Load Image
Advertisement

ஒரு சீட்டுக்காக கையேந்தும் கட்சியல்ல: செயற்குழுவில் வாசன் ஆவேசம்

 Not a party for a ticket: Vasans passion in the executive committee  ஒரு சீட்டுக்காக கையேந்தும் கட்சியல்ல: செயற்குழுவில் வாசன் ஆவேசம்
ADVERTISEMENT
சென்னை: ''லோக்சபா தேர்தலில், ஒரு சீட்டுக்காக கையேந்தும் கட்சி த.மா.கா., இல்லை,'' என, அக்கட்சியின் தலைவர் வாசன் ஆவேசமாக பேசினார்.

த.மா.கா., செயற்குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள ஹோட்டலில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு தலைமை வகித்த வாசனுக்கு, தலைமை நிலைய செயலர் ஜி.ஆர்.வெங்கடேஷ் மலர் கொத்துவழங்கினார்.

பொதுச்செயலர் விடியல் சேகர், சக்திவடிவேல், என்.டி.எஸ்.சார்லஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டை முடிவு செய்யும் அதிகாரத்தை வாசனுக்கு வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பிரசவ வலிகூட்டத்தில் பேசிய மாநில, மாவட்ட நிர்வாகிகள், 'அதிக தொகுதிகளை தரும் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டும்.

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு, அ.தி.மு.க., அல்லது பா.ஜ., கூட்டணியில் இடம் பெற வேண்டும்' என்றுவலியுறுத்தினர்.

பின், வாசன் பேசியதாவது: அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க., - பா. ம.க., - த.மா.கா., இணைந்து செயல்பட்டால், தி.மு.க.,வை வீழ்த்த முடியும்.

கடந்த 10 ஆண்டுகளில் கூட்டணி என வந்தாலே, நமக்கு பிரசவ வலியாகத் தான் இருக்கிறது. கட்சியின் எதிர்காலம் கருதி முடிவு எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

பா.ஜ., - அ.தி.மு.க.,தலைவர்களிடம் எனக்கு நெருக்கம் உண்டு. அக்கட்சிகளின் இரண்டாம் கட்ட தலைவர்களும் எனக்கு பழக்கம். அவர்களுக்கும் என் மீது மிகுந்த அன்பு உண்டு.

மற்ற கட்சிகளை போல, ஆட்சியில் த.மா.கா.,வும் பங்கு பெற வேண்டும் என நினைக்கிறேன். ஒரு சீட்டுக்காக கையேந்தும் கட்சி த.மா.கா., இல்லை. இவ்வாறு வாசன் பேசினார்.

அவகாசம் உள்ளதுவாசன் அளித்த பேட்டி: கூட்டணி குறித்த முடிவை, வரும் நாட்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். ஆளுங்கட்சி கூட்டணி தவிர்த்து, மற்ற கட்சிகள் கூட்டணி நிலைப்பாட்டை இன்னும் உறுதி செய்யவில்லை.

தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக, இரண்டு அல்லது மூன்று வாரம் அவகாசம் உள்ளது. இருப்பினும், த.மா.கா.,வின் முடிவை, மூத்த தலைவர்களுடன்ஆலோசனை செய்த பின் அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.வாசகர் கருத்து (25)

 • Anantharaman Srinivasan - chennai,இந்தியா

  கபிஸ்தலத்தை சுற்றியிருக்கும் சொத்துக்களை காப்பாற்றுவதற்காகவே நடத்தப்படும் கட்சி..

 • K.Ramachandran - Chennai,இந்தியா

  பல சிறு காட்சிகள் இந்த முறை லோக் சபா தேர்தலில் போட்டி இல்லை என அறிவிக்கலாம் - காரணம் கூட்டணி ஒதுக்கும் இடம் ரொம்ப கம்மியாக இருக்கும்

 • jayvee - chennai,இந்தியா

  அதுக்கென்ன தாராளமா 40 சீட்டும் உங்களுக்குத்தான்.. ஆனா தனித்துதான் தோக்கணும்..

 • K.Ramakrishnan - chennai,இந்தியா

  உங்களுக்கு செல்வாக்கு இருந்தால்... நாற்பதிலும் நிற்கலாமே... எந்த ஒரு இடத்திலாவது தனித்து நின்று டெபாசிட் வாங்கிக் காட்ட முடியுமா? மயிலாடுதுறை அல்லது தஞ்சையில் நின்று உங்கள் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டியது தானே... ஒரு சீட்டுக்கு கெஞ்ச மாட்டோம் என்றால், ஒரு எம்.எல்ஏ. கூட இல்லாத கட்சியின் தலைவரான நீங்கள், அ.தி.மு.க தயவில் ராஜ்யசபா எம்.பி.ஆனது ஏன்? அந்த ஒற்றை சீட்டை தூக்கி எறிந்திருக்க வேண்டியது தானே... பா.ஜனதா நிர்ப்பந்தம் காரணமாகத் தானே அந்த சீட் கிடைத்ததை மறந்து விட்டீர்களா?

 • spr - chennai,இந்தியா

  கட்சித்தொண்டர்கள் என்று பார்த்தால் அதிமுக, திமுக கட்சிகளுக்கே 10 விழுகாடு இருந்தால் அதுவே மிகுதி, இதில் தா ம க - வுக்கு வாக்கு வங்கி என்றால்? உங்க அக்கம் பக்கம் வீட்டுக் காரங்க அல்லது தெருவில் எத்தனை பேர்கள் என்று தேடிப்பாருங்க விரல் விட்டே எண்ணிவிடலாம். கட்சிக்கு கூட்டம் நடத்தவே இடம் இல்லை. "பிட்சை எடுப்பவருக்கு வீரம் தேவையில்லை" உண்மையிலே நாட்டு நலன் கருதியவர் என்றால், தொகுதி இல்லை என்றாலும் தீமையை வீழ்த்த உதவ வேண்டும் வென்றால் ஏதாவது ஆணையத் தலைவர் பதவியாவது கிடைக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement