Load Image
Advertisement

பணச்சுளை கிடைத்தால் போட்டி; கருப்பு ஆடு களை எடுத்தால் ஈட்டி!

''தேர்தல் வரும் பின்னே... தலைவர்கள் வருவாங்க முன்னே...''
மித்ரா 'ராகம்' போட்டபடி வந்தாள்.
''சித்ராக்கா... திருப்பூர்ல, இப்பவே லோக்சபா தேர்தல் களைகட்டுன மாதிரி இருக்கு...''
''மித்து... எப்படிச் சொல்ற''
''அவிநாசில நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்துக்கு இ.பி.எஸ்., வந்திருந்தாரு...

''திருப்பூர் குடிநீர் திட்டத் துவக்க விழாவுக்கு மினிஸ்டர் உதயநிதி வந்தாப்புல... தி.மு.க., தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக்குன்னு கனிமொழி வந்துட்டு போனாங்க...
''பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பாதயாத்திரையை இங்கதான் முடிக்கப்போறாரு. அப்புறம், பிரதமர் மோடி பொதுக்கூட்டம்''
''மித்து... சரியாத்தாம்ப்பா சொல்ற...''

Latest Tamil News

மேடை அருகே கூட்டம்''சித்ராக்கா... சிக்கண்ணா காலேஜ்ல நடந்த உதயநிதி பங்ஷன்ல, பந்தல் பகுதியில டிஜிட்டல் திரை அமைச்சிருந்தாங்க...
''மினிஸ்டர் நேரு பேசறப்ப திரைகள் செயலிழந்திருச்சு... நிகழ்ச்சியைப் பார்க்க முடியாதவங்க, மேடையைச் சுத்தி நெருங்கீட்டாங்களாம்...

''இதனால மேடைக்கு முன்னாடி இருந்தவங்களால கூட நிகழ்ச்சியை நல்லா கவனிக்க முடியல...''
''மித்து... பல பங்ஷன்ல இப்படி ஆகறது சகஜம்தான்... இதைப் பெரிசா எடுத்துக்கக்கூடாது''
''பங்ஷன்ல கட்டியிருந்த குலை தள்ளிய வாழை மரங்களை வழக்கமா கூட்டத்துல கலந்துக்கறவங்கதானே அள்ளீட்டுப்போவாங்க... 'தினமலர்'ல கூட இந்தப் படத்தை நிறைய தடவை பார்த்திருப்பீங்கக்கா...

''இந்தத் தடவ துாய்மைப்பணியாளர்கள் மொதல்லயே இதையெல்லாம் வெட்டி, குப்பை அள்ளற வாகனத்துல போட்டுட்டாங்க...
''அதேமாதிரி வாட்டர் பாட்டிலையெல்லாம் தேடிப்பிடிச்சு தனியா மூட்டைல அள்ளிவச்சிட்டாங்க...''
''மித்து... பரவால்லையே''
''அக்கா... மேடை முன்னாடி பூக்களை அழகா அலங்கரிச்சு வச்சிருந்தாங்க...

''அதையெல்லாம் கூட்டத்துக்கு வந்த லேடீஸ் போட்டி போட்டு அள்ளீட்டாங்க...''
''பின்ன... பூவையர்னு சும்மாவா சொல்றாங்க மித்து...''
இருவரிடமும் புன்முறுவல்.

Latest Tamil News

கஷ்டம்தானே அனுபவம்''சித்ராக்கா... கனிமொழி தலைமைல வந்த தி.மு.க., தேர்தல் அறிக்கைத் தயாரிப்புக்குழுவோட கருத்துக்கேட்பு எப்படிப் போச்சுன்னு தெரியுமா?''
''மித்து... ஸ்டார் ஓட்டல்ல ஏற்பாடு பண்ணியிருந்தாங்க... எல்லாம் நல்லாத்தான் போச்சு...
''ஆனா... வந்தவங் களுக்கு குடிநீருக்குக் கூட ஏற்பாடு பண்ணலன்னு வருத்தமாம். மகளிரணியைச் சேர்ந்தவங்க பலரும், உட்கார சேர் இல்லாததுனால தவிச்சே போயிட்டாங்களாம்...''

