Load Image
Advertisement

டில்லியில் பதட்டம்: முன்னேறும் விவசாயிகள் பேரணி: கண்ணீர் புகை வீச்சு


புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , முற்றுகை போராட்டத்துக்காக ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி புறப்பட்டனர். 500 க்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மற்றும் லாரிகளில் வந்த வண்ணம் உள்ளனர். அரியானா- பஞ்சாப் எல்லையான ஷம்பு என்ற பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆனால் விவசாயிகள் தடுப்புகளை தள்ளி முன்னேறி சென்றனர். இதனால் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர்.


Latest Tamil News

உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப்பில் உள்ள விவசாய சங்கங்கள் வேளாண் பொருட்களுக்கு எம்.எஸ்.பி., எனப்படும் குறைந்தபட்ச ஆதார விலைக்கு உத்தரவாதம் அளிக்கும் சட்டம், ஓய்வூதியம், நில அபகரிப்புக்கு உரிய நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைநகர் டில்லியை நோக்கி பேரணியாக அணிவகுத்து செல்ல இன்று அழைப்பு விடுத்திருந்தது.

Latest Tamil News
இந்நிலையில், மத்திய அரசை கண்டித்து, முற்றுகை போராட்டத்துக்காக மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டில்லி நோக்கி புறப்பட்டனர். இதனால் டில்லியில் உள்ள முக்கிய எல்லை பகுதிகளில் கூடுதல் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய பாதைகள் மாற்றி விடப்பட்டதால் , வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Latest Tamil News
டில்லியில் வரும் மார்ச் 12ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் ஏதும் அசம்பாவிதத்தில் ஈடுபடாமல் இருக்க ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். துணை ராணுவ படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil News
Tamil Newsவிவசாயிகளின் பிரதான கோரிக்கைகள் என்னென்ன


* விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்தல்

* குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்குதல்

* 2013 நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது, விவசாயிகளிடமிருந்து எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் பெறவும், கலெக்டர் விகிதத்தை விட நான்கு மடங்கு இழப்பீடு வழங்குதல்

* 2021 லக்கிம்பூர் கெரி கொலைகளின் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்குதல்

* உலக வர்த்தக அமைப்பிலிருந்தும் (WTO), பிற நாடுகளுடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் இருந்தும் அரசு விலகுதல்

* விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம்

* மின்சாரத் திருத்த மசோதா 2020 ரத்து செய்தல்

* மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்பின கீழ் ஆண்டுக்கு 200 (100 நாட்களுக்குப் பதிலாக) நாட்கள் வேலை வாய்ப்பு, தினசரி ஊதியம் ரூ.700 வழங்குதல்


சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு வேண்டுகோள்சுப்ரீம் கோர்ட் வழக்கறிஞர்களின் சங்க தலைவர் ஆதிஷ் அகர்வாலா சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "இடையூறு ஏற்படுத்தும் வகையிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் வகையிலும் விவசாயிகள் நடத்த இருக்கும் பேரணிக்கு எதிராக தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்வாசகர் கருத்து (70 + 19)

 • தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா

  விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றினால், அரிசி, கோதுமை, காய்கறிகள் விலைகள் ஐந்து மடங்கு உயரும். இதன் காரணமாக எண்ணெய், நெய், சீஸ், பால், பருப்பு என்று அனைத்தின் விலை யம் உயரும். ஹோட்டல் விலை தாறுமாறாக உயரும். கோடிக்கணக்கான மக்கள் எதையும் சாப்பிட முடியாமல் பட்டினியால் மடிவார்கள். அதனால் பொதுமக்களே விவசாயிகளை கட்டுப்படுத்த வேண்டும். நாடு திவாலாகி மக்கள் கஷ்டப்படவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் சீனாவுடன் சேர்ந்து சதிவேலையில் ஈடுபட்டு, விவசாயிகளை தூண்டிவிடுகிறார்கள்.

 • Senthil kumar - coimbatore,இந்தியா

  மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்பின கீழ் (100 நாள் வேலைவாய்ப்பு) ஏற்கனவே விவசாயத்திற்கு ஆள் பற்றாக்குறை நிலவிவருகிறது இதில் 200 நாள் வேலைவாய்ப்பு என்றால் விவசாயமே செய்யமுடியாத நிலைதான் ஏற்படும்.

