Load Image
Advertisement

கவர்னர் உரை புறக்கணிப்பு: வீடியோவில் சிறப்பு அலசல்

Governor text boycott; Special analysis on video  கவர்னர் உரை புறக்கணிப்பு: வீடியோவில் சிறப்பு அலசல்
ADVERTISEMENT

சென்னை: தினமலர் இணையதளத்தில் நாள்தோறும் செய்தியும், செய்திக்கு அப்பாற்பட்டும் பல்வேறு விஷயங்கள் குறித்து வீடியோ வடிவில் வழங்கப்பட்டு வருகிறது. வாசகர்களின் ஆதரவும் நாளுக்கு நாள் பெருகி வருகிறது.

தினமலர் வீடியோ பார்ப்பவர்களின் எண்ணிக்கை லட்சத்தை கடந்து உச்சத்தை தொடுகிறது. வாசகர்களை கவரும் விதமாக சிறப்பு அலசல் நிகழ்ச்சிகளும் தொகுத்து நமது வீடியோ குழுவினரால் வழங்கப்படுகிறது. முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.


இன்றைய நிகழ்ச்சியில்
கவர்னர் உரையை கவர்னரே வாசிக்காமல் புறக்கணித்த சம்பவம், தமிழக சட்டசபை வரலாற்றில் முதல் முறையாக நேற்று நடந்துள்ளது. கவர்னர் பேச்சும், சபாநாயகர் பேச்சும் சபை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட நிகழ்வும் இதுவே முதல் தடவை.

இந்நிலையில், '' கவர்னர் உரை புறக்கணிப்பு தகர்க்கப்படும் மரபுகளா? தவிர்க்க முடியாத மாற்றமா?'' என்பது குறித்த தினமலர் வீடியோ இணையதளத்தில் விவாதம் நடந்தது. இது குறித்து தினமலர் வீடியோ தொகுப்பு.


காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்
https://www.youtube.com/watch?v=R3wl_Q7vGz8வாசகர் கருத்து (8)

 • DVRR - Kolkata,இந்தியா

  கீழ்கண்ட குறளை கவர்னர் தம் உரையுடன் சேர்த்ததினால் இந்த ஐந்துமே இந்த திருட்டு திராவிடம் மடியல் அரசு ஆட்சியில் இல்லையென்று உடல் எரிந்து மனம் எரிந்து கவர்னரிடம் இப்படி நடந்து கொண்டது என்று தெள்ளத்தெளிவாகத்தெரிகின்றது. பால்: பொருட்பால் அதிகாரம்/Chapter: நாடு / The Land குறள் 738: பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம் அணியென்ப நாட்டிவ் வைந்து. சிவயோகி சிவக்குமார் விளக்கம்: நோய் இல்லாது இருத்தல், நிறைந்த செல்வம், நல்விளைச்சலுடன் வளரும் இன்பம், பாதுகாப்புத் தன்மை இவை ஐந்தும் நாட்டின் அணிகலன்கள். மு.வரதராசன் விளக்கம்: நோயில்லாதிருத்தல், செல்வம், விளை பொருள், வளம், இன்பவாழ்வு, நல்ல காவல் இந்த ஐந்தும் நாட்டிற்கு அழகு என்று கூறுவர்.

 • Hari Bojan - Ootacamund (Ooty),இந்தியா

  உரையை வாசித்துவிட்டு பின் குறைகளை கேட்டு அறிந்துகொள்ளலாம் என்பது எமது கருத்து

 • திகழ்ஓவியன் - AJAX ONTARIO,கனடா

  தனது பதவியின் பெருமையையும் மாண்பையும் அறியாதவர்களே அடுத்தவர்களை எப்போதும் குறை சொல்லி கொண்டிருப்பார்கள்.

  • S.F. Nadar - chennai ,இந்தியா

   உண்மை

 • K.n. Dhasarathan - chennai,இந்தியா

  தவிர்க்க முடியாத மாற்றம், மரபுகள் தகர்க்கப்படுத்தல் என்று ஏதும் இல்லை, தான் தோன்றித்தனம், தான் ஒரு பட்டத்து அரசர் போலவும் மற்றவர்கள் அனைவரும் சாதாரண குடிமக்கள், மற்றும் ஏவலாட்கள் போலவும் நினைக்கும் நினைப்பு. ஒன்று நினைவு வைத்துக்கொள்ள வேண்டியது யாதெனில். சபாநாயகர் தான், சட்ட சபை தலைவர், அவர் எடுக்கும் முடிவுகள் கவர்னர் உள்பட அனைவரும் கட்டுப்பட வேண்டும். இல்லையெனில் சட்ட சபைக்கே வரக்கூடாது.

  • ராம.ராசு - கரூர்,இந்தியா

   Union Government அமைச்சரவை தயாரித்துக் கொடுத்த உரையைத்தான் குடியரசுத் தலைவர் படிக்கவேண்டும்.. அவருக்கு அந்த உரையில் முரண்பட்டக் கருத்து இருந்தாலும் கூட. ஆளுநரைப் போல நியமனம் செய்யாமல், மக்களால் மக்கள் பிரதிநிதிகளால் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். என்றாலும் நாடாளுமன்றத்தில் அமைச்சரவை தயார் செய்த உரையை மட்டுமே படிக்க வேண்டும். ஆனால் தமிழ் நாடு ஆளுநர் தனது விருப்படி இல்லை என்று சபையை புறக்கணித்துச் செல்வது எப்படி..

 • Rajah - Colombo - Thirumangalam,இலங்கை

  நான் பிஜேபி அரசை மிகவும் நேசிப்பவன். ஆனால் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை. தவறுகளை தவறு என்று சுட்டிக் காட்ட வேண்டும். அதுதான் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு உதவும். கவர்னரின் சில நடவடிக்கைகள் தமிழ் நாட்டின் பிஜேபியின் வளர்ச்சியில் ஒரு சறுக்கலை உருவாக்கும். வேறு மாநிலத்தவருக்கும் தமிழ் நாட்டவருக்கும் வேறுபாடு உண்டு என்பதை தமிழ் நாட்டு பிஜேபி அறிந்து அதன்படி செயல்பட வேண்டும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று நடந்து கொண்டால் கவிழ்வது நிச்சயம். பிஜேபியின் தேசிய இந்துத்துவா கொள்கைகைகள் சரியாகத்தான் இருக்கின்றன.ஆனால் தெற்கில் சில மாற்றங்கள் தேவைப்படுகின்றது. திராவிடக் கட்சிகள் அற்ற தமிழ்நாடு வேண்டுமானால் மாற்றங்கள் தேவை. இது என் தனிப்பட்ட கருத்து.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement