Load Image
Advertisement

யுஏஇ சென்றார் பிரதமர் மோடி: அபுதாபியில் சுவாமி நாராயணன் கோவிலை திறக்க உள்ளார்

Relationship has grown manifold: PM Modi is proud of UAE  யுஏஇ சென்றார் பிரதமர் மோடி: அபுதாபியில் சுவாமி நாராயணன் கோவிலை திறக்க உள்ளார்
ADVERTISEMENT
புதுடில்லி: பிரதமர் மோடி, இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமீரேட்ஸ் (யுஏஇ) சென்றார். முன்னதாக, மோடி வெளியிட்ட அறிக்கையில், ‛‛ இந்தியா, யுஏஇ., இடையிலான உறவு பல மடங்கு வளர்ந்துள்ளது'' என பெருமிதம் தெரிவித்துள்ளார்.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு இரண்டு நாள் அரசு முறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப்.,13) சென்றார். அபுதாபியில் கட்டப்பட்டுள்ள சுவாமி நாராயணன் கோவிலை நாளை அவர் திறந்து வைக்கிறார்.

இன்று மாலை சையீத் விளையாட்டு மைதானத்தில், ஐக்கிய அரபு எமிரேட்சில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற உள்ளதாக தெரிகிறது. 'அஹலான் மோடி' அதாவது 'வணக்கம் மோடி' என்ற தலைப்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்க, எமிரேட்சின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் 60,000க்கும் மேற்பட்டோர் பதிவு செய்திருந்தனர்.

பெருமிதம்இதனிடையே, யு.ஏ.இ., கிளம்பும் முன்னர் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:

பல்வேறு துறைகளில், யு.ஏ.இ.,உடனான இந்தியாவின் ஒத்துழைப்பு கடந்த 9 ஆண்டுகளில் பல மடங்கு வளர்ந்துள்ளது. அந்நாட்டு அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறேன். வர்த்தகம் மற்றும் முதலீடு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் இரு நாட்டு உறவும் இன்னும் வலுப்பெற்று வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் தெரிவித்துள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டிற்கு பிறகு யுஏஇ.,க்கு பிரதமர் செல்வது இது 7வது முறை. மேலும், கடந்த 8 மாதங்களில் 3வது முறையாக அங்கு சென்றார்.வாசகர் கருத்து (7)

 • M.Sudhakar - Alain,இந்தியா

  வரலாற்று ரீதியாக இந்தியாவும் கத்தாரும் நெருங்கிய மற்றும் நட்புடன் கூடிய உறவை பேணி வருகிறது.

 • A1Suresh - Delhi,இந்தியா

  அயோத்யாகாண்டத்திலிருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறேன். "தமேவம் குண ஸம்பன்னம் ராமம் ஸத்யபராக்ரமம். லோகபாலோபமம் நாதம் அகாமயத மேதினீ". இதன் பொருளாவது -" அனைத்து குணங்களையும், வீண்போகாத வீரத்தையும் உடைய ராமனை மணாளனாக வரிக்க பூமிதேவியே விரும்பினாள் என்பதாகும். அது போல எதிரிநாடான பாகிஸ்தான் மக்களும் கூட இவரை தமக்கு பிரதமராக்க விரும்புகின்றனர்-ஏங்கி வெதும்புகின்றனர். பல யூடியூப் சேனல்களில் பார்க்க முடிகிறது. மாற்று மதத்தினரும் விரும்பி ஏற்கும் ஒரே தலைவர் எங்கள் மோடிஜி. வாழ்க எம்மான்

 • A1Suresh - Delhi,இந்தியா

  ஏழைப்பங்காளனாக கர்மவீரர், படிக்காதமேதையாக காமராஜர். எளிமையில் ஒரு கக்கன். புரட்சிக்காக- ஈகைக்காக-கருணைக்காக ஒரு எம்ஜியார். மேடைப்பேச்சில்- தொலைநோக்கு திட்டங்களில் ஒரு வாஜ்பாய். தேசத்தினை-ஆன்மீகத்தினை நேசிப்பதில் ஒரு பசும்பொன் தேவர் திருமகனார். வீரத்தில் ஒரு சுபாஷ் சந்திரபோஸ், நாட்டைக் கட்டிக் காப்பதில் ஒரு வல்லபாய் படேல். தியாகத்தில்-புலனடக்கத்தில் ஒரு விவேகானந்தர், இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு வாழ்க மோடிஜி.

 • A1Suresh - Delhi,இந்தியா

  ஒருவருடைய ஜாதகத்தில் சூரியன் வலிமையாகவும், சந்திரன், குரு, லக்னகாரன் போன்றோர் வலிமையாகவும் இருந்தாலொழிய இப்படியொரு தீவிர பக்தர்கள், பதவி, அதிகாரம், புகழ், வெற்றி கிட்டாது. பல்வேறு ராஜயோகங்களும், குறிப்பாக கஜகேசரி யோகம் பொன்றன நிரம்ப இருத்தல் கூடும். ஐந்தீற்குரியவனும் நாலுக்குரியவனும் பலமாக கூடி அமர்ந்திருக்க வேண்டும். பலரை நல்வழிப்படுத்த இப்படி ஒரு தலைவரா ஆச்சரியமாக இருக்கிறது

 • A1Suresh - Delhi,இந்தியா

  மாபெரும் சபைகளில் நீ நடந்தால் உனக்கு மாலைகள் விழவேண்டும். ஒரு மார்க்கு குறையாத மன்னவன் இவன் என்று போற்றிப் புகழவேண்டும். இது எங்கள் மோடிஜிக்கு மட்டுமே சாத்தியம். உலகில் ஆஸ்திரேலியா, அமேரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், வளைகுடா நாடுகள் என்று எங்கு சென்றாலும் பூமழை தூவியும், மோடி -மோடி-மோடி என்று கொண்டாடும் மக்கள் கூட்டம் . எந்த உலக தலைவருக்கும் இதுவரை கண்டதில்லை. ஐயா நின் திருப்பெயரை சொல்லவே புண்ணியம் செய்திருக்க வேண்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்