Load Image
Advertisement

‛ தண்ணி காட்டாதீங்க... : மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கொதிப்பு : சட்டசபையில் தி.மு.க., அறிவிச்சது என்னாச்சு

 l ADMKs anger in the corporation meeting l What DMK announced in the assembly   ‛ தண்ணி காட்டாதீங்க... : மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கொதிப்பு :  சட்டசபையில் தி.மு.க., அறிவிச்சது என்னாச்சு
ADVERTISEMENT
மதுரை: மதுரை மக்களுக்கு 2023 டிசம்பருக்குள் பெரியாறு கூட்டுக்குடிநீர் குழாய்கள் மூலம் விநியோகிக்கப்படும் என சட்டசபையில் அமைச்சர் நேரு அறிவிச்சும் இதுவரை வந்து சேரவில்லை. எப்போது மதுரை மக்களுக்குகுடிநீர் கிடைக்கும் என மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் அ.தி.மு.க., 4வது முறையாக கேள்வி எழுப்பியது

இக்கூட்டம் மேயர் இந்திராணி பொன்வசந்த், கமிஷனர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. மேயர் 'சிறப்பாக பணியாற்றிய முன்னாள் கமிஷனர் மதுபாலனுக்கு நன்றியும், புதிதாக பொறுப்பேற்ற தினேஷ்குமாருக்கு வாழ்த்தும்' தெரிவித்து பேசினார். பின் கவுன்சிலர்கள் பேசியதாவது:

வாசுகி, மண்டலம் 1 தலைவர்: பல வார்டுகளில் காவிரி கூட்டுக் குடிநீர் சரிவர வினியோகம்இல்லை. கோடை காலம் நெருங்குவதால் கவனம் செலுத்த வேண்டும். பாதாள சாக்கடை பிரச்னை இன்னும் தீர்ந்தபாடில்லை. கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. கொசு மருந்து தெளிக்கும் வாகனம் இல்லை.

மாநகராட்சி பட்ஜெட்டில் கவுன்சிலர்களுக்கான வார்டு நிதியாக கூடுதலாக ரூ.10 லட்சம் ஒதுக்க வேண்டும்.

மேயர்: கொசு மருந்து தெளிக்க தேவையான வாகனங்கள் அனுப்பப்படும். கூடுதல் நிதி ஒதுக்கீடு சாத்தியம் குறித்து பரிசீலிக்கப்படும்.

சரவணபுவனேஸ்வரி, மண்டலம் 2 தலைவர்: இம்மண்டலத்திற்குட்பட்டு பிரதான அரசு அலுவலகங்கள், வி.ஐ.பி.,க்கள் வருகை அதிகம் உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் தேவையான பணியாளர்கள் நியமிக்க சிறப்பு அனுமதி வேண்டும்.

வீடுகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைக்கும்போது பல வீடுகள் வரிவிதிப்பின் கீழ் வரவில்லை. அங்கு இணைப்பு எவ்வாறு வழங்குவது. சிறப்பு வரிவிதிக்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேயர்: கூட்டத்தில் பேசப்படும் பொருள் குறித்து முன்கூட்டியே உறுப்பினர்கள் தெரிவித்தால் உரிய பதில் அளிக்க முடியும்.

முகேஷ்சர்மா, மண்டலம் 4 தலைவர்: அனைத்து வார்டுகளிலும் தெருவிளக்குகள் போதிய எண்ணிக்கையில் இல்லை.

ஒவ்வொரு வார்டுக்கும்தலா 20 விளக்குகள் புதிதாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். மாற்று மின்மோட்டார் வசதி இல்லை. வண்டிகள் இல்லாததால் குப்பை தேங்குகின்றன. உறுப்பினர்கள் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதில்அளிக்க வேண்டும்.

மேயர்: உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

சுவிதா, மண்டலம் 5 தலைவர்: வார்டுகளுக்குள் துப்புரவுப் பணியாளர்கள் சரிவர வருவதில்லை. பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னை, குப்பை சேகரிக்கும் டிராக்டர் பற்றாக்குறை பிரச்னை உள்ளது.