 • Ram - ottawa,கனடா

  துரத்துங்கள்

 • Priyan Vadanad - Madurai,இந்தியா

  இப்படி தெருவில் இறங்கி போராடித்தான் பாஜகவை திரும்பவும் ஆட்சியில் அமர்த்தினர் என்பதை மறக்கக்கூடாது. இவர்களது போராட்டம் பாஜகவுக்கு லாபமே தவிர வேறொன்றுமில்லை. ஒருவேளை பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர முன்னெடுக்கும் முயற்சிதான் இது என்கிற எண்ணமும் வருகிறது.

 • Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ

  இவர்கள் விவசாயிகளே அல்ல. பண முதலைகள். அரசாங்கத்திடமிருந்து இலவசமாக மின்சாரம், டீசல், உரம் என்று வாங்கி, உண்மை விவசாயிகளை கடனாளிகளாக மாற்றி, வறுமையில் தள்ளி, விலைகளை இவர்களே நிர்ணயித்து, கொழுத்த லாபம் சம்பாதித்து, எல்லா பணத்தையும் எடுத்து, அரசியல்வாதிகளை விலைக்கு வாங்கி, போதைப்பொருள் வியாபாரத்தில் முதலீடு செய்து, வெளிநாடுகளில் பணத்தை கொண்டுபோய் குமித்து, தங்கள் ஆட்களுக்கு கனடா, அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் குடியுரிமை வாங்கிக்கொடுத்து, அங்கே இடம் மாறி, அங்கேயிருந்துகொண்டு, இங்கே மேலும் நிலங்களை வாங்கி, இப்போது காலிஸ்தான் வேண்டும் என்று கிளம்பியிருக்கிறார்கள். இவர்களை தொட விடமுடியாதபடி மேலை நாடுகள் பாதுகாக்கின்றன. மோடி அரசை நிலைகுலைய செய்ய இவர்கள் இந்த மாதிரி திட்டம் போட்டு, நமது எதிர்கட்சிகளையெல்லாம் தங்களுக்கு ஆதரவாக மாற்றி, போராட்டம் என்று போலியாக செய்து, பேரம் பேச வந்திருக்கிறார்கள். நாட்டில் இருக்கும் மீதி விவசாயிகள் இவர்களைப்போல இத்தனை பணபலத்தோடு, இடதுசாரி பக்கபலத்தோடு செயல்படுவதில்லை. இவர்கள் தேசத்தை சீர்குலைக்கும் முதலைகள். இவர்களை களையெடுக்காமல் மோடி அரசு ஏன் தயங்குகிறது என்று தெரியவில்லை. இதை நடக்கவே விட்டிருக்கக்கூடாது. இதை யார் ஏற்பாடு செய்கிறார்கள், பணம் எங்கெல்லாம் போகிறது, எங்கிருந்து வருகிறது, இவர்களின் அடியாட்கள் யார் என்று உளவுத்துறை வைத்து கன்டுபிடித்து உள்ளேதள்ளி முட்டிகளை பெயர்தெத்தெடுத்திருக்க வேண்டும். 2019 ல் ஏற்கனவே இந்த மாதிரி ஒரு வருடத்துக்கு இவர்களால் எப்படி விலை உயர்ந்த டிராக்டர்கள், லாரிகள் கொண்டு வர முடிந்தது, யார் வசதியான ஏசி டென்டுகள், மசாஜ் வசதிகளுக்கு பணம் கொடுத்தது என்று விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். ஒன்றுமே செய்யாமல் பெப்பெப்பே என்று இருந்து விட்டார்கள். அதற்குப்பிறகும் இது மீண்டும் நடக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று எந்த முயற்சியும் எடுத்த மாதிரி தெரியவில்லை.

விவசாய சங்கங்கள் பேரணி: டில்லியில் பலத்த பாதுகாப்பு (8)

 • A1Suresh - Delhi,இந்தியா

  அர்விந்த் கேஜ்ரிவால் தன்னை கைதாகாமல் காத்துக் கொள்ள செய்யும் நரித்தந்திரம்

 • A1Suresh - Delhi,இந்தியா

  மிகச் சரியாக தேர்தல் நடக்கும் நேரத்தில் கலவரம், கிளர்ச்சி . வாழ்க எதிர்க்கட்சி ஜனநாயகம். வாழ்க தேசபக்தி . வாழ்க அந்நிய காசுக்கு கூவும் கூலிப்படை

 • Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்

  பணம் வரும் பாதையை கண்டுபிடித்து கொடுத்தவர்களை நொங்கெடுத்தால் எல்லாம் சரியாகிவிடும்.

 • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

  போலி விவசாயிகளை உள்ளே தள்ளுங்கள். எல்லாம் சரியாகிவிடும்

 • Agni Kunju - Singapore,சிங்கப்பூர்

  காங்கிரஸ் ஆண்டு கெடுத்தது போதாதென்று.. இப்போது தூண்டிக்கெடுக்கிறது.