''சித்ராக்கா... இந்த மாதிரி கஷ்டத்தையெல்லாம் அனுபவிக்காம, கட்சில பெரியாளா வரணும்ன்னு மட்டும் யோசிக்கலாமா?''
''ம்ம்... அதுவும் சரிதான்''

விழிபிதுங்கும் அ.தி.மு.க.,''சித்ராக்கா... லோக்சபா தேர்தல்ல, திருப்பூர்ல அ.தி.மு.க., சார்பில நிக்கறதுக்கு பலருக்கும் ஆசைதான். ஆனா, செலவை நினைச்சுத்தான் கலங்கிப்போறாங்களாம்...
''தொகுதிக்கு '20சி' வரைக்கும் செலவாகும். மாநில அரசியல்ல 'நீந்தலாம்'; தேசிய நீரோட்டத்துக்குப் போகணுமான்னு யோசிக்கறாங்களாம்...

''வேட்பாளரைப் பரிந்துரைக்கறதுக்கு விழிபிதுங்கறாங்களாம்''
''பசையுள்ள கட்சி நிர்வாகிகள கைகாட்டீட்டு, முன்னணி நிர்வாகிகள் வேடிக்கை பார்க்கறதா சொல்றாங்க...''

''பல மடங்கு சுளையா வருமானம் வந்தாதானே போட்டி போடறது பிடிக்கும். அ.தி.மு.க.,ன்னு இல்லே... எல்லா கட்சிலயும் இதுதானே யதார்த்தம் மித்து''

''ஆமாக்கா... நீங்க சொல்றது 100 பெர்சன்ட் கரெக்ட்... திருப்பூர்ல மின் வாரியத்துல முறைகேடுகள் நிறைய நடக்குது போல...''

''மித்து... ஒண்ணு... ரெண்டு முறைகேடு உடனுக்குடன் 'பிளாஷ்' ஆச்சுன்னா இப்படித்தான் நெனைக்கத் தோணும்...''

''சில மாசத்துக்கு முன்னாடி, அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் கூடுதலா மின்சாரம் பயன்படுத்திய நிறுவனத்தைப் பாதுகாக்க கூட்டுச் சேர்ந்து மின் மீட்டரை எரிச்சது அம்பலமாச்சு... பணியாளர் 'சஸ்பெண்ட்' ஆனதோட, நிறுவனத்துக்கு அபராதமும் விதிச்சாங்க...

''தென்னம்பாளையத்தில் உருவான, பூ மார்க்கெட்டுக்கு விதிமுறை மீறி இணைப்பு வழங்கியிருக்காங்க... அபராதம் விதிச்சாங்க...

''இப்ப, இறந்தவர் பெயர்ல இருக்கற மின் இணைப்பை, எவ்வித விண்ணப்பமும் செய்யாம, மாத்திக்கொடுத்து, இன்னொரு அலுவலர் சிக்கீட்டாரு... புதிய வீடு கட்ட, தற்காலிக இணைப்பே வாங்காம வீட்டு இணைப்பையே இடமாற்றம் செஞ்சு கொடுத்திருக்காரு...

''விதிமுறை மீறி செயல்படும் இதுபோன்ற ஒரு சிலரால, ஒட்டுமொத்த மின்துறைக்கும் அவப்பேருன்னு நேர்மையான அலுவலருங்களும், ஊழியருங்களும் புழுங்குறாங்களாம்''
மித்ராவின் குரலில் விரக்தி.

வராத ஒப்புகை கார்டுகள்''மித்து... திருப்பூர் பகுதி போஸ்ட் ஆபீஸ்கள்ல ஒப்புகையோட அனுப்புற பதிவு தபால்களுக்கான அக்னாலெஜ்மென்ட் கார்டு உரியவங்களுக்கு போய்ச் சேர்றதில்லையாம்...

''குறிப்பா... தமிழ்ல முகவரி எழுதற ஒப்புகை கார்டுகள் வந்து சேர்றதில்லையாம்...

''ஆன்லைன் வாயிலா ஒப்புகை கார்டு விவரங்கள் டிராக் செஞ்சாலும், குறிப்பிட்ட நாளுக்கு பின் டிராக் செய்ய முடியறதில்லையாம்...

''தலைமை தபால் ஆபீஸ்ல, தபால் பிரிக்கிற பணியில் ஈடுபடுற வடமாநிலங்களைச் சேர்ந்த ஊழியருங்க பலருக்கு தமிழ் தெரியாதுன்றதுதான் அக்னாலெஜ்மென்ட் கார்டு வராததுக்குக் காரணம்னு சிலரு சொல்றாங்க...

''ஆனா எது உண்மைங்கறதை, அதிகாரிங்க விசாரிச்சாதான் தெரியும்''

சித்ரா சொல்லி முடித்தாள்.

பட்டாவுக்கு வசூலா?''சித்ராக்கா... அவிநாசி பக்கம் இருக்கிற 'பாளையம்நம்பி' ஊராட்சில ஆதி திராவிடர் காலனி மக்களுக்கு பட்டா வழங்கியிருக்காங்க... ஆனா, ஆளும் கட்சிக்காரங்களுக்கும், ஒரு பட்டாவுக்கு குறிப்பிட்ட தொகையை வாங்கிக்கொண்டும் பட்டா வழங்குனதா வார்டு உறுப்பினர், வி.ஏ.ஓ., மீது புகார் எழுந்திருக்கு...

''சட்டசபை மதிப்பீட்டு குழுவினர் திருப்பூர் வந்தாங்கள்ல... 15 வேலம்பாளையத்தில கட்டிட்டு வர்ற அரசு மருத்துவமனையை பார்வையிட்டாங்க...பக்கத்துலதான் எம்.எல்.ஏ., அலுவலகம் இருக்கு... ஆனா அ.தி.மு.க., எம்.எல்.ஏ., விஜயகுமார் வரல... அவரு வர வேண்டிய அவசியமில்லதான... ஆனாலும் கட்சிப்பாகுபாடு பார்க்காம வந்திருக்கலாம். தன்னோட கருத்தையும் பதிவு செஞ்சிருக்கலாமேன்னு கட்சிக்காரங்களே சொல்றாங்களாம் மித்து...''

''அக்கா... குழுவுல வி.சி., எம்.எல்.ஏ., ஒருத்தரு இடம்பெற்றிருந்தாரு... ஆனா, அவருக்குத் துணையா ரெண்டு கார்ல உள்ளூர் கட்சிக்காரங்க வந்திருந்தாங்கன்னு சொல்றாங்க''

''அடடே... பரவால்லையே''

சித்ரா ஆச்சர்யப்பட்டாள்.

''மித்து... பொதுத்தேர்வு தொடர்பான ஆலோசனை, அறிவுறுத்தல்னா முன்கூட்டியே எல்லா ஸ்கூல் ெஹச்.எம்., - தாளாளர்களையும் அழைப்பாங்களாம். இந்த வருஷம் முந்தாநாள் இரவு 'மெசேஜ்' மட்டும் போட்டுட்டு மறுநாள் காலைல, அவசர கதில, 'மீட்டிங்'க நடத்தி முடிக்கிறாங்களாம்... இதனால ெஹச்.எம்., - தாளாளர்கள் புலம்புறாங்களாம்''

''சித்ராக்கா... திருப்பூர் மாவட்டத்துல புது எஸ்.பி., வந்த பிறகு இல்லாத சப்-டிவிஷன்களயும் தனிப்படை துவங்கியாச்சு... இதுல என்ன விஷயம்னா ஏற்கனவே உள்ள தனிப்படைல சில கருப்பு ஆடுகளும், கறைபடிஞ்ச கரங்களும் நிறைய இருக்கு. இவங்க, உயரதிகாரிகளுக்கு தெரியாம, அவங்க பெயர்ல சப்-டிவிஷனுக்கு உட்பட்ட ஸ்டேஷன்களில் தனி ராஜாங்கமே நடத்தறாங்களாம். இப்படிப்பட்டவங்கள களையெடுத்து புதியவங்கள நியமிக்கணும்... அப்பத்தான் தனிப்படை 'கூர்மை'யா ஈட்டி மாதிரி இருக்கும்...

''மித்து... நீ சொல்லியாச்சுல்ல... புது எஸ்.பி., அதப் பார்த்துக்குவாரு...''

''பேசி களைச்சுப்போச்சு... சூடா எதுனாச்சும் சாப்பிடணும்னு தோணுதுக்கா...''

''மித்து... பஜ்ஜி மாவு வாங்கி வச்சுருக்கேன்... அஞ்சே நிமிஷத்துல வாழைக்கா பஜ்ஜி ரெடியாயிடும்''

வாணலியில் எண்ணெய் கொதிக்கத் துவங்கியது.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement