Load Image
Advertisement

விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பஞ்சாப் அரசு: ஹரியானா அரசு பகீர் குற்றச்சாட்டு

Punjab Govt behind Farmers Protest: Haryana Govt Blames Bagheer  விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் பஞ்சாப் அரசு: ஹரியானா அரசு பகீர் குற்றச்சாட்டு
ADVERTISEMENT
சண்டிகர்: ‛‛ விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாக சந்தேகம் உள்ளது '' என ஹரியானா கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் சந்தேகம் தெரிவித்துள்ளார். பஞ்சாப் அரசு தூண்டி விடுவதாகவும் கூறியுள்ளார்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டில்லி முற்றுகை போராட்டத்திற்கு பஞ்சாப், ஹரியானா மாநில விவசாயிகள் பேரணியாக செல்கின்றனர். இதனால், டில்லி எல்லையில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஹரியானா மாநில கல்வித்துறை அமைச்சர் கன்வர் பால் கூறியதாவது: விவசாயிகளுக்காக பா.ஜ., அரசு செய்த பணிகளை, அதற்கு முன்னர் வேறு எந்த அரசும் செய்தது கிடையாது. நாங்கள் விவசாயிகளுக்கு ஆரவாக தான் உள்ளோம்.

இந்த போராட்டத்தின் பின்னணியில் அரசியல் உள்ளதாக சந்தேகம் உள்ளது. பொருளாதார ரீதியாக விவசாயிகள் பலம் பெற வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அனைத்து பிரச்னைகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படும். விவசாயிகள் திருப்தி உடன் தான் உள்ளனர். ஆனால், போராட்டத்தில் ஈடுபடுபவர்களே அனைத்திற்கும் காரணம்.

இந்த அரசை விட சிறந்த அரசு வேறு இல்லை என சாமானிய விவசாயிகள் புகழாரம் சூட்டுகின்றனர். பஞ்சாப் அரசு போராட்டத்தை தூண்டி விடுகிறது. வன்முறையை தூண்டுகின்றனர். போராட்டத்தின் பின்னணியில் அம்மாநில அரசு உள்ளதால், வன்முறை பெரிதாகிறது. இவ்வாறு அவர் கூறினார்.


வாசகர் கருத்து (18)

 • J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்

  பாகிஸ்தானை ஒருவழி ஆகியதைப்போல, இந்த கலவரத்தை அப்படியே பஞ்சாபுக்கு திருப்பிவிட்டால் அவர்கள் நிலை என்ன?

 • Balaji - Chennai,இந்தியா

  என்ன காரணத்திற்க்காக மத்திய அரசை எதிர்த்து போராடுகிறார்கள்? பிற மாநில விவசாயிகளுக்கு இல்லாத பிரச்சினை இவர்களுக்கு என்றால் அப்போது அந்த மாநில (பஞ்ஜாப்) அரசு தானே காரணம்?

 • sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா

  முதலில் பஞ்சாப் விவசாயிகளை ள் கமிசன் ஏஜெண்ட்ட்டுகள் கைப்பாவையாக இருப்பதை ஒழிக்க வேண்டும் அந்த இடைத்தரகர் தங்களது வாழ்கைக்காக பஞ்சாப் விவசாயிகளை பலியிடுகின்றனர் பாரதத்தில் எந்த மாநில விவசாயிகளும் இந்த இடைத்தரகர்களை ஆதரவு கொடுப்பதில்லை பன்ஜாப்பிலும் இந்த நிலைமைமார அரசாங்கமே விவசாயிகளை நேராக சந்தித்து இடைத்தரகர் கமிஷனை விவசாயிகளிடம் நேராகவே கொடுக்க ஏற்பாடு செய்தால் இடைத்தரகர்கள் அழிந்துவிடுவார்கள் விவசாயிகள் வாழ்க்கைத்தரம் உயரும் போராட்டமே இருக்காது

 • Godfather_Senior - Mumbai,இந்தியா

  உண்மை அதுவே இப்போது இதில் காங்கிரசும் கைகோர்த்துக்கொண்டுள்ளது . அரசியல் விபரீதத்திற்கு காங்கிரசும் ஆம் ஆத்மீ கட்சியும் ரகசிய கூட்டில் உள்ளது உள்ளங்கை நெல்லிக்கனி போலவே தெரிகிறது . விநாச காலே விபரீத புத்தி என்பது வழக்குச்சொல் . இது ஆம் ஆத்மி கட்சிக்கும் காங்கிரசுக்கும் அழிவு காலம் நெருங்கிவிட்டதையே காட்டுகிறது .

 • K.Ramakrishnan - chennai,இந்தியா

  உங்களை நீங்களே மெச்சிக்கொண்டால்எப்படி? ஒரு அரசு சிறந்த அரசு என்று மக்கள் தான் கூற வேண்டும். எதற்கெடுத்தாலும் மற்றவர்களை குறை கூறினால் நீங்கள் கையாளாகாதவர்கள் என்றே அர்த்தம். நேரு மறைந்து அறுபது ஆண்டுகள் ஆன பிறகும் அவரை பழி சுமத்தியே பத்தாண்டுகளை கடத்தி விட்டனர். இறந்தவர்களை பழி சுமத்தக்கூடாது என்ற பொதுவான நியதியையே மீறி விட்டார்களே...

  • visu - tamilnadu,இந்தியா

   நேரு செய்த தவறு ஆகஷை சின் சீனாவிடம் மாட்டி கொண்டுள்ளது அப்புறம் இன்னைக்கு சீன பற்றி பேசினால் அதை பற்றி பேசித்தான் ஆகா வேண்டும்

  • visu - tamilnadu,இந்தியா

   அரசு நல்லது செய்கிறது என்பதால் தான் மக்கள் தனி மஜுரிட்டி உடேன தொடர்ந்து வாய்ப்பளிக்கிறார்கள் அப்புறம் நன்றாக செயல்படுகிறது என்று சான்று அது போதாதா எதிர் கட்சி எப்பவும் குறைதான் சொல்லும்

  • RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ

   \\\\ இறந்தவர்களை பழி சுமத்தக்கூடாது என்ற பொதுவான நியதியையே மீறி விட்டார்களே.... //// திமுக அடிமையே ..... இறந்த எம் ஜி ஆர் மற்றும் ஜெ பற்றி அவதூறு பேசித்தானே ஆட்சிக்கு வந்தது உன் கட்சி ????

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்