 • SUBBU,MADURAI -

  These guys are called farmers in India. Who is funding these extortionists? Where did they get these from? Either the govts are complicit or they are a failure. Why only farmers in these three states are allowed such things?

 • visu - tamilnadu,இந்தியா

  தேர்தல் வந்து விட்டால் இது ஒரு பிரச்சினை எதிர் கட்சகிகள் இப்படி தூண்டி விடும் இதெற்குதான் ஒரே நாடு ஒரே தேர்தல் தேவை என்பது

 • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

  போலி விவசாயிகளின் போராட்டம் - பாகம் மூன்று.

டில்லியில் மார்ச் 12 வரை 144 தடை உத்தரவு: பெரிய அளவில் கூட்டங்கள் கூட தடை (9)

 • Mani . V - Singapore,சிங்கப்பூர்

  அது ஏன் மார்ச் 12 வரை? ஒரு ஐந்து, ஆறு வருடத்துக்கு தடையுன்னு போடமுல்ல?

 • g.s,rajan - chennai ,இந்தியா

  அரசாங்கம் அடக்குமுறையைக் கையாள்வது அதிகார துஷ்ப்ரயோகத்தையே காட்டுகிறது .....

 • Rajasekar Jayaraman -

  சென்னை கைவிட்டு போனதோ திருட்டு திராவிஷத்துக்கு பயத்தில் 144 தடை உத்தரவு.

 • g.s,rajan - chennai ,இந்தியா

  விவசாயிகளின் போராட்டத்தை சந்திக்கத் துணிவில்லை .....

 • GMM - KA,இந்தியா

  மத்திய அரசுக்கு எதிரான போராட்டம் அல்ல. விவசாய மசோதா திரும்ப பெற்று விட்டது. அந்நிய கூலிப்படை தேசத்திற்கு எதிரான எந்த போராட்டத்திலும் கலந்து கொள்ளும். ஏராள அமைப்பு, சங்கம், தொண்டு நிறுவனங்கள்.... முதலில் அந்நிய நிதி ஒரு ரூபாய் பெற்றாலும் தணிக்கை, கண்காணிப்பு தேவை. மாத தேவைக்கு அதிகமாக பணத்தை எடுக்க அனுமதிக்கும் சட்டம் தேவை. டெல்லியில் அதிக போராட்டம் துவங்க வகை செய்வது கலால் ஊழல் கெஜ்ரிவால்? அரசுக்கு எதிரான நீதிமன்ற வழக்குகள் தேச பொருளாதார பாதுகாப்பு முதன்மை பெற வேண்டும்.

 • A1Suresh - Delhi,இந்தியா

  விவசாயிகளின் போர்வையில் இம்முறை பாகிஸ்தானிலிருந்து தீவிரவாதிகள் ஊடுருவ முயல்வதாக செய்தி கிட்டியுள்ளது .

 • A1Suresh - Delhi,இந்தியா

  சீனாவின் மிகப்பெரிய சதி . அதற்கு துணைபோகும் மூடர் கூட்டம்

 • Selvakumar Krishna - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்

  no guts to face the farmers nor to fulfull their demands.

  • Mohan - COIMBATORE,இந்தியா

   உன்னோட வேலைய மட்டும் பாரு ..உபதேசம் தேவை இல்ல ..

டில்லி எல்லைகளில் பலத்த பாதுகாப்பு விவசாயிகள் நுழைவதை தடுக்க அதிரடி (2)

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  விவசாயிகளின் நண்பன் மோடி வாழ்க குறைந்த பட்ச ஆதரவு விலை விவசாயிகள் கேட்டதும் ஒப்புக்கொண்ட பிரதமர் வாழ்க இரண்டு ஆண்டுகளாக முந்தைய விவசாயிகளின் போராட்டத்தை கண்டு கொள்ளாத மோடி வாழ்க இப்போது தற்காலிக சிறைகளை விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யும் மோடி வாழ்க

 • Pandianpillai Pandi - chennai,இந்தியா

  பேரணி செல்ல தடை.. ஆனால் பாத யாத்திரை என்ற பெயரில் கும்மாளமிடும் தமிழ்நாட்டு பிஜேபிக்கு தடை விதித்தால் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி என்று பெயர் மாற்றி உள்ளே கூட்டத்தை கூட்டி மக்களுக்கு இடையூரு செய்வீர்கள். விவசாயிகள் மக்கள் சந்திப்பு என்று மாற்றி அங்கு கூட்டம் போட காவல் துறை அனுமதிக்குமா?

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement