Load Image
Advertisement

மொத்த வியாபார கடையில் சில்லரை விற்பனை கோயம்பேடு வியாபாரிகள் 16ல் சமரச கூட்டம்

சென்னை: கோயம்பேடு சந்தையில், மொத்த வியாபாரம் நடக்கும் கடைகளில் சில்லரை வியாபாரம் நடப்பதால், வியாபாரிகள் இடையே மோதல் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை தொடர்பாக, வரும் 16ம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாக, அங்காடி நிர்வாக குழு அதிகாரி இந்துமதி, வியாபாரிகளிடம் உறுதியளித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், மளிகைப் பொருட்கள் விற்பனை செய்வதற்கு தனித்தனியாக சந்தைகள் இயங்கி வருகின்றன.

இங்குள்ள காய்கறி சந்தையில், மொத்த விற்பனை செய்வதற்கு 196 கடைகளும், சிறு மொத்த வியாபாரம் செய்வதற்கு 1,940 கடைகளும் உள்ளன.

300 லாரிகள்



இதுமட்டுமின்றி சில்லரை வியாபாரத்திற்கு தனி கடைகளும், பொருட்களை பாதுகாக்க கிடங்குகளும் உள்ளன.

பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் இருந்தும் பலவகை காய்கறிகள், மஹாராஷ்டிராவில் இருந்து வெங்காயம் ஏற்றிய 300க்கும் மேற்பட்ட லாரிகள், அதிகாலை 2:00 மணி முதல் கோயம்பேடு சந்தைக்கு வரத்துவங்கும்.

அதிகாலை 4:00 மணி முதல், காய்கறி மொத்த வியாபாரம் துவங்கும்.

மொத்த வியாபாரிகளிடம் இருந்து காய்கறிகளை மூட்டை கணக்கில் வாங்கிச் செல்லும் சிறு மொத்த வியாபாரிகளும், சிறு வியாபாரிகளும், தங்கள் கடைகளில் வைத்து வியாபாரம் செய்வர்.

காலை 11:00 மணி வரை வியாபாரம் நடக்கும். மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளுக்கு வெளியே, சில்லறை வியாபாரமும் நடக்கிறது. இதற்கு மொத்த வியாபாரிகள் கட்டணம் வசூல் செய்கின்றனர்.

இதனால், சிறிய அளவில் மொத்த வியாபாரம் நடக்கும் கடைகளில், வியாபாரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

எதிர்ப்பு



எனவே, மொத்த வியாபாரம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ள கடைகளில், சில்லறை வியாபாரம் செய்ய அனுமதிக்கக் கூடாது என, எதிர்ப்பு எழுந்துள்ளது.

மேலும், மொத்த வியாபாரிகளின் செயலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக, சிறுமொத்த வியாபாரிகள் சங்கத்தினர் நேற்று முன்தினம் அறிவித்தனர். இதையடுத்து, மொத்த வியாபாரிகள் சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்பட்டதால், போராட்டம் கைவிடப்பட்டது. நேற்று நடந்த பேச்சுவார்த்தையில், கோயம்பேடு சந்தை வியாபாரிகள் கூட்டமைப்பு தலைவர் ராஜசேகரன், சிறுமொத்த வியாபாரிகள் சங்க தலைவர் முத்துகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இரு தரப்பிற்கும் உள்ள பிரச்னையை, அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, அங்காடி நிர்வாக குழு அதிகாரி இந்துமதியை, மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசினர்.

அப்போது அவர், கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பணியில் கவனம் செலுத்துவதால், வரும் 16 அல்லது 17ம் தேதி இப்பிரச்னை குறித்து பேச்சு நடத்துவதாக உறுதியளித்து உள்ளார்.

இதையடுத்து, பேச்சுவார்த்தையை முடித்துக் கொண்டு, இரு தரப்பினரும் புறப்பட்டுச் சென்றனர்.

அதிகாரிகள் வாயிலாக தீர்வு

கோயம்பேடு சந்தையில் உள்ள மொத்த விற்பனை கடைகளில் மட்டுமின்றி, கிடங்குகளிலும் சில்லரை வியாபாரம் அனுமதிக்கப்படுகிறது. இதனால், சிறுமொத்த வியாபாரிகள் நஷ்டத்திற்கு ஆளாகி வருகின்றனர். எங்கள் பிரச்னையை, கூட்டமைப்பு தலைவரிடம் தெரிவித்தோம். பிரச்னையை வியாபாரிகள் பேசி தீர்ப்பது, சட்ட ரீதியாக சரியாக இருக்காது. அதிகாரிகள் வாயிலாக பிரச்னைக்கு தீர்வு காணலாம் என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

- முத்துகுமார்

கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் சங்க தலைவர்

நீண்ட கால பிரச்னை

சிறு வியாபாரிகள் கோரிக்கை நியாயமானதாக உள்ளது. அதே நேரத்தில் சிறு வியாபாரிகளும், பல இடங்களில் மொத்த வியாபாரம் செய்வதாக, மொத்த வியாபாரிகள் கூறுகின்றனர். இந்த பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். சந்தையில் உள்ள சுகாதார பிரச்னைகளுக்கும் அங்காடி நிர்வாக குழு அதிகாரிகள் தீர்வு காண வேண்டும். இதற்காக,வியாபாரிகளை அழைத்து பேச வேண்டும்.

- தியாகராஜன்

கோயம்பேடு சந்தை காய்கறி, மலர்,பூக்கள் வியாபாரிகள் நலச்சங்க தலைவர்



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement