மஹாராஷ்டிராவில், முக்கிய கட்சியான சிவசேனா கட்சியில் திடீரென ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி அணி உருவானது. இந்த அணி பா.ஜ.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்தது. இதையடுத்து உத்தவ் தலைமையிலான சிவசேனாவுக்கும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி என இரண்டாக உடைந்தது.

இது தொடர்பான வழக்கில் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியே உண்மையான சிவசேனா என அறிவித்தது. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்., கட்சிக்கு பெரும்பான்மை உறுப்பினர்கள் இருக்கின்றனர்.

சரத் பவார் தரப்புக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக அஜித் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 6ம் தேதி அங்கீகரித்தது. அக்கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான 'கடிகாரம்' அஜித் பவார் அணிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சரத் பவார் அணிக்கு 'தேசியவாத காங்கிரஸ் - சரத் சந்திர பவார்' என்றும் புதிய பெயர் சூட்டப்பட்டு உள்ளது. இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் மற்றும் பெயரை அஜித் பவார் தரப்பு பயன்படுத்த தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சரத்பவார் மனு தாக்கல் செய்துள்ளார்.

தங்களது தரப்பை கலந்தாலோசிக்காமல் எவ்வித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க
கூடாது என உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே அஜித் பவார் தரப்பு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வாசகர் கருத்து (2)

  • பேசும் தமிழன் -

    நாட்டு மக்களை முட்டாள்கள் என்று நினைத்து விட்டார்கள் போல.... கான் கிராஸ் கட்சிக்கு எதிராக புது கட்சியை தொடங்கி விட்டு..... இப்போது பதவிக்காக அதே கட்சியுடன் கூட்டணி சேர்ந்து கூத்து அடித்து கொண்டு உள்ளார்.... இவரை மக்கள் தேர்தலில் விரட்டி அடிக்க வேண்டும் !!!

  • A1Suresh - Delhi,இந்தியா

    இவரை என்னவென்று சொல்வது மக்களே

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்