Load Image
Advertisement

கிரிக்கெட் சங்க ஊழல்: பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்

Cricket Association Scam: Enforcement Directorate Summons Farooq Abdullah   கிரிக்கெட் சங்க ஊழல்: பரூக் அப்துல்லாவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ADVERTISEMENT
புதுடில்லி: கிரிக்கெட் சங்க ஊழலில் நடந்த பண மோசடி தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா நாளை ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசியமாநாட்டு கட்சி மூத்த தலைவருமான பரூக் அப்துல்லா, இவர் தனது பதவி காலத்தில் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தில் முக்கிய பொறுப்பிலிருந்த போது பல்வேறு நிதி முறைகேடும் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் சங்க நிதியை தனது வங்கி கணக்கில் வரவு வைத்ததாக தெரியவந்தது. இது தொடர்பாக நடந்துள்ள பணமோசடி வழக்கில், பரூக் அப்துல்லாவிற்கு கடந்த ஜன.11ல் ஆஜராக சம்மன் அனுப்பியது. பரூக் அப்துல்லா ஆஜராகவில்லை. இதையடுத்து ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நாளை (பிப்.13) ஆஜராக இரண்டாவது சம்மன் அனுப்பியுள்ளது.


வாசகர் கருத்து (9)

  • N.Purushothaman - Cuddalore,மலேஷியா

    சங்க பணத்தை அவரோட கணக்குல வரவு வச்சது தப்பா ? இது சமூக நீதிக்கு எதிரானது... மத்திய அரசு காழ்ப்புணர்ச்சியுடன் இதை செய்கிறது ...இப்படிக்கு விடியாத ஆட்சியின் முடியாத முதல்வர் ....

  • naranam - ,

    அப்பன் வீட்டுப் பணம் என்ற நினைப்பில் திருடி விட்டாரோ?

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தமிழகத்தில் இப்ப உள்ள விளையாட்டுத்துறை அமைச்சர், அந்த துறையில் என்ன என்ன ஊழல் செய்திருக்கிறார் என்று இப்பவே கண்டுபிடித்து தண்டிக்கவேண்டும். பாரூக் போல வயது ஆச்சுன்னா, ஊழல் அதிகமாகும்.

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    விளையாட்டிலும் ஊழல் செய்திருக்கிறாரா...?

  • ganesha - tamilnadu,இந்தியா

    இதுதான் டா ராமர் 😂🤣😂

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்