Load Image
Advertisement

ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு

Jharkhand Chief Minister Hemant Sorans Enforcement Directorate custody extended by 3 more days   ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிப்பு
ADVERTISEMENT
ராஞ்சி: நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், நில அபகரிப்பு வழக்கில் ஜன., 31ல் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதனால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அவரது அமைச்சரவையில் இருந்த சம்பாய் சோரன் முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்நிலையில் ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவடைந்தது. அவர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஞ்சியில் உள்ள பணமோசடி தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

ஹேமந்த் சோரனின் அமலாக்கத்துறை காவல் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையே அமலாக்கத்துறைக்கு எதிராக ஹேமந்த் சோரன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் 27ம் தேதிக்கு ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.


வாசகர் கருத்து (4)

  • VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா

    இப்போதெல்லாம் அரசியல்வாதிகள் வெட்கமே இல்லாமல் இருக்கிறார்கள்

  • hariharan -

    உண்மையை சொல்லவில்லையென்றால் வெளிய வரமுடியாது, மாப்ளே. நம்ம அமைச்சர் மாதிரி உள்ளேயே இருக்க வேண்டியதுதான்.

  • அப்புசாமி -

    தடையம், துப்பு எதுவும் இல்லாமல்.சம்மன் அனுப்பி வரலேன்னா கைது செய்வாங்க. அப்புறம்நாலஞ்சு முறை காவலை நீட்டி கடைசில அவர் ஒத்துழைக்கலைன்னு சொல்லி சங்கு கேசுக்கே ஊதிருவாங்க.

  • கண்ணன்,மேலூர் -

    இப்பதான் கெஜ்ரிவாலுக்கு அடிவயிற்றில் லேசாக பயம் ஏற்பட்டு இருக்கும்

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement
Headphone

வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்