மேயர்: மண்டலத்துக்கு தலா ஒரு டிராக்டர் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

சோலைராஜா, அ.தி.மு.க., எதிர்க்கட்சி தலைவர்: நகரில் பிரதான 13 கால்வாய்கள் துார்வார வேண்டும் என்ற கோரிக்கைக்கு அதிகாரிகள் தொடர்ந்து மழுப்பலாக பதில் அளிக்கின்றனர். இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் மாநகராட்சி அளித்துள்ள பதிலில் முரண்பாடு உள்ளது.

அதிகாரிகள் அரைகுறை பதிலால் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர். 2011 முதல் துார்வார செலவிட்ட தொகை குறித்த விவரம் வெளியிட வேண்டும்.

ரூபன் சுரேஷ், தலைமை பொறியாளர்: கேள்விகளுக்கு உரிய பதில்கள் அளிக்கப்பட்டுள்ளன.

சோலைராஜா: தத்தனேரி மயானத்தில் இறந்தவரின் அஸ்தி மாற்றிக்கொடுக்கப்பட்டுள்ளது என தி.மு.க., கவுன்சிலர் ஜெயராம் புகார் அளித்தார். அதுகுறித்து விசாரிக்கப்பட்டதா.

சரவணன், துணை கமிஷனர்: மயானம் பராமரிப்பில்குறைபாடுகள் இருந்தது உண்மை. அவை சரி செய்யப்பட்டன. தவறு செய்த தனியார் நிறுவனம் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அஸ்தி மாற்றிக்கொடுக்கப்படவில்லை.

கார்த்திகேயன், காங்.,: கே.கே.நகர் 80 அடி ரோட்டில் காம்ப்ளக்ஸ் நிறுவனங்களுக்கு போதிய பார்க்கிங் வசதி இல்லை. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

கோமதிபுரம், யாகப்பா நகரில் தனியார் நிறுவன தண்ணீர் லாரிகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதால் புதிய ரோடுகள் சேதமடைகின்றன. குடியிருப்பு மக்களுக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இவ்வாறு விவாதம் நடந்தது.எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா பேசுகையில், மதுரை மக்களுக்கு குழாய்மூலம் பெரியாறு கூட்டுக் குடிநீர் 2023 டிசம்பரில் கிடைத்துவிடும் என அமைச்சர் நேரு சட்டசபையில் அறிவித்தார். ஆனால் வரவில்லை. மூன்று முறை மாநகராட்சி கூட்டத்தில் அ.தி.மு.க., கேள்வி எழுப்பியது. ஜன., 15க்குள் குடிநீர் வந்துவிடும் என முன்னாள் கமிஷனர் மதுபாலன் உறுதியளித்தார்.

அப்போதும் வரவில்லை. எப்போது தான் பணிகள் முடியும். குடிநீர் எப்போது வரும். கோடை காலம் துவங்கவுள்ளதால் குடிநீர் எப்போது கிடைக்கும் என சரியாக சொல்லுங்கள் என்றார். அதற்கு தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், இன்னும் ஒருவாரத்தில் பணிகள் முடிவடைந்து விடும். குடிநீர் வந்துவிடும் என்றார்.மண்டல தலைவர் முகேஷ்சர்மா பேசுகையில்,கிருதுமால், பனையூர் கால்வாய்களை துார்வாராததால் மண் மேடுகளாகி பாதாளச் சாக்கடை இணைப்புகளில் அடைப்பு ஏற்பட்டு தொடர் பிரச்னையாகிறது. பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லை. கால்வாய் மண் மேடுகளில் முருங்கை மரம் நட்டி அதில் காய்களும் காய்ச்சு பிடிங்கியாச்சு... என அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை நகைச்சுவையாக சுட்டிக்காட்டி பேசினார்.இதனால் கூட்டத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement