Load Image
Advertisement

சி.என்.பாளையத்தில் கும்பாபிஷேகம்

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் பொட்டவெளியில் உள்ள வெற்றிவிநாயகர், செல்லாத்தா அம்மன் சமேத முனீஸ்வரர், பாவாடைராயன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

அதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு முதல்கால யாக சாலை பூஜை, 11 ம் தேதி காலை 5:30 மணிக்கு கோ பூஜை, நாடிசந்தானம், இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. 9:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து யாகசாலையில் வைக்கப்பட்ட கலசங்கள் ஆலய உலாவாக வந்து, 9:30 மணிக்கு மூலவர் கோபுர கும்பாபிஷேம் நடந்தது. தொடர்ந்து பரிவாரமூர்த்திகளுக்கு நடந்தது.

விழா ஏற்பாடுகளை வைத்திலிங்கம் தலைமையிலான விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement